ல்வேறு தொழில் முனைவோருடன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உட்பட பாஜக சங்பரிவார் கும்பலும் கலந்து கொண்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசும்போது “உங்கள் அருகில் உள்ள வானதி எம்எல்ஏ எங்களின் ரெகுலர் கஸ்டமர். அவர் வரும்போதெல்லாம் சண்டை போடுகிறார்.

காரணம் இனிப்பு வகைகளுக்கு 5%  ஜிஎஸ்டி நிர்ணயித்துள்ளீர்கள். கார வகைகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி, பேக்கரி உணவுகளில் பன், ரொட்டி தவிர மற்ற உணவுகளுக்கு 28% ஜி எஸ் டி உள்ளது.

ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு வித்தியாசமான ஜிஎஸ்டி போடுவதற்கு கஷ்டமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் சண்டைக்கு வருகிறார்கள். பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. பன்னுக்குள் கிரீம் வைத்தால் அது 18% ஜிஎஸ்டி ஆகி விடுகிறது

அதனால் கஸ்டமர்கள்  “நீ கிரீமையும், ஜாமையும் கொண்டு வா நானே வச்சிக்கிறேன்” என்று சொல்கின்றனர். கடை நடத்த முடியவில்லை அதனால் எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துங்கள்” என்று பேசினார்.

இதை கவனித்த அரங்கத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் யாரை கேள்வி எழுப்பினாரோ அந்த சங்கி கும்பலும் கோபத்தை வெளி காட்டிக் கொள்ளாமல் சிரித்தது.

இந்தக் கேள்விக்கு மொன்னையான பதிலை தந்தார் நிர்மலா சீதாராமன். “நாங்கள் மாநிலம் வாரியாக எல்லாம் வரி நிர்ணயிக்கவில்லை ஜிஎஸ்டி மற்றும் தொழில்துறை தொடர்பான கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு உடனடியான  தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் படு வேகமாக பரவி பாசிச பாஜகவை நாறடித்தது. சமூக வலைதளத்தில் பாஜகவை கழுவி ஊற்றினார்கள்.

கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் சிறுகுறு தொழில் முனைவோர்களின் சொர்க்க பூமியாக திகழ்ந்தது. புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்கள், குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம் என்ற நிலை எல்லாம் பாசிச பாஜக ஜி எஸ் டி அறிமுகப்படுத்திய பின்னர் ஒன்றுமில்லாமல் போனது. சிறு தொழில் முனைவோர் எல்லாம் ஓட்டாண்டி ஆனார்கள்.

திருப்பூரில் கார்மெண்ட்ஸ் தொழில்நசிந்து அவர்களுக்கு வரும் வாய்ப்பு பங்களாதேஷுக்கு சென்றது. தொழில் நடத்திய சிறு முதலாளிகள்  கடனாளியாகி போனார்கள்.

தொழில் நகரமாக கொடிக்கட்டி பறந்த கோவை, திருப்பூர் பகுதிகளை ஒன்றுமில்லாமல் செய்த பெருமை ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கத்தை அறிமுகப்படுத்திய பாஜகவை சாரும்.

படிக்க:

 தொழில் நகரம் திருப்பூர் திவாலாகும் கொடூரம்! அனுமதிக்காதே!
♦ பேரிடர் நிதி: நிர்மலா சீதாராமன் திமிர் பேச்சு! தமிழக மக்கள் மீதான வன்மம்!

இதனை பாஜகவும் அதன் அடிபொடிகளும் ஏற்றுக் கொள்வதில்லை. ஜிஎஸ்டி வசூல் இந்தாண்டு உச்சத்தை தொட்டது என்று ‘பெருமை’ கொள்கிறார்கள். உழைக்கும் மக்களிடமும் சிறு வணிகர்களிடமும் தொழில் முனைவோரிடமும் வரி என்ற பெயரில் கொள்ளை அடிப்பதில் என்ன பெருமை வேண்டி இருக்கிறது இது அவமானம் இல்லையா?

ஆனால் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இது அவமானமாக தோன்றவில்லை. அன்னபூர்ணா முதலாளி கேள்வி எழுப்பியதுதான் அவமானமாக தோன்றுகிறது. தனியாக இந்த கேள்விகளை அல்லது கோரிக்கைகளை முன் வைத்திருந்தால் அவரை மிரட்டி அனுப்பி இருக்கலாம். பொதுவெளியில் கேட்டுவிட்டாரே அதை கேட்டு எல்லோரும் சிரித்து நிம்மதியை நோகடித்து விட்டனர்.

அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார் பார்ப்பன திமிர் பிடித்த நிர்மலா சீதாராமன். மன்னிப்பு கேட்டதை வீடியோவாக எடுத்து பாஜக ஐடி விங் சமூக வலைதளங்களிலும் பரப்பி விட்டுள்ளது.

தேர்தலில் நின்று மக்களை களத்தில் சந்தித்து வெற்றி பெற திரானியில்லாத நிர்மலா சீதாராமன், குறுக்கு வழியில் ஒன்றிய அமைச்சராகிவிட்டு பத்திரிகையாளர்களை  சந்திக்கும்போதும், மக்களை சந்திக்கும் போதும் திமிராக பதில் அளிப்பது பேசுவது என்ற பாணியை நீண்ட நாட்களாக செய்து வருகிறார்.

கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 2000 ரூபாய்க்கு குறைவான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கலாம் மக்கள் தலையில் மேலும் பொருளாதார சுமையை சுமத்தலாம் என காத்துக் கொண்டிருந்த நிம்மிக்கு மக்களின் பலமான எதிர்ப்பினால் தற்போதைக்கு அமல்படுத்த முடியாமல் தோல்வியே கிட்டியது.

ஜிஎஸ்டி அமல்படுத்தியதை எந்த ஒரு பெரு முதலாளிகளும் எதிர்க்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் சிறு குறு முதலாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு சரியான பதில் அளிக்க தெரியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓட வேண்டும். அதைவிடுத்து தனது அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி பணிய வைப்பது பார்ப்பன திமிரே. கூடிய விரைவில் நிர்மலா சீதாராமன் கொட்டத்தை தமிழக மக்கள் அடக்குவார்கள்.

  • மாரிமுத்து

2 COMMENTS

  1. கோவை கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி பற்றி ஒன்றிய நிதியமைச்சர் – அவரே அறிவித்துக் கொண்ட பெயர் போல –
    ‘ஊறுகாய் நிம்மி’- யிடம் அன்னபூரணா ஹோட்டல் உரிமையாளர் நியாயமான கேள்விகளை ஜனரஞ்சகமாக எழுப்பியதும், அரங்கிலிருந்தோர் சிரிப்பொலி எழுப்பி கைதட்டி ஆரவாரம் செய்ததும் (கேள்விக்குப் பதில் கூற வக்கற்ற நிலையில்) நிம்மிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து தமது எடுபிடி வானதி மூலம் ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசனை மிரட்டி வரவழைத்து நிம்மியிடம் மன்னிப்புக் கேட்கச் செய்ததோடல்லாமல் அதனை வீடியோ எடுத்து RSS-BJP-யின் IT wing மூலமாக ஊடகங்களில் பரவிச் செய்த நிம்மியின் கேவலமான பார்ப்பனக் கொழுப்பை கட்டுரை நன்றாகவே திரைகிழித்துக் காட்டி உள்ளது. இது போதாது; இன்னும் முழுமையாகத் திரைகிழிக்க வேண்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here