இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய களம் அமைத்துக் கொண்டிருக்கும் பார்ப்பன பயங்கரவாதிகள்!
ஏப்ரல் 16 அன்று பஜ்ரங் தள் அமைப்பினர் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஊர்வலம் நடத்தியுள்ளனர். ஒரு மசூதி முன் நின்று கொண்டு காவி கொடியை அசைத்தபடி வாத்தியங்களை முழங்க விட்டு ஆட்டம் போட்டுள்ளனர். இஸ்லாமியர்களை ஆத்திரமூட்டச் செய்யும் முழக்கங்களுடன் மசூதியை இரண்டு முறை சுற்றி வந்த நிலையில் மூன்றாவது முறை சுற்றி வருவதற்கு செல்லும்பொழுது அங்கிருந்த இஸ்லாமியர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர்.
அப்பொழுது வன்முறை வெடித்துள்ளது. இரு தரப்பிலிருந்தும் கற்கள் வீசப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஊர்வலத்தில் வந்தவர்கள் கையில் கத்தியுடன் இருந்த காணொளிகள் செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வன்முறைக்கு முஸ்லிம்கள் மட்டும் தான் காரணமானவர்கள் என்று 21 முஸ்லிம்களை காவல்துறை கைது செய்துள்ளது. இந்துமதவெறியர்கள் யாரும் காரணம் இல்லையாம். அஸ்லாம் என்ற 22 வயதுடைய இஸ்லாமியர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் கையில் காயம் ஏற்பட்டதாக கூறி அஸ்லாம் ஐ கைது செய்துள்ளது காவல்துறை. ஆனால் அவருக்கு வயது 16 தான் என்று அவருடைய பிறப்பு சான்றிதழ் கூறுகிறது. இதிலிருந்தே போலீஸ் எழுதியுள்ள முதல் தகவல் அறிக்கையின் யோக்கியதை என்னவென்று தெரிந்துகொள்ள முடியும்.
***********
ஏப்ரல் 10ஆம் தேதியன்று குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி, கோவா, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடந்த ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. மத்திய பிரதேசத்தில் உள்ள காரகானில் நடந்த வன்முறைக்குப் பிறகு 12 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்துத் தள்ளி ம.பி. அரசும் இந்த இந்து மத வெறியர்களுக்கு ஆதரவாக இருப்பதாக வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டது. இந்துமத வெறியர்கள் கும்பலாக வந்து இஸ்லாமியர்களின் வீடுகளை தாக்கியுள்ளனர். ஆனால் இன்றுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை.

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்துள்ள வன்முறைகள் தொடர்பாக எழுதிக்கொண்டு போனால் பக்கங்கள் போதாது….
************
படிக்க:
♦ அனுமன் ஜெயந்தி : தர்காவில் சமாதியை இடித்து அனுமன்சிலை!
♦ ராமநவமி என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் காலிகள் வெறியாட்டம்!
இப்பொழுது மீண்டும் டெல்லியின் ஜகங்கிர்புரிக்கு வருவோம். மனோஜ் திவாரி, கபில் மிஸ்ரா உட்பட பாரதிய ஜனதா கட்சியின் பல தலைவர்கள் இந்த வன்முறைச் சம்பவத்தை (இஸ்லாமியர்களின்) சதி என்றும் பயங்கரவாத செயல் என்றும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இது பார்ப்பன பயங்கரவாதிகளின் பயங்கரவாதச் செயல் ; நாட்டில் ரத்த ரத்த ஆற்றை ஓட விடுவதற்கான முன் தயாரிப்பு என்று நாம் கூறுகிறோம்.
நாட்டில் இத்தகைய வன்முறைகள் வெடித்த வண்ணம் உள்ளன. ஆனால் இவை பற்றிய செய்திகள் தமிழ் நாளிதழ்களில் வருவது மிக மிக அரிதாகவே உள்ளன. இதைப் பற்றி ஏதும் அறியாதவர்களாகவே தமிழக மக்கள் பெரும்பாலும் உள்ளனர் என்பது வேதனை அளிக்கக் கூடிய ஒன்று. இப்படிப்பட்ட அறியாமையை, அமைதியைத் தான் பார்ப்பன பயங்கரவாதிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு மதவெறியைத் தூண்டி நாட்டை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டில் எந்த மூலையில் மதக்கலவரம் வெடித்தாலும் நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் பாதிப்பு தான் என்பதை மக்களுக்குப் புரிய வைப்போம். மக்களை ஓரணியில் திரட்டி பார்ப்பன பயங்கரவாதிகளை முறியடிப்போம்.
பாலன்
செய்தி ஆதாரம்: The wire