னித குலத்தின் தேவைக்கேற்ப பொருள் உற்பத்தி முறை மாற்றம் அடையும்போது நவீன விஞ்ஞான கருவிகளைக் கொண்டு தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் சுலபமான வழிமுறைகளை கையாள்கிறது. மனித குலத்தின் தேவைகளை முன்னறிந்து அந்தத் தேவைகள் ஒவ்வொன்றையும் காசாக்குகின்ற வித்தையை ஏகாதிபத்திய முதலாளித்துவம் நுட்பமாக கையாண்டு சுரண்டலில் வெறித்தனமாக முன்னேறி வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள மனிதர்களின் எண்ணிக்கை மட்டுமின்றி விலங்குகள், தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள், கண்ணுக்கு புலனாகாத பல்வேறு வகையான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் துவங்கி விவசாயத்திலிருந்து ராணுவ தளவாட உற்பத்தி வரை அனைத்தையும் தரவுகளாக திரட்டி வைத்துக் கொண்டு உலகை கட்டுப்படுத்த நினைக்கின்றன நிதி மூலதன ஏகபோக கும்பல்களான கார்ப்பரேட்டுகள்.

இந்தக் கார்ப்பரேட்டுகளிலேயே புதிய வகையில் உலகை கட்டுப்படுத்துகின்ற டேட்டா சயின்ஸ் என்ற பெயரில் தரவுகளை திரட்டி வைத்துக்கொண்டு அதனை தேவையானவர்களுக்கு, தேவையான நேரத்தில் விற்பனை செய்கின்ற தரவுகள் திரட்டு மையங்கள் என்று அழைக்கப்படும் டேட்டா சென்டர்கள் தான் தற்காலத்தில் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது.

உலகின் மேல்நிலை வல்லரசாக தன்னை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்ற அமெரிக்கா தன்னுடைய நாட்டில் மட்டும் 5381 தரவு திரட்டு மையங்களை வைத்துக் கொண்டுள்ளது.

தரவுகள் திரட்டு மையங்கள்

தரவு திரட்டு மையம் என்றால் என்ன என்பதை பற்றி சுருக்கமாக புரிந்து கொண்டால் ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளுற்பத்தி முறைக்கும், இத்தகைய நவீன தொழில்நுட்பங்களுக்கும் உள்ள உறவை நம்மால் கண்டறிய முடியும்.

தரவுகளை திரட்டி வைத்துக் கொள்வது என்பது 1940 வாக்கில் ராணுவத்திற்கு தேவையான தரவுகளை திரட்டி வைப்பதற்கு பொருத்தமான மிகப்பெரிய அளவிலான கம்ப்யூட்டர்கள் முதலில் தரவு திரட்டு மையங்களாக உருவெடுத்தன. அதன் பிறகு மைக்ரோ கம்ப்யூட்டர்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட பிறகானது 1980களில் தரவுகளைத் திரட்டி வைப்பதற்கு பெரிய இடத்தை அடைகின்ற வகையிலான கம்ப்யூட்டர்கள் மாறி ஒரு அறைக்குள்ளேயே மிகப்பெரிய அளவிற்கு தரவுகளை சேமித்து வைக்கக்கூடிய நவீன கம்ப்யூட்டர்கள் தரவு மையங்களாக மாறின.

1997 க்கும் 2000-க்கும் இடையில் ஏற்பட்ட டாட் காம் நெருக்கடி என்ற  பிரச்சனை Y2K கம்ப்யூட்டர் தரவு மையங்களின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்தது என்பது மட்டுமின்றி திடீரென இத்தகைய கருவிகள் அனைத்தும் செயலிழந்து போகும் என்ற மிகப்பெரும் அபாயத்தை உருவாக்கியது. ஆனால் அதிலிருந்து ஒரு வழியாக மீண்டும் பிறகு 2010 வாக்கில் கிளவுட் டேட்டா சென்டர் (CDC) என்ற முறையில் உருவாகியுள்ள அதிநவீன முறையிலான தரவுகள் சேகரிப்பு& தரவுகள் திரட்டு மையங்கள் தான் தற்போது உலகில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளன.


படிக்க: விக்கிபீடியாவுக்கு நன்கொடை தராதே! தரவுகளை காசாக்கும் பிக் டெக் கார்ப்பரேட்டுகளை ஆதரி! எலான் மாஸ்க் கொட்டம்.


தரவுகளை திரட்டி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களின் காரணமாக 2020-ல் 64.25 ஜெட்டா பைட் கொண்ட தரவுகள் திரட்டு மையங்கள் 2025 ஆண்டில் 180 ஜெட்டா பைட் கொண்டதாக அதிகரிக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையெல்லாம் வைத்து மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான சண்டை மாறி மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்குமான சண்டை முன்னிலை வகிக்கும் என்றெல்லாம் கற்பனையின் கீழ் சைபர்வாசிகள் பேசவும், எழுதவும் துவங்கிவிட்டனர். தனக்குத் தெரிந்த தகவல் தொழில்நுட்ப அறிவை வைத்துக் கொண்டு மிரட்டலாக எழுதி அதையும் காசாக்குவது என்று ஒரு கும்பல் கிளம்பி உள்ளது.

இத்தகைய சூழலில் சென்னை இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தரவுகள் திரட்டு மையமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

சென்னையில் தற்போது டேட்டா சென்டர் வர்த்தகத்தில் CtrlS டேட்டா சென்டர்கள், வெப் வேர்க்ஸ், டயோட்டா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் அதானி என்டர்பிரைசஸ் ஆகியவை டேட்டா சென்டர் நிறுவனங்களாக உள்ளது. இந்த நிலையில் அடுத்த 2 வருடத்தில் 1.54 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் இத்துறையில் வரும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவில் வரும் மொத்த டேட்டா சென்டர் முதலீடுகளில் சுமார் 27 சதவீதமாகும்.


படிக்க: தரவுகள் திரட்டு – கண்காணிப்பு  உளவு!ஏகாதிபத்தியங்களின் புதிய பயங்கரவாத தாக்குதல்!!


சென்னையின் டேட்டா சென்டர் வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய காரணிகளாக இருப்பது நிலையான மின்சார சப்ளை, தேவைக்கு அதிகமாக திறன் வாய்ந்த ஊழியர்கள் படை, அரசின் கொள்கைகள், ஆறு கேபிள் லேண்டிங் நிலையங்கள் இருப்பது மூலம் உலகளாவிய நெட்வொர்க்குகளுடன் வலுவான இணைப்பை வழங்குகிறது.

இன்றைய டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கு முக்கிய தேவையாக இருக்கும் டேட்டா சென்டர் தேவையில் நாட்டின் மொத்த தேவையில் பெரும் தேவையைச் சென்னை பூர்த்தி செய்கிறது என்றால் மிகையில்லை. சுமார் 88 MW திறன் கொண்ட டேட்டா சென்டர் கட்டமைப்பு சென்னையில் உள்ளது.

சென்னையில் சிறுசேரி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் இயங்குகின்ற தரவு சேகரிப்பு மையங்கள் மிகப்பெரும் அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்ற அதே சமயத்தில் பல்வேறு தரவுகளை சேகரித்து வைத்துக் கொண்டு மிகப் பெரும் அளவில் கல்லா கட்டுகின்ற நிறுவனங்களாகவும் மாறியுள்ளது.

தரவுகளை திரட்டி வைத்துக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் அத்தகைய தரவுகளை தேவையானவர்களுக்கு தகவல்களாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே திருடிக் கொடுத்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை சுருட்டி வருகின்றன என்பது தனியாக விவாதிக்க வேண்டிய அம்சமாகும்.

இத்தகைய சூழலில் தரவுகளை யார் திரட்டி வைத்திருக்கிறார்களோ அவர்களே உலகின் மிகப்பெரும் வல்லரசு மற்றும் மிகப்பெரும் கார்ப்பரேட் என்று வரையறுக்கப்பட்டுள்ளதை நோக்கி மெல்ல ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையும், ஏகபோக நிதி மூலதன ஆதிக்க சக்திகளும் வளர்ந்து கொண்டுள்ளன என்பதை கணக்கில் கொண்டு பாட்டாளி வர்க்கம் செயல்பட வேண்டிய காலகட்டம் இதுதான்.

  • மருது பாண்டியன்.

1 COMMENT

  1. தரவுகள் திரட்டும். தகவல்கள் திருட்டும்!நவீன சுரண்டல் வடிவம். கட்டுரை மிக சிறப்பாக இருந்தது அமெரிக்காவில் அதிகளவில் தகவல் திரட்டுகளை சேகரித்து வைத்துள்ள இடமாக உள்ளது என்பதை என்ற தகவலையும் அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் சென்னையில் தான் தகவல் சேகரிக்க மையம் உள்ளது இந்த தகவல் சேகரிப்பு மூலமாக நவீன முறையில் எப்படி சுரண்டுகிறார்கள் என்பதை எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் கடல் பாசிகள் கண்ணுக்குத் தெரியாத பல்ல நுண்ணுயிரி பேக்டீரியாக்கள் சேகரித்து வைத்துள்ளார்கள் என்ற தகவல்களும் ராணுவத்தில் இருந்து விவசாயத்துக்கு பயன்படும் அனைத்து வகையான நவீன கருவிகள் பற்றிய தரவுகளை கம்ப்யூட்டர் பயன்பாடு படிப்படியாக வந்த கம்ப்யூட்டர்களை பின்னுக்கு தள்ளி நவீன முறையில் வந்து அடைந்துள்ள டேட்டா சைன்ஸ் தகவல் சேகரிக்கப்படுகிறது என்ற தகவலும் சேகரித்து பல லட்சம் கோடி ரூபாய் ஆதாயம் அடையும் அளவில் ஒரு நவீன சுரண்டலாக பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here