அதிகமில்லை ஒரு வருடத்திற்கு முன் நடந்த சம்பவம் தான்..
கடந்த 2022 ஜனவரி மாதம் 19-ம் தேதி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற 17 வயது மாணவி,விஷமருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார்.
தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகில் இருக்கும் மைக்கேல் பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி அவர். 163 ஆண்டுகளாக இயங்கி வரும் பள்ளி அது.
அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது விசுவ ஹிந்து பரிசத் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் முத்துவேல் என்பரால் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ,19-ம் தேதியே சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது.
அதன் பிறகு, மாணவி லாவண்யாவின் இறப்பிற்கு காரணம் மதமாற்ற நிர்பந்தமே என தமிழக பிஜேபியினர் இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
ஒரு நாள் இரண்டு நாளல்ல.. வாரக்கணக்கில் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்துகின்றனர். எவ்வளவு மோசமாக தமிழ்நாட்டை சித்தரிக்க முடியுமோ அந்தளவு செய்கின்றனர்
29-01-22 ம் தேதி இந்த விவகாரத்தை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) கையில் எடுக்கிறது.
தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் விளக்கம் கேட்கவில்லை..மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கவில்லை. என்னென்ன செய்யப்போகிறோம் என்பதை மட்டும் கடிதமாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் அனுப்புகிறார்கள்.
NCPCR -ன் உண்மைக்கண்டறியும் உறுப்பினர்கள் வந்தார்கள்..ஆய்வு நடத்தினார்கள்..சென்றார்கள்.. அதன் பிறகு என்ன ஆச்சு.. ஒருவருக்கும் தெரியாது..
இதை எதற்கு இப்போது குறிப்பிடுகிறேன் என்றால் ! தமிழ்நாட்டில் நடக்கும் மதம் மாற்றத்தால் அப்பாவி ஹிந்து சிறுமி தற்கொலை செய்து அநியாயமாக இறந்துவிட்டாள் என்பது தான் தமிழ்நாடு பிஜேபி முன்வைத்த குற்றசாட்டு..
ஆனால்,, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் ரிப்போர்ட் என்ன சொல்கிறது தெரியுமா ?
அப்படி எதுவுமே நடக்கவே இல்லை என்றது இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் பள்ளிகளில் குழந்தைகள் மதரீதியாக பாதிக்கப்பட்டதாக 25 புகார்கள், மதவெறுப்பால் பாதிக்கப்பட்டதாக 20 புகார்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக 100 புகார்கள் மட்டுமே பதிவானதாக NCPCR தெரிவிக்கிறது
கடந்த 7 ஆண்டுகளில் நாடு முழுவதும் 61 உண்மைகண்டறியும் ஆய்வுகளை NCPCR மேற்கொண்டுள்ளது அதில் தமிழ்நாட்டில்,
POCSO Wing-2
Legal Wing -1
Health Wing-1 என 4 ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் மதமாற்ற துன்புறுத்தலால் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக ஒரே ஒரு புகார் கூட பதிவாகவில்லை என NCPCR தெளிவுபடுத்துகிறது விஷயம் இதோடு முடியவில்லை…
எந்த வீடியோவை வெளியிட்டு தமிழ்நாட்டில் மதமாற்ற கொடுமையால் ஹிந்து சிறுமி இறந்துவிட்டால், அதற்கான நீதி வேண்டும் என்று போராடினார்களோ அந்த வீடியோவை எடுத்தவர் விஸ்வ ஹிந்து பரிக்ஷத்தின் மாவட்ட பொறுப்பாளர் முத்துவேல். அவர் மீது 25 லட்சம் பணம் பறிக்க முயற்சித்து மிரட்டினார் என்று அரியலூர் லூர்து ஆலய பங்குத்தந்தை டோம்னிக் சேவியோ கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியலூர் காவல்நிலையத்தில் 13-03-23 அன்று வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
அதாவது, ஒரு பள்ளிச் சிறுமியின் மரணத்தை வைத்து பணம் பறிக்க திட்டமிட்டது மட்டுமின்றி மரணப்படுக்கையில் இருந்த சிறுமியிடம் வீடியோ வாக்குமூலம் எடுத்து,, அந்த குழந்தை சாகும்வரை காத்திருந்து அதன் பின்னர் அந்த வீடியோவை வெளியிட்டு அரசியல் செய்துள்ளனர்.
இப்படி ஒரு அரசியலை யாராவது செய்வார்களா ? செய்யவே மாட்டார்கள்
சரி…செய்து விட்டனர் போய் தொலைகிறது கையும் களவுமாக மரணப்படுக்கையில் கிடந்த மாணவியிடம் வீடியோ எடுத்து, அதை வைத்து பணம் கேட்டு மிரட்டிய விஸ்வ ஹிந்து பரிக்ஷித் நிர்வாகிக்கு குறைந்த பட்சம் கண்டனமாவது தெரிவிக்கலாம் அல்லவா.. அதுவும் செய்யவில்லை..
ஏன் என்றால்.. விஸ்வ ஹிந்து பரிக்ஷத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நழுவி விட்டனர்.. இப்படிப்பட்ட ஆட்கள் தான்…இப்போது அடுத்த பிரச்சினையாக கருக்கா வினோத்தை கையில் எடுத்துள்ளனர்..
அரசியல் ஆதாயத்திற்காக சொந்த நாட்டு மக்களிடமே பிரிவினையை ஏற்படுத்தி மதக்கலவரத்தை உண்டாக்கவேண்டுமென்று நடந்துகொண்டவர்கள் அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர்.. உண்மை என்னவென்றால் சாத்தான்கள் ஓதும் வேதத்தை கடவுள்கள் கேட்பதில்லை.
முகநூல் பதிவு