கோயபல்ஸை விஞ்சி விட்ட நிர்மலா சீதாராமன்!
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் – ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கில் உண்மையை உணர்ந்த விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் ஒன்றிய அரசின் நிதித் துறை கடிதத்திற்கு எதிராக ஓங்கிக் குரல் எழுப்புகின்றனர்.

ரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனியில் பிரச்சார அமைச்சராகவும், ஹிட்லருக்கு வலது கரமாகவும் திகழ்ந்தவன் கோயபல்ஸ் என்பதை அனைவரும் அறிவோம். அவனது சிறப்பு என்பதே ‘புளுகு’வதில் அவனுக்கு நிகர் வேறு எவரும் இலர் என்பதே ஆகும்.

இந்தியாவைப் பொருத்தமட்டில் காவிகள் அரசியலில் தலை தூக்கிய பிறகு, ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துத்துவ சங்கிக் கும்பல் சகல துறைகளிலும் ‘காவி அடிப்பதிலும்’, ‘புளுகித் தள்ளுவதிலும்’, காவிகளுக்கு நிகர் காவிகளே என்று சகல துறைகளிலும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அண்மை எடுத்துக்காட்டுத் தான் மோடி- அமித்ஷா கை பானமாக விளங்கும் நிர்மலா சீதாராமன் அவிழ்த்துக் கொட்டிய புளுகு மூட்டைகள் ஆகும்.

ஏற்கனவே விவசாயிகளின் பல்வேறு உரிமைகளைப் பறித்து, கார்பரேட் நலன்கள் சார்ந்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, அதன் காரணமாக டெல்லியில் நடத்திய மாபெரும் விவசாயிகள் போராட்டத்தையும், காவிக் கூட்டத்தை குறைந்தபட்சம் அடிபணிய வைத்ததையும் நாடு மறந்து விடாது.

அப்படி இருக்கின்ற பொழுது சிந்திக்கின்ற ஒவ்வொன்றையும் பாசிச பாஜக அரசு கார்ப்பரேட் நலன் கருதியே அமைவதால் ஏற்கனவே புண்பட்டுப் போய் இருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நெல் கொள்முதல் ஊக்கத் தொகையை நிறுத்துமாறு மாநில அரசுகளுக்குக் கடிதம் வாயிலாக அறிவுறுத்தி இருந்தது.

அக்கடிதம் குறித்து கடந்த ஏப்ரல் 10 தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அம்பலப்
படுத்திப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது; அந்தக் கடிதத்தில் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி நிறைய பெருகி வருகிறதாம்; அப்படிப் பெருகும் காரணத்தால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறதாம்; அதனால் தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஊக்கத் தொகையை மறுபரிசினை செய்ய வேண்டுமாம்; என்ன கொடுமை பாருங்கள் மொத்தத்தில் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என அறிவுறுத்தி ஒன்றிய அரசு நமக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். விவசாயிகளுக்கு நெல் கொள்முதலுக்காக அளிக்கப்படும் ஊக்கத்தொகையை நிறுத்துவது என்ற துரோகச் செயலை தமிழ்நாடு அரசு ஒருபோதும் மேற்கொள்ளாது; கூடுதலாக ஊக்கத்தொகை வழங்குவது குறித்து விவசாயிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்…’ என்ற பாணியில் அறிவிப்பு செய்தார். தேர்தல் நேரத்தில் ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு இதுபோன்ற செயல்களைச் செய்வதற்கு முதல்வர் தமது கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.

நிம்மிக்கு பொத்துக் கொண்டு வந்தது கோபம்…!

தஞ்சாவூர் கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மேற்கண்டவாறு பேசியதை அடுத்து, வழக்கம் போல ஏப்ரல் 12-ல் தமது எக்ஸ் தளத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தமிழகத்திற்கு மட்டுமல்ல; அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல், மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஆலோசனையே ஆகும். மத்திய அரசின் இந்த ஆலோசனை பயிர் பல்வகை படுத்தலை ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் தற்சார்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கபூர்வமான மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகும். இதன் மூலம் உள்நாட்டு தேவை அதிகமாக உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து அதிக லாபம் பெற வழிவகை செய்யப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அளிப்பது என்பது எப்போதும் மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்திற்குட்பட்டது. அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கபூர்வமாக செயல்படுவதற்குப் பதிலாக தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காக திட்டமிட்டும் திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்..’ என்பதாகத் தெரிவித்துள்ளார்.

படிக்க:

 அன்னபூர்ணா நிறுவன உரிமையாளரை மன்னிப்பு கேட்க செய்த  நிர்மலா சீதாராமனின் பார்ப்பனத் திமிர்!

 பேரிடர் நிதி: நிர்மலா சீதாராமன் திமிர் பேச்சு! தமிழக மக்கள் மீதான வன்மம்!

மேலும், ‘தேசம் தீர்வுகளை தேடும் போது திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது; மத்திய அரசு ஆக்கப் பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காக சுரண்டப் பார்க்கிறது; அரசமைப்புச் சட்டப்படி உயர் பதவியில் இருக்கும் ஒரு முதல்வருக்கு இத்தகைய நடத்தை அழகல்ல; தமிழக விவசாயிகள் தங்கள் கவலைகளையே வாக்குகளுக்காக ஆயுதமாக்கும் அரசை அல்லாமல் தங்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக உழைக்கும் அரசியலை எதிர்பார்க்கிறார்கள்..’
என்று ஒன்றிய அரசு எழுதாத ஒன்றை முதல்வர் மு க ஸ்டாலின் அம்பலப்படுத்தி விட்டார் என்ற பாணியில்சகிட்டு மேனிக்கு உளறித் தள்ளியுள்ளார்.

அதன் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் கடிதத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே வெளியிடட்டும் என்று சவால் விட்டார். அதன்படி
ஒன்றிய அரசின் நிதித்துறையின் கடிதத்தினை இணைத்து தமது எக்ஸ் தளத்தில் நிர்மலா சீதாராமன் பதிவு செய்துள்ளதை ஏப்ரல் 13-ல் காட்சி ஊடகங்களும் 14-ல் அச்சு ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

நிர்மலா சீதாராமன் குட்டு அம்பலம்…!

முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்மலாவுக்குச் சவால் விட்டதும், நிர்மலாவுக்கு ரோசம் வந்து ஒன்றிய நிதித்துறை கடந்த ஜனவரியில் அனுப்பிய கடிதத்தில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கத் தேவையில்லை என்ற தன்மையில் எழுதிய கடிதத்தை அம்மையார் தனது எக்ஸ் தளப் பதிவில் வெளிப்படுத்தினார். ஆனால் நிம்மியால் சில முலாம் பூசப்பட்டுள்ளது. அவ்வளவே!

தொலைநோக்குப் பார்வையைப் பற்றியும், விவசாயிகள் எதனை உற்பத்தி செய்ய வேண்டும்? எத்தருணத்தில் உற்பத்தி செய்ய வேண்டும்? மண்ணின் வகை என்ன? நிலத்தடி நீர், ஆற்றுப் பாசன நீர் எந்தெந்த அளவு எந்தெந்த காலத்தில் கிடைக்கும்? என்பது குறித்து எல்லாம் நிம்மி போன்ற ‘மாமிகள்’ தெரிந்திருப்பதை விட முதல்வர் மு க ஸ்டாலின் கூடுதலாகவே தெரிந்திருக்கிறார். அவரை விடவும் டெல்டா விவசாயிகள் மட்டுமல்ல; உழைக்கும் விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், கம்யூனிஸ்டுகள் கூடுதலாகவே புரிந்திருக்கிறார்கள்.

எனவே, ‘பருப்பு, பயறு, சிறுதானியம் போன்ற பிற பயிர் வகைகளுக்கும் கொள்முதலில் கூடுதலான ஊக்கத்தொகையை ஒன்றிய அரசு வழங்கத் தயாராயிருக்கிறது; மாநில அரசுகளும்வழங்குவதற்கு முன் வாருங்கள்’ என்று கூறினால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது.

படிக்க:

 அண்டப் புளுகே அரசியலாக….. பாசிச பாஜகவின் கேடுகெட்டத்தனம்.

 கோயபல்ஸை மிஞ்சும் மோடி!

மாறாக நிம்மியின் நிதித்துறை கடிதத்தின் மூலமாக லாபம் தரும் உற்பத்தி
களை தொழில்நுட்பங்களில் மட்டுமல்ல; தொழிலாளர்களை சுரண்டும் தொழிற்சாலைகளில் மட்டுமல்ல; விவசாயிகளைச் சுரண்ட விவசாயத்திலும் கொள்ளலாபம் கார்ப்பரேட்டுகள் அடித்துச் செல்லவே இவ்வித சதி திட்டங்களை ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்கிறது.

அதனால் தான் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் – ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கில் உண்மையை உணர்ந்த விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் ஒன்றிய அரசின் நிதித்
துறை கடிதத்திற்கு எதிராக ஓங்கிக் குரல் எழுப்புகின்றனர்.

அலுங்காமல்- குலுங்காமல்- கொள்ளைப்புற வழியாக மாநிலங்களவை உறுப்பினராகிக் கொண்டு சனாதன பார்ப்பனியத்தின் பாதுகாவலர்கள் மூலம் முக்கிய பதவியான நிதி அமைச்சர் பதவியை அபகரித்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு தொடர்ச்சியாக வஞ்சகம் இழைத்து வரும் – நாடாளுமன்றத்தில் வாய்க் கொழுப்பெடுத்து பேசுகின்ற பாஜகவின் மோடி- அமித்ஷா- நிம்மி கும்பலை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டி யடிக்க இந்திய நாட்டு மக்கள் அணியமாவோம்..‌! இக்கும்பலின் ‘கோயபல்ஸ்’ பாணியிலான புளுகு மூட்டைகளை-ஒட்டடைகளாகக் கருதி சாக்கடையில் ஒதுக்கிக் தள்ளுவோம்!

குறைந்தபட்ச மாற்றை முன்வைத்து – நிர்பந்தித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக-கூட்டணியை ஆதரிப்போம்! வெற்றி பெறச் செய்வோம்!

பாசிச பாஜக-அடிமை அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்!

இத்தகு நிலைப்பாடு இக்காலச் சூழலில் அவசியம் என்பதை சகலரும் உணரச் செய்வோம்!

  • எழில்மாறன்

2 COMMENTS

  1. கோயாபல்ஸை மிஞ்சி விட்ட நிர்மலா சீதாராமன் !

    விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கு தரப்படும் மானியத்தை ஒன்றிய அரசு நிறுத்தப் போவதாக கடிதம் மூலம் மாநிலங்களுக்கு அனுப்பிய கடித்ததை குறிப்பிட்டு அம்பலப்படுத்தி ஏப்ரல் பத்தாம் தேதி தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரையில் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை அவதூறாக பேசியதாக நிர்மலா மாமி மு க ஸ்டாலினை அவதூறு செய்துள்ளார் என்று இந்த கட்டுரை குறிப்பிடுகிறது

    பாஜக தலைவர்கள் அனைவருமே கோயபல்ஸ் தான் நெல் கொள்முதல் மானியத்தை ஒன்றிய அரசு நிறுத்துவது மட்டுமல்ல ஒவ்வொரு இந்திய குடிமகன் வங்கியில் 15 லட்சம் தருவேன் என்று சொன்னது ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவேன் என்று சொன்னது கேஸ் மானியத்தை வங்கியில் போடுவதாக கூறியது 500 1000 ரூபாய் செல்லாது என இரவோடு இரவாக அறிவித்தது இப்படி ஏகப்பட்ட பொய் மூட்டைகளை பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக அறிவிப்பை வெளியிட்டதை நாம் அறிவோம் நெல் மானியம் குறித்து அம்பலப்படுத்திய மு க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    கட்டுரை ஆசிரியருக்கு நன்றி

  2. கட்டுரையாளருக்கு நன்றி!
    ஆர் எஸ் எஸ் பிஜேபி சங்க பரிவாரகும்பல் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கலவர இயக்கமாகும்.
    எனவே தான் கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் யோக்கிய தகுதிகள் இல்லாதவர்கள்.

    விவசாயிகளுக்கு மானியம் தரக்கூடாது என்கிறார் நிம்மி மாமி ?
    விவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என மோடி சொன்ன பொய்க்கும் அரைகுறை மானியங்கள் வைத்து வாழ நினைக்கும் விவசாயிகளை கொள்ள துடிக்கும் நிர்மலா மாமிக்கும் பெரிய வித்தியாசம்
    இவர்களின் நலன் கார்ப்பரேட் நலனே.
    விவசாயிகள் ஒன்றிணைந்து பாசிஸ்டுகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here