இதுதான் இன்றைய இந்தியா!

ராமநவமி என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் காலிகள் வெறியாட்டம்!


ந்தியாவின் தேசிய நாயகனாக சித்தரிக்கப்படும் ராமனின் பெயரால் கொலைவெறியாட்டங்களும், வன்முறைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

1990களில் புதிய தாராளவாதக் கொள்கை என்ற பெயரில் மறுகாலனியாக்க பொருளாதாரம் திணிக்கப்பட்ட போது, இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு வர்க்கமாக ஒன்று திரண்டு விடக் கூடாது என்பதற்காகதிட்டமிட்டு 1992 டிசம்பர் மாதம் 6-ஆம் தேதியன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

பாபர் மசூதி இடித்த போது எடுத்தப்படம்

தொடர்ந்து ராமனின் பெயரால் ரதயாத்திரைகளும், ஊர்வலங்களும், ராமனுக்கு கோவில் கட்ட செங்கல் யாத்திரைகள் என்று தொடர்ச்சியாக உழைப்பாளி மக்களிடையே ராம பஜனை புகுத்தப்பட்டது.

படிக்க:

♦ டெல்லி JNU வில் ABVP குண்டர்கள் மீண்டும் வன்முறை!

பட்டினி குறியீட்டில் அதல பாதாளத்திற்கு சென்றுள்ள இந்தியாவில்”பட்டினி இந்தியா- பாபர் மசூதி- ராமஜென்ம பூமி” என்று தொடர்ச்சியான ராம கோசங்கள் பட்டினி கிடக்கின்ற வயிற்றை அடைப்பதற்கு பதிலாக, காலியாக கிடந்தமூளையில் பொய் கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், ராமனுக்கு கோவில் இல்லை என்ற கட்டுக்கதைகள் இட்டு நிரப்பப்பட்டது.

ஏகாதிபத்திய முதலாளித்துவ – கார்ப்பரேட்டுகளின் சுரண்டலையும், நாட்டை மறுகாலனியாக்குவதையும்  தீவிரப்படுத்தி வரும் பாசிச பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு ஆன்மீக படையை கொண்டு மக்களின் மூளையை சலவை செய்து வருகிறது.

இராமாயணம் என்றால் ஒரு இராமாயணம் கிடையாது. இதர இராமாயணங்கள் என்று 50க்கும் மேற்பட்ட இராமாயணங்கள் நிலவுகிறது. ஒவ்வொரு இராமாயணத்திலும் ராமனின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது. ராமன் ஒரு ஆணாதிக்க வெறியன், சூத்திரன் சம்பூகனை மறைந்து நின்று கொலை செய்த சாதி வெறியன், பழங்குடி இனத்தவரான வாலியை மரத்தின் பின்னால் நின்று கொலை செய்த பேடி, மனைவி சீதாவின் கற்பை நிரூபிக்க தீக்குளிக்க சொல்லி நிர்பந்தப்படுத்திய ஆணாதிக்க வெறியன் என்றுதான் நம் தமிழகத்தில் அவனுக்கு உரிய மரியாதை தரப்படுகிறது.

அது மட்டுமல்ல! ஊரில் ஊதாரியாக திரிபவனை தண்டச்சோற்று தடிராமன் என்றும், மூக்கு பிடிக்கதின்பவனை சாப்பாட்டு ராமன் என்றும் திட்டுவது நமது மரபாக உள்ளது.

வட இந்தியாவில் ஆர்எஸ்எஸ் கும்பல் தொடர்ச்சியாக பரப்பிவரும் ராமபஜனை, பெரும்பான்மை மக்களின் மூளையை மழுங்கடித்துள்ளது. இதனால் கள்ளைக் குடித்த குரங்குபோல கண்ணில் பட்டவர்களைஉதைப்பதும், மசூதிகள், கட்டிடங்களில் ஏறி காவி கொடியை ஏற்றி உச்சியில் பறக்கவிடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

கடந்தஞாயிறு (10-04-2022)நாமநவமி அன்று(அதாவது அன்றுதான் ராமன் அவதரித்த தினமாம்)மேற்கு வங்கம், குஜராத், மத்தியபிரதேசம், ஜார்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் மசூதிகள் வழியாக இஸ்லாமியர்கள் அதிகமாக கூடியிருக்கின்ற பகுதிகளின் வழியாக ராமநவமி ஊர்வலத்தை திட்டமிட்டு நடத்தியது ஆர்எஸ்எஸ்.

சங்பரிவார குண்டர்கள் அமைப்பான ஸ்ரீராம சேனா, போன்ற அமைப்புகள் தலையில் காவி அணிந்து கொண்டு கையில் தடிகள், கட்டைகள், மற்றும் பட்டாக்கத்தியுடன் ஊர்வலமாக சென்று ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோசத்துடன் காவி கொடியை ஏற்றி கலவரத்திற்கும், இஸ்லாமியர்களின் மீதான தாக்குதல்களுக்கும் அறைகூவல்  விட்டனர்.

பீகாரில் உள்ள மசூதியில் காவிக் கொடி ஏற்றும் சூத்திர அடிமைகள்

ஏற்கனவே ஹிஜாப்தடை, மாட்டுக்கறி உண்ணத்தடை, மசூதிகளில் பாங்கு ஓதுவதற்கு தடை, ஹலால் பிரியாணி கடையை நடத்த தடை என்று பல தடைகளுடன் இஸ்லாமியர்கள்அச்சத்துடன் ஒடுங்கி வாழ்வதற்கு நிர்பந்த படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில்இனவெறி தாக்குதல் மற்றும் இனப்படுகொலை நடப்பதற்கான அபாயம் உள்ளது என்று பகிரங்கமாகவே மானுடவியல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். போதாக்குறைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்குகின்ற வகையில் CAA, NRCகுடியுரிமை சட்டதிருத்தங்கள் தலைக்கு மேலே கில்லட்டின் கத்திபோல தொங்கிக் கொண்டு உள்ளது.

நாடு முழுவதும் புதிய தாராளவாதக் கொள்கை என்ற பெயரில் திணிக்கப்பட்ட மறுகாலனியாக்கம் அதன் தீவிரத் தன்மையை அடைந்துள்ளது. நாட்டின் இயற்கை வளங்கள், கனிமவளங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கோடிக்கணக்கான இந்திய உழைப்பாளர்களின் உழைப்பு சக்தி, விவசாயிகளின் நிலங்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளால் சூறையாடப்பட்டு வருகின்றது. இந்த தருணத்தில் பேரிடியாக பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலை பல மடங்கு உயர்த்தப்பட்டு உழைக்கும் மக்கள் உயிர் வாழவே வழியின்றி கழுத்தை நெறிக்கின்றது.

இந்த சூழலில் ராமநவமி என்ற பெயரில் ஆர்எஸ்எஸ்-பாஜக பாசிச பயங்கரவாத கும்பல் நடத்தியுள்ள வெறியாட்டங்கள் இந்தியாவின் உண்மை நிலையை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

இனியும் நடுநிலைமை என்ற பெயரில் அமைதி காப்பதும் சமாதானம், சாந்தி என்ற பெயரில் பார்ப்பன பஜனைக்கு துணை போவதும் தேசத்துரோகமாகும். நாட்டைப் பாதுகாக்கும் உண்மையான நாட்டுப்பற்றுடன், கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு எழுவோம். புதிய இந்தியாவை உருவாக்குவோம்!

  • இரா. கபிலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here