தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துள்ளதாகவும், திமுக அதனை தடுக்க வக்கற்று உள்ளதாகவும் கூறி பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (21.02.2023) உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக பிரமுகரால் இராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளார். அதனை கண்டித்து தான் போராட்டம் அறிவித்துள்ளனர். நாட்டுக்காக போராடும் இராணுவ வீரனுக்கு நீதி கேட்கும் அளவுக்கு அண்ணாமலையோ, பாஜக சங்கிகளோ நேர்மையானர்களா?
தமிழ்நாட்டில் பாசிஸ்டுகளால் மட்டும் நடந்துள்ள படுகொலைகளுக்கும், குற்ற செயல்களுக்கும் பதில் சொல்ல துப்புள்ளதா அண்ணாமலைக்கு?
நேற்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் பெரியார், மார்க்ஸ் படம் வைத்திருந்ததற்காக ABVP குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்கள். இதனை கண்டித்து போராட்டம் நடத்துவாரா அண்ணாமலை?

அரச பயங்கரவாதத்தால் கொண்டு வரப்பட்ட சட்டங்களால் (நீட் உட்பட) தினம் செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவாக போராடாத, கேள்வி கேட்க திராணியில்லை. தமிழக அரசால் சட்டம் இயற்றப்பட்டு, ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள ஆன்லைன் ரம்மியால் பலர் கொல்லப்படுகிறார்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாத அண்ணாமலையும், பாஜக சங்கிகளும் சேர்ந்து நடத்தும் நாடகமே உண்ணாவிரதம்!
இதனை அம்பலப்படுத்தி தோழர் மகாராஜன், புஜதொமு பேசியுள்ள வீடியோவை பாருங்கள்… பகிருங்கள்…