அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்!

சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் 46வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது.

இந்த புத்தகக் காட்சியில் கீழைக் காற்று வெளியீட்டகத்தின் சார்பில் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய நூல்களை தருவித்து தருகிறோம்.

புத்தகக் காட்சி என்ற உடன் தனது அறிவு சாளரத்தை திறந்து விடுவதற்கு பொருத்தமான நூல்களை பல்வேறு வாசகர்கள் தேடி வருகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

உலக வரலாறு துவங்கி ஏகாதிபத்தியங்களின் நிதி மூலதன ஆதிக்கம் பல்வேறு நாடுகளில் ஏற்படுத்துகின்ற பொருளாதார நெருக்கடிகள் பற்றிய நூல்கள், இந்தியாவின் மீது திணிக்கப்படும் கார்ப்பரேட்-காவி பாசிசம் அதை எதிர்த்து முறியடிப்பதற்கான அறிவு பெட்டகங்களை உள்ளடக்கிய நூல்கள் ஆகியவற்றை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தேடி தெரிவு செய்து வாங்குகின்றனர் என்பதையும் நாங்கள் அறிவோம்.

எனவே பல்வேறு இடங்களில் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள இத்தகைய நூல்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி ஒரே குடையின் கீழ் தங்களுக்கு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

தவறாமல் வருகை தாருங்கள்! முற்போக்கு நூல்களுக்கான முகவரி கீழைக்காற்று வெளியீட்டகம்.

வாசகர்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறது

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண்: 660, 661
YMCA மைதானம், நந்தனம், சென்னை.
தொடர்புக்கு: +91 89256 48977

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here