இப்படித்தான் இலங்கையிலும் வெளி நாட்டு நாணய இருப்பு (Foreign reserves) குறைந்து கொண்டே போனது. மக்கள்( பெரும்பான்மைச் சிங்களர்) கண்டுகொள்ளவேயில்லை, மீண்டும் மீண்டும் பவுத்த சிங்களப் பேரினவாத இருப்புப் பற்றியே கவலப்பட்டார்கள், நாணய இருப்பினைக் கண்டுகொள்ளவில்லை ( இங்கு நாணயம் என்பதை பணம் [Dollar ] மற்றும் நேர்மை எனும் இரு பொருளிலும் கொள்க) . திடீரென ஒரு நாள் நாணயமே இல்லாமற் போயிட்டுது, பின்னர் எழுந்ததுதான் அத்துணை சிக்கலும். இப்போது இந்தியாவும் அதே பாதையில் செல்வதனைப் படத்தில் காண்க. இந்தியாவின் வெளிநாட்டு நாணய இருப்பும் அதே பாதையில். (வட) இந்தியர்களும் நாணய( டாலர் + நேர்மை) இருப்புப் பற்றிக் கவலைப்படாமல் , இராமரின் இருப்புப் பற்றியே அக்கறை கொள்கிறார்கள்.

வரலாறு வழிகாட்டத் தவறுவதில்லை.

நன்றி: வி.இ.குகநாதன்

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here