ஜி எஸ் டி ஏற்றம் : பொருளாதாரம், ஏழை வீட்டை எரிக்குது மோடிவரி!

மக்களை எப்போதெல்லாம், எப்படியெல்லாம் பழி தீர்க்கலாம் என்று ஒன்றிய அரசு யோசிக்குதய்யா!

0

வீட்டு உபயோகப் பொருட்களின்மீது  ஜி எஸ் டி வரியை உயர்த்திவிட்டது ஒன்றிய அரசு, ஜூலை 18 முதல் அமலுக்கு வரப்போகிறது.

பிராண்டு அச்சிடப்படாத உணவுப் பொருள்கள், பால்-தயிர் வகைகள், 24×7 பாடுபடும் தேநீர்க்கடைகள், சிற்றுண்டிவிடுதிகள்  மற்றும்  சமையல் கத்தி, ஸ்பூன், எல்இடி விளக்குகள், தண்ணீர்ப்பம்புகள் இப்படி சின்னவகை சாமான்கள்மீது சுமார் 6% முதல் 10% வரை கூடுதல் வரிகள்.

மக்களை எப்போதெல்லாம், எப்படியெல்லாம் பழி தீர்க்கலாம் என்று ஒன்றிய அரசு யோசிக்குதய்யா!

அதானி, அம்பானிகளுக்கும் பல லட்சம் கோடி

‘தள்ளுபடி’, திரும்புமிடமெல்லாம் சலுகை; டாட்டா இன்னபிற ஆட்களுக்கும்  சிலபல கோடிகள்  தள்ளுபடி மற்றும் சலுகை என்று பட்ஜெட்டில் காட்டும்போதெல்லாம் மலர்ந்திருக்கும் தாமரை நிர்மலா, மக்களுக்காகச் சொல்லவரும்போதே சூம்பிப்போகிறது.

இந்தியா முழுக்க கோடிக்கணக்கில் சிறுவணிகர்கள், தயிர்-பால் விற்பனையாளர்கள், சிறுகடைக்காரர்கள் என்று பிராண்ட் அல்லாதவர்களுக்கு ஆப்பு! வைக்கின்ற மோடியின் நிதி அமைச்சர், அமைச்சக அதிகாரிகள், எடுபிடிகள் அத்தனைப்பேரும் மக்களுக்கு எதிராக நிற்கிறார்கள்.

வெறுமனே ” விலைவாசியை ஏற்றாதே, இறங்கிவா, இறங்கிவா “ என்று தெவுசம் வைக்கும் நாடாளுமன்றக் கோமாளிகளைப் பார்த்து நாம் ஏமாறாமல் ஒவ்வொரு தவணையிலும் எத்தனைக் கோடி மக்களின் வீட்டில் கொள்ளி விழப்போகிறது என்று பார்க்கவேண்டும், எதிர்த்து ஒன்றுதிரள வேண்டும்.

  • இராசவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here