“யாதும் ஊரே யாவரும் கேளிர் என சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பறைசாற்றிய நமது தமிழ் மண்ணில் வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை திமுக தலைவர்கள் தொடர்ந்து விதைக்க முயல்வது ஆபத்தானது. வடக்கு தெற்கு என இன ரீதியாக மக்களை பிரித்தாள துடிக்கும் திமுகவின் பிளவுவாத அரசியலை அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆமோதிக்கின்றனவா?” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய ஆய்வானது 2024-25 ஆண்டுகளில் சேகரித்த தரவுகளின் அடிப்படையில் தமிழகத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கின்றன, இவ்வாறு அதிகரித்துள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, 35 லட்சம் பேர் என்று குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமானதற்கு காரணம் குறிப்பாக பீகார், ஒடிசா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும் தான் அதிகமாக புலம் பெயர்ந்து தமிழகத்திற்கு வந்ததுதான். மேற்கண்ட மாநிலங்களில் பெரும்பாலும் ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சி அல்லது அதன் கூட்டணி ஆட்சி தான் நடக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவரங்களுக்கு மாறாக தமிழ்நாட்டில் eShram போர்ட்டலில் 93 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட அமைப்புசாரா/புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவருமே பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர்.
தமிழகத்தில் நிலவுகின்ற தொழில் அமைதி காரணமாக வட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்தை நோக்கி வருவதும் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் வட இந்திய தொழிலாளர்கள் வந்து குவிவதை பல்வேறு தரவுகள் எடுத்துக் காட்டியுள்ளன.
தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களான சென்னை, திருவள்ளூர், மற்றும் கோவை, திருச்சி, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு வருகின்ற வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தின் பக்கத்து மாநிலமான புதுச்சேரிக்கோ தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வடமாநிலங்களில் இருந்து வந்து குவிகிறார்கள்.
இந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பு இருப்பதாகவும், தொழில் வசதிகள் மற்றும் தங்குவதற்கான இருப்பிட வசதிகள் முதல் தனது குழந்தைகளை தங்க வைப்பதற்கு பொருத்தமான வசிப்பிடங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவை அனைத்தும் கிடைப்பதாகவும், ஒப்பீட்டு ரீதியாக வட மாநிலங்களை விட விலைவாசி உயர்வு குறைவாக இருப்பதாகவும் பல்வேறு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பேட்டிகளை கொடுக்கின்றனர்.
ஆனால் இதற்கு நேர் மாறாக பாசிச பாஜகவின் தலைவர்களில் ஒருவரான திருவாளர் நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் தமிழகத்தை ஆண்டு வரும் திமுக வடக்கு, தெற்கு என்று பிரித்து பிளவுவாத அரசியலை நடத்துவதாகவும் பித்தலாட்டம் புரிந்து கொண்டுள்ளார்.
வடமாநில தொழிலாளர்களில் உடல் உழைப்பை நம்பி வேலை செய்வதற்கு வருகின்ற தொழிலாளர்கள் 97 சதவீதம் பேர் உள்ளனர் என்றாலும் 3 சதவீதம் பேர் போதை மருந்துகளை கடத்துவது, முதல் பல்வேறு கிரிமினல் குற்ற செயல்களில் ஈடுபடுகின்ற கிரிமினல்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் செய்கின்ற அட்டூழியங்களை தட்டிக் கேட்கின்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியவர்கள் மீதும் பகிரங்கமான குற்றச்சாட்டு மற்றும் மிரட்டலை விடுத்துள்ளார் பாசிச பயங்கரவாதியான நயினார்.
சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது சென்னைக்கு ரயிலில் கடத்தப்பட்ட ரூபாய் 4 கோடி ரூபாய் இந்த நயினாருக்கு தான் சொந்தமானது என்று பிடிபட்டவர்கள் சொன்ன பிறகு ஏறக்குறைய இரண்டு ஆண்டு காலம் ஆகிறது. இதுவரை நயினார் மீது எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.
படிக்க:
♦ “ஆத்தா வையும்” அண்ணாமலையின்! அழுகுணி கண்ணீர் அரசியல்.!
♦ மோடியின் உலகம் சுற்றலும்; எடப்பாடி யின் தமிழகச் சுற்றலும்!
ஆள் கடத்தல் வேலை செய்வது முதல் போதை மருந்து கடத்தல் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்துவது ஆகியவற்றில் வடமாநிலங்கள் அனைத்தும் கிரிமினல் குற்ற சம்பவங்கள் நிகழ்த்துவதில் உற்ற தலைநகர்களாக மாறி சந்தி சிரிக்கிறது. இந்தியாவை சூறையாடுகின்ற தேசங்கடந்த தரகு முதலாளிகளின் பிறப்பிடமான குஜராத்தோ துறைமுகங்கள் வாயிலாக போதை மருந்து கடத்தலில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் மீது ஆதாரமற்ற பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதும், தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமுகவை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் முறியடிப்பதற்கு எந்த எல்லைக்கும் சென்று பொய் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவதன் மூலம் மக்களைக் குழப்பி தேர்தலை தனக்கு சாதகமாக அறுவடை செய்து கொள்ள பாசிச பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கும்பல் திட்டமிட்டுள்ளது என்பதைத்தான் நயினார் நாகேந்திரனின் மேற்கண்ட பித்தலாட்ட அரசியல் அம்பலப்படுத்துகிறது.
“முழு உண்மைகளை காட்டிலும் வீச்சானது, முக்கால் பொய்” என்பார்கள். அண்ட புளுகு, ஆகாச புளுகு ஆகியவை பெயர் மாறி அமித்ஷா புளுகு, அண்ணாமலை புளுகு, நிர்மலா புளுகு என்று மாறியுள்ள சூழலில் தற்போது அந்த இடத்தை பிடிப்பதற்கு தமிழகத்தின் பாஜக தலைவர் நயினார் போட்டி போடுகிறார் என்பதை அவரது பேட்டிகள் அம்பலப்படுத்துகிறது.
◾மாசாணம்
புதிய ஜனநாயகம் தினசரி







நயினார் நாகேந்திரனின் முழுமையான பொய்ப் பரப்புரை குறித்து கட்டுரையாளர் சிறப்பாகவே அம்பலப்படுத்தி உள்ளார்.
ஹிட்லரின் வாரிசுகள் இவர்கள். சர்வாதிகாரத்தில் மட்டுமல்ல; கோயபல்ஸைப் போன்று 1000 மடங்கு புளுகுவதிலும் வல்லவர்களே..! ஒட்டுமொத்த இந்த அழுகுணி ஆட்டத்தை – பாசிச சர்வாதிகார சதிராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது இந்திய நாட்டின் அனைத்து ஜனநாயக இயக்கங்கள் மற்றும் உழைக்கும் மக்களின் பிரதான கடமையாக முன் நிற்கிறது.
இதே திருநெல்வேலியில் தான் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார் பட்டியல் இனத்தின் இளைஞன் கவின் செல்வ கணேஷ். இதுவரையிலும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட ஏ3 குற்றவாளி S.I. கிருஷ்ணகுமாரி கைது செய்யப்படாமல் இருப்பதற்கும் நயினார் நாகேந்திரன் போன்றவர்களுடைய அழுத்தமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு இல்லையெனில் பலவற்றுக்கும் நியாயம் பொளந்து பேசும் நயினார் நாகேந்திரன் கவின் விடயத்தில் எந்தவித அக்கறை செலுத்தினார்? என்ன பங்காற்றினார்? என்ன வாய் திறந்து பேசினார்? காரணம் கொலைகார குடும்பம் நயினார் நாகேந்திரன் சாதி என்பதைத் தவிர வேறு என்ன அடங்கி இருக்கிறது அதில்?
எனினும் கவின் விடயத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனமாக இருப்பது… அதன் காவல்துறை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் இதுவரை கைது செய்யாமல்
இருப்பது மிகக் கேவலமானதாகும்; இழிவானதாகும்.
கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!