நூல் அறிமுகம்
கருப்பும் காவியும்.
பேராசிரியர். சுப.வீரபாண்டியன் எழுதிய வரலாறு தழுவிய நூலாகும்.
ஆரிய – பார்ப்பன கும்பலின் எதிர்ப்பு போராட்டங்களில் தலைநிமிர்ந்து நிற்கும் தமிழகத்தில் காவி என்ற நிறத்தின் அடிப்படையில் காலூன்ற துடிக்கிறது ஆர்எஸ்எஸ்-பாஜக பாசிச பயங்கரவாத கும்பல்.
இந்த நூலின் மூலம் வரலாற்று ரீதியாக காவி தமிழகத்தில் எவ்வாறு தன்னை வளர்த்துக் கொள்ள முயற்சித்தது என்பதை பற்றியும் அதற்கு எதிராக திராவிட இயக்கம் எவ்வாறு போராடி உள்ளது என்பதை எடுத்துரைக்கிறது இந்த நூல்.
சித்தாந்த ரீதியாக ஆரிய- பார்ப்பன கும்பலை எதிர்த்து போராடிய திராவிட மரபு தமிழ் மண்ணுக்கே உரித்தானது என்ற நெஞ்சுரத்துடன் இந்த நூலை உயர்த்திப் பிடிப்போம். தற்போது இந்தியாவை பார்ப்பன-இந்து ராஷ்டிரம் ஆக மாற்ற துடிக்கும் ஆர்.எஸ். எஸ் பாஜக கும்பலை முறியடிக்க பேராயுதமாக இந்த நூல் உதவும்.
கீழைக்காற்று வெளியீட்டகம்
எண்.16 அருமலை சாவடி,
கண்டோன்மெண்ட்,
சென்னை.
அலைபேசி எண் – 8925648977