காலங்காலமாக
தலைக்கு விலை
வைத்து கொண்டு வருகிறார்கள்.

காலத்துக்கு ஏற்ப
விலையும் கொஞ்சம்
கூடி தான் வருகிறது.

ராமன் படித்த
இன்ஜினியரிங் கல்லூரி
விலாசம் கேட்ட
கலைஞர் தலை தொடங்கி,
அவர் பேரன் காலம் வரையில்
கேடிகளால் அறிவிக்கப்படும்
கோடிகள் அதிகம் தான்.

மனித உடம்புக்கு
யானை தலை
வைத்துள்ள
அழுக்குருண்டை விநாயகர்,
தலையில் ஈரும், பேனும், பாம்பும்
கொஞ்சி விளையாடும்
அவங்க தோப்பனார்
சடையாண்டி சிவன்,

தலையில பொறந்தவன்
பார்ப்பான்
என்று எழுதி வைத்துக் கொண்டு
நம்மை ஏய்க்க
பார்த்த பாப்பானின்
குடுமியை பிடித்து இழுத்து

தலையில எப்படிடா
பொறக்க முடியும்?
தருதலைகளா என்று
கேள்வி கேட்டு வரும்
பத்து தல இராவணன்களின்
தல (லை) புராணம்
நெடியது தான்.

இந்த புராணம்
எங்களோடு தொடங்கியதில்லை
ஆனால் எங்களோடே முடித்துவிட
எத்தனிக்கிறோம்.

கூர்மையடையும்
வர்க்கப் போராட்டம்
இந்த தல புராணத்துக்கு
முடிவுரை எழுதும்..

  • செல்வா

இதையும் படியுங்கள்:

♦ மனித குலமே தற்காத்துக் கொள்! | கவிதை
♦ சந்திராயன்-3: டேஷ் பக்தர்கள் அலப்பறை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here