ஸ்டெர்லைட் வழக்கு
UPDATE: (15-03-2022)

ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும், ஆலையை திறக்க கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்து இருந்தது. இந்த அப்பீல் வழக்கு இன்று நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. முதலில் வேதாந்தா தரப்பில் வாதமும், பின் வரும் நாட்களில் தமிழக அரசின் வாதமும், அதனைத் தொடர்ந்து அப்பீல் எதிர்மனுதாரர்களின் தரப்பில் வாதமும் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

(16.03.2022)

நேற்று (15.03.2022) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஸ்டெர்லைட் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் அவர்கள் ஆஜராகி வாதாடினார்.

அவரது வாதத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் எந்தவித விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்றும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், ஆலையிடமிருந்து காப்பர் ஸ்லாக் வாங்கியவர்கள்தான் பட்டா நிலத்தில் ஸ்லாக்கை கொட்டி வைத்துள்ளார்கள், பொது இடத்தில் இல்லை எனவும், தூத்துக்குடி மக்களுடைய போராட்டம் ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது விரிவாக்கத்திற்கு எதிராகத்தான் எனவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அவர்கள் போராடவில்லை எனவும் அரசியல் கட்சிகள் தலையீடு காரணமாக இந்த விஷயம் பெரிது படுத்தப்பட்டது என்பது உள்ளிட்டவைகளை வாதிட்டார்.

தொடர்ந்து அவரது வாதத்திற்காக அடுத்த வாரம் 22.03.2022 அன்று விசாரணைக்காக வாய்தாவாகி உள்ளது. மேற்படி தினத்தன்றும் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாதம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் ஸ்டெர்லைட் வழக்கில் நமது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜராகும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வெஸ் அவர்களை வழக்கத் தொடர்பாக ஆலோசனை செய்து Argument தயார் செய்ய உதவியாக நமது வழக்கறிஞர் மில்டன் அவர்கள் வெள்ளிக்கிழமை (18-03-22) மதியம் டெல்லி சென்றுள்ளார். இன்று (21-03-22.திங்கட்கிழமை) இரவு சென்னை திரும்புகிறார்.

மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வெஸ் உடன் வழக்கறிஞர் மில்டன்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here