மக்களைப் பிளக்கும் காவிப்பாசிசம் வீழ்த்துவோம்! கலை இலக்கியத்தையும் ஆயுதம் ஆக்குவோம்!
அன்பார்ந்த கலை இலக்கிய முன்னணியாளர்களே! உழைக்கும் மக்களே!
மதுரை மாவட்டத்தின் பாரம்பரிய பெருமைமிக்க தொல்லியல் சின்னங்களையும், கனிம வளங்கள் நிரம்பிய மலைகளையும், டங்ஸ்டன் தாது நிறைந்த அரிட்டாபட்டியையும் வரைபடத்தில் இருந்து நீக்குவதற்கு கார்ப்பரேட் கொள்ளைக்கு அனுமதித்த கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தின் கொடூரத்தை மதுரை மக்களின் வீரம் செறிந்த டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிரான போராட்டம் தடுத்து நிறுத்தியது.
பாசிச பாஜகவின் கார்ப்பரேட் நலன் சார்ந்த சதியை அறிந்து கொண்டு எதிர்த்துப் போராடிய மதுரை மக்களை பிளவுபடுத்துவதற்கு பார்ப்பன பாசிஸ்டுகள் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவை ‘இடித்துத் தள்ளுவோம்’ என்று வெறிக் கூச்சலிட்டு வருகின்றனர். ஒற்றுமையாக வாழுகின்ற இந்து – இஸ்லாமிய மக்களை பிளவுபடுத்த சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
தென் தமிழ்நாடு என்றாலே இந்திய வரலாற்றை புதிய வகையில் எழுத வேண்டும் என்ற தொல்லியல் ஆய்வுகளை முன் வைத்துள்ள ‘கீழடி முதல் வைகை நாகரிகம் வரை’ தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்கு அடையாளமாக இருந்து வருகிறது.
சித்தர்கள் முதல் பெரியார் வரை விதைத்த பகுத்தறிவு, சமத்துவக் கருத்துகள், சமூகநீதி, சுயமரியாதை. பெண்ணுரிமை என்று வளர்ந்து இன்றுவரை தமிழ்நாடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவைதான் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பார்ப்பன கும்பல் தமிழ் நாட்டின் மீது வெறுப்பை உமிழ அடிப்படைக்காரணம். இந்தியாவில் பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்திப் பிடித்து தனித்தீவாக தமிழ்நாடு காட்சியளித்து வருவது பார்ப்பன பாசிஸ்டுகளின் கண்ணை உறுத்துகிறது.
தமிழ்ச் சமூகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபையும், கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு எதிராக உயிர்த்தியாகம் புரிந்து தடுத்து நிறுத்திய போராட்ட மரபையும் ஒழித்துக் கட்ட ஆர்.எஸ்.எஸ் சங்கி கும்பலின் ஆழ்வார்களாகவும், நாயன்மார்களாகவும் சில கைக்கூலிகள் களமிறக்கப்பட்டு பெரியாரை தூற்றுவதும், வட மாநிலங்களில் நடப்பது போன்று சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களின்மீது வன்கொடுமைகளை ஏவி, சாதி, மதம் கடந்த மக்கள் ஒற்றுமையை பிளவுபடுத்த எத்தனிக்கவும், தமிழ்நாட்டில் காலூன்றவும் முயற்சி செய்கின்றனர். இதன் வெளிப்படையான எடுத்துக்காட்டுத்தான் திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவை தகர்ப்போம் என்பதும், திருப்பரங்குன்றம் முருகன் மலை என்று புதிதாகக் கண்டுபிடித்ததைப் போல் கம்பி கட்டுவதும், அதன் மூலமாக ‘இந்து’ என்ற பார்ப்பன மேல் சாதி ஆதிக்க உணர்வை தட்டி எழுப்புவதும் ஆகும்.
மருது சகோதரர்கள், கட்டபொம்மன், திப்புசுல்தான் போன்ற காலனி ஆதிக்க எதிர்ப்புப் போராளிகள் வழியில் மீத்தேன், ஸ்டெர்லைட் டங்ஸ்டன் என்று கார்ப்பரேட் எதிர்ப்பு போராட்டத்திலும் சிறியதொரு வெற்றியை தமிழ் மக்கள் சாதித்திருக்கிறார்கள்.
கார்ப்பரேட்டுகளும் காவிகளும் ஒன்றிணைந்த வீரிய ஒட்டுரகமான கார்ப்பரேட் காவிப்பாசிசத்தை வீழ்த்தும் போராட்டத்தில் ஜனநாயக சக்திகளையும், கலை இலக்கிய வாதிகளையும் அறிவியல் சிந்தனை யாளர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக மதுரையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் அரங்குக் கூட்டத்திற்கு ஆதரவு தரவும், அணிதிரண்டு வரவும் அனைவரையும் அழைக்கிறோம்..
000
“காதல் செய்ய விரும்பு”
நூல் வெளியீடு
இடம்: ராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி அருகில், மதுரை.
நாள்: 24-02-2025 மாலை 05.00மணி.
வெளியிடுபவர்:
தோழர். இராவணன்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.
ஏற்புரை :
தோழர். முனைவர். புதியவன்.
நூலாசிரியர். மா. செ.கு. உறுப்பினர்.
கவிதை வாசிப்பு :
தோழர். ஆசையன்,
கரிசல் எழுத்தாளர்.
மதுரை.
அரங்குக்கூட்டம்
மக்களைப் பிளக்கும் காவி பாசிசம் வீழ்த்துவோம்!
கலை இலக்கியத்தையும் ஆயுதம் ஆக்குவோம்!
தலைமை:
தோழர். உழவன் மாரி,
செயலாளர்,
ம.க.இ.க.மதுரை.
முன்னிலை:
வழக்கறிஞர். நடராஜன் மாவட்டச்செயலாளர், மக்கள் அதிகாரம் மதுரை.
தோழர். ஜீவா,
மாநில செயற்குழு உறுப்பினர்,
ம.க.இ.க. தமிழ்நாடு.
தோழர் லதா,
மாநில செயற்குழு உறுப்பினர்,
ம.க.இ.க. தமிழ்நாடு.
சிறப்புரை :
மதுக்கூர் ராமலிங்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
தோழர்.மீ. த. பாண்டியன்,
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்.
தோழர். நாகை திருவள்ளுவன், தலைவர்
தமிழ் புலிகள் கட்சி.
வழக்கறிஞர். வாஞ்சிநாதன், ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
தோழர். நாகராஜன்,
மக்கள் அதிகாரம்,
சிவகங்கை .
தோழர். கோவன்,
மாநிலச் செயலாளர்.
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.
புரட்சிகரக் கலை நிகழ்ச்சி :
கலைக்குழு,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.
அனைவரும் வருக!
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.
தொடர்புக்கு: 9789523401