தேர்தல் வந்துட்டா மோடியை கையில் பிடிக்க முடியாது. இந்தியாவின் பிரதமராக செயல்பட்டதை விட பாஜக தேர்தல் ‘பிரச்சார பீரங்கி’யாகவே கடந்த 10 ஆண்டுகளில் மோடி செயல்பட்டுள்ளார். பாஜக பிராண்ட் என்ற அளவிலேயே மோடியை விளம்பரபடுத்துகிறார்கள்.
10 ஆண்டுகளில் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தாமல் கார்ப்பரேட் நலனுக்காக செயல்பட்ட மோடி மக்கள் வேதனையில் உழலும் போது கண்டுக் கொள்ளாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் சரியாக ஆஜராகிவிடுவார்.
அதேபோல் தான் தமிழ்நாட்டிலும் இந்த மாதத்தில் கடந்த 15 நாட்களில் 3வது முறையாக விசிட் செய்கிறார். பெரு மழை வெள்ளம் வந்து மக்கள் பாதிக்கப்பட்ட போது எட்டிப்பார்க்காத மோடி, வெள்ள நிவாரண தொகையை தமிழக அரசு கேட்டும் வழங்காத மோடி தேர்தலுக்காக அடிக்கடி தமிழ்நாடு வந்துச் செல்கிறார்.
இன்று கோவை வரும் மோடிக்கு Road Show நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நெடுஞ்சாலைகளில் சீன் காட்ட செல்லும் மோடி கோவையில் மக்கள் பாதிப்படைந்த இடங்களுக்கு செல்வாரா?
கோவை, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு மதவெறியை உருவாக்கியுள்ள பாஜக அதனை ஓட்டாக அறுவடை செய்ய இதுபோன்ற Road Show-களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்துகிறது.
இதுபோன்ற மோடி வித்தைகளை கண்டு மயங்காமல் மோடி வரும் இடங்களில் தமிழ்நாட்டை ஏன் புறக்கணிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புங்கள்.
தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தை பதற்றம் நிறைந்த மாவட்டமாகவே வைத்திருப்பதில் சங்பரிவார் கும்பல் மட்டுமல்ல கோவை போலிசாருக்கும் பெரும் பங்குண்டு.
மோடியை, பாஜகவை எதிர்த்து போராட்டம் செய்வதற்கோ, பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கோ, போஸ்டர் ஒட்டுவதற்கு, சுவரெழுத்து வரைவதற்கு என்று எதற்கு அனுமதி தராமல் மறுக்கும் போலிசார், சங்பரிவார் கும்பல் சமூக பதற்றங்களை உண்டாக்கும் நிகழ்ச்சிக்கு மட்டும் அனுமதி தருகிறார்கள்.
கொங்கு மண்டலம் எனப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாதிவெறி அமைப்புகளை தூண்டிவிட்டு அதன் மூலம் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் அரசியலை செய்து வருகிறது பாஜக.
இதனை உழைக்கும் மக்களாகிய நாம் அனுமதிக்க முடியாது. மோடி எத்தணை முரை தமிழ்நாடு வந்தாலும் பாஜக தமிழ்நாட்டிற்கு சமூகநல்லிணக்கத்திற்கும் நிரந்தர எதிரி என்பதை உணர்த்த வேண்டும்.
இது குறித்து மக்கள் அதிகாரம் தோழர்கள் பேசிய காணொளியை பதிவிடுகிறோம் பாருங்கள்.. பகிருங்கள்…