பத்ரி-யின் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க பெரியாரை இழுக்குறீங்க பாருங்க… அங்கேதான் இருக்கு ட்விஸ்ட். ‘நீங்க ரூட் மாறி போறீங்க. அப்புறம் அறிவுஜீவிகளின் ஆதரவை இழக்க நேரிடும்’னு மென்மையா சுட்டிக் காட்டுறாங்க போல… பெரியாரின் பெயரால் தான் விடுவிக்கப்படுவது பத்ரி-க்கு ஏற்புடையதா என்பதை அவரிடமே ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள். ‘பொறுக்கி தமிழர்களின்’ தலைவரின் பெயரால் தனக்கு நீதி கோருவதை அவர் விரும்பாமல் இருக்கக்கூடும்.

000

கொஞ்ச நாளைக்கு முன்பு கரிகாலன் நடத்திய ரூட்ஸ் தமிழ் என்று ஒரு youtube சேனல் தடை செய்யப்பட்டதே… அப்போது இவர்கள் யாரும் பேசினார்களா? அந்த செய்தியாவது இவர்களுக்கு தெரியுமா ? அதெல்லாம் கருத்துரிமைக்குள் வராதா? கரிகாலனை விட, பத்ரி இந்த சமூகத்துக்கு எந்த வகையில் பயனுள்ளவர்?

‘முத்துராமலிங்க தேவரை கைது செய்தால்தான் முதுகுளத்தூர் கலவரம் அடங்கும் என்றால் அவரை கைது செய்யுங்கள்’ என்றவர் பெரியார். அவர், எதையும் மக்கள் முடிவுக்கு விட்டுவிடுவதில் நம்பிக்கை கொண்டவராம். அதனால் யார் எதை வேண்டுமானாலும் பேசலாமாம்.

‘இப்படியே போனா அப்புறம் MBBBC கேட்பாங்களா?’ என்ற பத்ரியின் உடல்மொழியில் வெளிப்படும் வக்கிரத்துக்கு இந்த அறிவுஜீவிகளின் மொழியில் என்ன பெயர்?

‘அரசுக்கும் மக்களுக்கும் எதிராக வன்முறையை தூண்டுவது.. இரு சமூகங்களுக்கு இடையே பகையை மூட்டுவது’ என்ற இரண்டு பிரிவின் கீழ் பத்ரியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டும் மிகச் சரியான பிரிவுகள்.

பார்ப்பன பொறுக்கி பத்ரிக்கு பெரியாரை கொண்டு வக்காலத்து வாங்கும் 'அறிவுஜீவிகள்'!

அப்படி இல்லை என்று இவர்கள் வாதிட்டால் பத்ரி பேசிய பேச்சு எவ்வகையில் நியாயமானது என்று தர்க்கபூர்வமாக விளக்க வேண்டும். பத்ரிக்கு இதை சொல்வதற்கான உரிமை இருக்கிறது என்பதை நிறுவ வேண்டும். மாறாக திமுக அரசு திராவிட மாடல் அரசாக செயல்படவில்லை; பெரியார் வழியில் இருந்து விலகிச் செல்கிறது என்று இந்த பக்கம் வண்டியை திருப்பி அறிவுரை சொல்வது சரியற்றது.

கருத்து சொல்லதான் இடமிருக்கிறதேயன்றி அவதூறு பரப்புவதற்கு அல்ல.

பாரதிதம்பி
முகநூல் பகிர்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here