நாள்தோறும் வளர்கிற அதிசயம்!

1

நாள்தோறும்
வளர்கிற அதிசயம்!
~
இறந்த பிறகு
மனிதர்களால் வளர முடியாது!

எண்ணியிருந்தோம்

அதைப்
பொய்யாக்கினார்
பெரியார்

ஒவ்வொரு நாளும்
வளர்கிற அதிசயம்
அவர்

வளரவே முடியாத
மனிதர்களென
இகழப்பட்டோரின்
வளர்ச்சியைச்
சிந்தித்தவர்

விளிம்புநிலை
அசுரர்களான
நம் மூதாதைகளை
அழிக்க விசுவரூபம்
எடுத்தவர் நம் கடவுளர்

நம்மை பலி கொள்பவர்
எப்படி நம்முடைய கடவுளாக
இருக்க முடியும்?

கேட்டதோடு நிற்கவில்லை

அந்தக் கடவுளோடு போராட
விசுவரூபம் எடுத்தார் பெரியவர்

இல்லாதோர் கூரைக்கு
மூங்கிலாக வளர்ந்தார்
ஏழைகள் இருளுக்கு
மின் கம்பமாக வளர்ந்தார்

அண்ணா பல்கலையில்
ஐஐடியில்
தலித் பிள்ளைகள் ஏற
படிக்கட்டாக வளர்ந்தார்

கல்லூரிக்கு
அலுவலகத்துக்கு
பெண்கள் செல்லும்
பாதையாக வளர்ந்தார்

அவர் நம்
தெருக்களில் வளர்கிறார்
அரசாங்கம் போடும்
சட்டங்களில் வளர்கிறார்
நீதிமன்றங்கள் சொல்லும்
நியாயங்களில் வளர்கிறார்
புதிய தலைமுறையின்
மனங்களில் வளர்கிறார்

100 அடியாக
1000 அடியாக
10000 அடியாக
100000 அடியாக
வளர்கிறார்
நம் பெரியார்

பிள்ளைகள்
வளர்ந்ததைப் பார்த்து
மகிழ்ந்த தந்தையவர்

லில்லிபுட்டன்கள்
அவர் வளர்ச்சியில்
பொறாமை அடையட்டும்

இன்று தந்தை
வளர்வதைப் பார்த்து
பெருமிதம் அடைகிறார்கள்
பிள்ளைகள்

ஏனெனில்,

பெரியார்
ஒவ்வொரு அடி
வளரும்போதும்
தமிழர்கள் வாழ்வு
100 அடி உயர்கிறது!

கரிகாலன்

1 COMMENT

  1. நீவீர் வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும் பெரியவரே!.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here