நக்சல்பாரி இயக்கத்தின் முழுமையான வரலாற்றை இந்த சிறு வெளியீடு தெளிவாக முன்வைக்கிறது.
எழுபதுகளில் நக்சல்பாரி இயக்கம் முன்வைத்த போது நிலவிய சமூக பொருளாதார நிலைமைகளுக்கும், 60 ஆண்டுகளுக்குப் பின்பு இந்திய சமூக கட்டமைப்பில் நிலவுகின்ற அரசியல், பொருளாதார நிலைமைகளில் பாரிய வேறுபாடு உள்ளது.
எனினும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் பாதைக்கு வெளியில் மக்களை புரட்சிக்கு அணி திரட்டும் மகத்தான இயக்கம் நக்சல்பாரி மட்டுமே.
2008 ஏகாதிபத்திய முதலாளித்துவ கட்டமைப்பு மீள முடியாத நெருக்கடியில் விழுந்த பிறகு காலனி, அரைக்காலனி, நவீன காலனி, மறுகாலனிய நாடுகளில் அரசியல், பொருளாதார, இராணுவ மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக வழிமுறைகள் சாத்தியமில்லை என்பதால் பாசிச ஒடுக்கு முறையை தீர்வாக முன்வைக்கிறது ஏகாதிபத்திய முதலாளித்துவம்.
இந்தியாவில் 2014 மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுகளுக்கு மூர்க்கமாக சேவை செய்வதும், தனது சொந்த சித்தாந்தமான பாசிச பார்ப்பன பாசிசத்தை ஒன்று கலந்து கார்ப்பரேட் – காவிப் பாசிசமும் மக்களை அடக்கி ஒடுக்குகிறது.
இத்தகைய குறிப்பான சூழலில் தேர்தல் அரசியலிலும் ஆர் எஸ் எஸ்-மோடி கும்பலை வீழ்த்துவதற்கு தேர்தலையும் ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டியுள்ளது.
அதுமட்டுமின்றி தரகு முதலாளிகள் என்ற வர்க்கத்தில் புதிதாக தோன்றியுள்ள தேசங்கடந்த தரகு முதலாளிகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை கூர்மைப்படுத்தி புதிய ஜனநாயகக் புரட்சிக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும்.
உற்பத்தி சக்திகளில் ஏற்பட்டுள்ள இத்தகையதொரு மாற்றத்தை கணக்கில் கொள்ளாமல் 60 ஆண்டுகளாக ஒரே முழக்கத்தை முன்வைத்து மக்களை ஏமாற்றுகின்ற இடது சந்தர்ப்பவாதம் ஆகும்.
எனவே மே 25 நக்சல்பாரி எழுச்சி தினத்தை நமது திசைகாட்டியாக கொண்டு கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்!
ஓ நக்சல்பரி…
எங்கள் காடுகள் பூத்தாய்
காற்றினில் சிலிர்த்தாய்
வயல்வெளி வியர்த்தாய்
மலைகலில் வீசினாய்
நதிகளில் கலந்தாய்
எங்கள் மண்ணின் உவப்பே
நக்சல்பரி!
எங்கள் கைகளில் சிவந்தாய்
கண்களில் விழித்தாய்
உதிரம் பெருகினாய்
இதயம் நிறைந்தாய் நக்சல்பரி!
எங்கும் எதிலும்
பொங்கும் பொலிவே நக்சல்பரி!
ஓ! நக்சல்பரி…
கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை புத்தகக் காட்சி
கடை எண்: 660, 661