உரைவீச்சு :

சூ , தந்திரம் !

சுதந்திரம் வாங்கினோம்
என்று சொன்னார்கள்.
அன்று பிரிட்டிஷ்ராணியின் கிரீட நகலெடுத்து
இந்தியப் பிரபுக்களின், முதலாளிகளின்
தலைகளில் முள்முடியாய்ச் சூட்டினார்கள்—
தாங்கள் ஊட்டி வளர்த்த
அதிகாரவர்க்கம், சட்டங்கள் சாட்சியாக,
அது கைமாற்றிக் கொடுத்த தந்திரம்!
பிறகும் சொன்னார்கள்,
இன்றும் சொல்கிறார்கள்.
சுதந்திரம் வாங்கினோமாம் !
முட்டாளே, கடையில் வாங்குவது சுதந்திரமா ?

முக்கால் நூற்றாண்டு—
முக்கால் கிணறு.
முழுதும்தாண்டி அப்பால் போகாதவர்கள்
பாழ்கிணத்துக்குள்ளே
சகதி-கல்- முள்-விசப்பூச்சிகள்
நிரம்பிய அடிஆழத்தில்
அடிபட்டுக் கிடக்கிறார்கள்– இவர்கள்தான்
சுதந்திரம் பேசுகிறார்கள்,
கார்ப்பரேட்-சங்கிகளின் தோள்களில்
சுகப்பயணமாம் !


இதையும் படியுங்கள்: புரட்சி பல்லாக்கு!


 

அவர்களால் கிடைக்காது சுதந்திரம்.
சமத்துவமும் சகோதரத்துவமும் பிணைந்த
ரசவாதமே சுதந்திரம்,
அது நிலவுடைமை தகர்த்ததால் வந்தது.
அதுவும் ஆக பணத்தின்மீதே இருந்தாலும்
அந்தப் பிரெஞ்சுப் புரட்சியைக் கற்றுவைப்போம்!

அடுத்து செயலில் இறங்கி
உழைப்பவர் அதிகாரம்
ரசியப்புரட்சியாய்ச் சிவந்து மலர்ந்தது !
உலகையே குலுக்கிய
1917 ரசியாவின் லெனினைக் கற்போம் !

சாதிகளும் அடிமைத்துவமுமான
கார்ப்பரேட்–காவிக் கலவைச்சாந்து பூசி
தேசீய இனங்கள், பல இன
பலகோடி மக்களுக்கும்
கல்லறை எழுப்பத் துவங்குகிறது,
வெறுப்பரசியல் வித்தகனாம்
பார்ப்பன பனியாக் கும்பல் !


இதையும் படியுங்கள்:வேலை ஏய்ப்பு! – புதியவன்


மானத்தோடு சோறு-உடை-இடம்
தரக்கூடத் தகுதியில்லாத
அந்த வேதபுரத்துவெறியருக்குச் சவால்விடுவோம் ;
உழைப்பவர் அரிவாள்கொண்டும்
இரும்புச் சம்மட்டிகள் இயக்கியும்
ஆத்திரத்தின் துவக்குகள் கொண்டும்
கல்லறைகள் உடைத்தெறிவோம் !

அன்று எழும் சுதந்திரம் !

  • புதிய புத்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here