உலகிலேயே மிகப்பெரும் கார்ப்பரேட் முதலாளியாக உருவெடுத்து வருகின்ற திருவாளர் எலான் மஸ்க் டெஸ்லா என்ற நிறுவனத்தையும், ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் என்பதை அறிவோம்.
சமீபத்தில் இவர் ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக விண்கலத்தை ஏவுகின்ற ஏவுகணைகள் மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்புவதை ஒரு சாதனையாக நிகழ்த்திக் காட்டினார் என்பதிலிருந்து விண்வெளி ஆராய்ச்சி பற்றி இவரது நிறுவனம் உலக அளவில் முக்கியத்துவத்தை பெறுகின்றது.
இதே எலான் மஸ்க் சமீபத்தில் இலவச தகவல் இணையமான விக்கிப்பீடியா பற்றி கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதாவது, ”விக்கிபீடியா நிறுவனத்தை நடத்துகின்ற முக்கியமான நிறுவனங்களில் ஆறு பேர் தீவிர இடதுசாரிகள் என்பதால் விக்கிபீடியாவிற்கு தருகின்ற நன்கொடைகளை அளிக்காதீர்கள்” என்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். இது எந்த அள்வு உண்மை என்பது பரிசீலிக்கத்தக்கது.
தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்லாயிரம் கோடி கொள்ளையடிப்பதற்கு தயாராகி வருகின்ற பிக் டெக் நிறுவனங்கள் இலவசமாக தகவல்களை கொடுப்பதை பற்றி மிகவும் வேதனை தெரிவிக்கின்றன.. இதை புரிந்து கொள்ளும் வகையில் சொன்னால், ”ஆற்றில் ஓடுகின்ற நீரை பார்த்து ஐயோ பல்லாயிரம் கோடி இலவசமாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்று வெறித்தனமாக கூச்சலிடுகின்ற முதலாளிகளை போன்ற சிந்தனை கொண்டவர்கள் தான் இத்தகைய பிக் டெக் நிறுவனங்கள்.
எலன் மஸ்க் விக்கிபீடியா மீது ஆத்திரம் அடைவது பற்றி புரிந்துக் கொள்ள சுருக்கமாக விக்கிபீடியா பற்றி புரிந்து கொண்டால் அதனுடைய தேவை அவசியம் பற்றி நாம் தெளிவடைய முடியும்.
விக்கிப்பீடியா என்பது ஒரு ஆன்லைன் இலவச, உள்ளடக்க கலைக்களஞ்சியமாகும். இது அனைவரும் சுதந்திரமாகப் பகிரக்கூடிய மற்றும் கிடைக்கக்கூடிய அனைத்து அறிவையும் அணுகக்கூடிய உலகத்தை உருவாக்க உதவுகிறது. இது விக்கிமீடியா அறக்கட்டளையால் ஆதரிக்கப்படுகிறது மற்றும் சுதந்திரமாக திருத்தக்கூடிய உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. விக்கிபீடியா என்ற பெயர் கூட்டு இணையதளங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் மற்றும் கலைக்களஞ்சியம் ஆகியவற்றின் கலவையாகும்.
விக்கிபீடியாவின் கட்டுரைகள் மேலும் தகவலுடன் தொடர்புடைய பக்கங்களுக்கு வாசகர்களுக்கு வழிகாட்டும் இணைப்புகளை வழங்குகின்றன. விக்கிப்பீடியா பெரும்பாலும் பிரபலமில்லாத பல்வேறு தன்னார்வலர்களால் இணைந்து எழுதப்படுகிறது. இணைய அணுகல் மற்றும் தகவல் தொடர்பு பற்றிய புரிதல் உள்ள எவரும் விக்கிப்பீடியா கட்டுரைகளை எழுதலாம் மற்றும் மாற்றங்களைச் செய்யலாம்.
20 கோடி ட்விட்டர் பயனர்களின் தரவுகள் திருட்டு! ஹேக்கர்களின் கைவரிசையா?
இந்த இணையம் 15-01-2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து உலகின் மிகப்பெரிய குறிப்பு இணையதளமாக வளர்ந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி மாதந்தோறும் 1,800,000,000 தனிப்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கிறது. சுமார் 124,404 செயலில் உள்ள பங்களிப்பாளர்களுடன் ஆங்கிலத்தில் 6,496,282 கட்டுரைகள் உட்பட, தற்போது 300 க்கும் மேற்பட்ட மொழிகளில் 58,000,000-க்கும் அதிகமான கட்டுரைகள் விக்கிபீடியாவில் உள்ளன.
மேலும் இதில் பங்களிப்பதற்கு பரிச்சயம் தேவையில்லை. வார்த்தைகள், குறிப்புகள், படங்கள் மற்றும் பிற மீடியாவைச் சேர்க்க அல்லது திருத்த எவரும் அனுமதிக்கப்படுவார்கள். யார் பங்களிக்கிறார்கள் என்பதை விட என்ன பங்களித்தது என்பது முக்கியம். தொடர்ந்து இருக்க உள்ளடக்கமானது பதிப்புரிமைக் கட்டுப்பாடுகள் மற்றும் வாழும் மக்களைப் பற்றிய சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். இது தொடர்ந்து உருவாக்கப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது, புதிய நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் மாதங்கள் அல்லது வருடங்களை விட நிமிடங்களில் தோன்றும். எல்லோரும் அதை மேம்படுத்த உதவ முடியும் என்பதால், இது மற்ற கலைக்களஞ்சியத்தை விட விரிவானதாக மாறியுள்ளது.
விக்கிப்பீடியா ஆன்லைன் ஊடக நிறுவனமான Bomis ஆல் தொடங்கப்பட்ட இலவச கலைக்களஞ்சியத்தை தயாரிப்பதற்கான இப்போது கைவிடப்பட்ட ஒரு திட்டமான Nupedia இன் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது. Nupedia விற்கு அதிக தகுதி வாய்ந்த பங்களிப்பாளர்கள் தேவைப்படுவதாலும், விரிவான சக மதிப்பாய்வு அமைப்பு இருந்ததாலும், அதன் உள்ளடக்கம் மெதுவாக வளர்ந்தது.
2000 ஆம் ஆண்டில், Nupedia வின் நிறுவனர் மற்றும் Bomis இன் இணை நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் மற்றும் வேல்ஸ் திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட லாரி சாங்கர் ஆகியோர், Nupedia வை மேலும் திறந்த, நிரப்பு திட்டத்துடன் இணைப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர். பல ஆதாரங்கள் விக்கி பொது உறுப்பினர்களுக்கு பொருள் வழங்க அனுமதிக்கலாம் என்று பரிந்துரைத்தது, மேலும் Nupedia வின் முதல் விக்கி 10-01-2001 அன்று ஆன்லைனில் வந்தது.
Nupedia வின் ஆசிரியர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கணிசமான எதிர்ப்புகள் அதை விக்கி வடிவ வலைத்தளத்துடன் இணைக்க வேண்டும். எனவே சாங்கர் புதிய திட்டத்திற்கு விக்கிபீடியா என்ற பெயரைக் கொடுத்தார். மேலும் இது 15-01-2001 அன்று அதன் சொந்த Wikipedia.com டொமைனில் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் விக்கிபீடியாவுக்கு எதிராக ஏற்கனவே எலான் மாஸ்க் ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்புக்கொண்டால் அதன் பெயரை ’டிக்கிபீடியா’ என்று மாற்றலாம் என்று நக்கலடித்து தகவல் வெளியிட்டு இருந்தார். அதாவது சமகாலத்தில் பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் நடத்துகின்ற பயங்கரவாத போர் குறித்தும், பல்வேறு நாடுகளில் அமெரிக்கா நுழைந்து ஆதிக்கம் செய்ய துடிப்பதை பற்றியும் விமர்சித்து விக்கிபீடியாவில் சில கட்டுரைகள் வருகிறது என்பதால் ஆத்திரமடைந்துள்ள எலான் மாஸ்க் இவ்வாறு கூறியுள்ளார்.
பிறருக்கு செய்யும் சேவை அனைத்தையும் காசாக மாற்ற வேண்டும் என்ற கேடுகெட்ட ஏகாதிபத்திய முதலாளித்துவ கொள்கையின் பகிரங்கமான வெளிப்பாடுதான் எலான் மாஸ்க் முன் வைத்துள்ள கோரிக்கை என்பதால் இதனை இடது கையால் நிராகரிப்போம். இலவசமாக தகவல்களை பெறுகின்ற உரிமையை விக்கிபீடியா மூலமாகவும், வேறு இணையதளங்களில் மூலமாகவும் பெறுவோம்.
மனிதர்களின் பல்வேறு விதமான தரவுகளைத் திரட்டி கொள்ளையடிக்க துடிக்கும் பிக் டெக் கார்ப்பரேட்டுகளின் டேட்டா மைனிங், கிளவுட் மவுண்ட் போன்ற பிக் டேட்டா தியரியை எதிர்த்துப் போராடுவோம்.
முகம்மது அலி.