நாங்குநேரி மாணவர் மீது நடத்தப்பட்ட சாதிய கொலைவெறி தாக்குதல் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சமூகத்தையே சாதி எனும் மனநோய் தாக்கியுள்ளது. சாதி சங்கங்கள் மற்றும் கட்சிகள் சாதி அழகானது என்று பேசுவதன் மூலம் திட்டமிட்டே சாதிவெறியை இளைஞர்கள் மத்தியில் ஊட்டி வளர்க்கின்றன. மக்கள் பிரச்சினைகளை பற்றி சிந்திக்கவிடாமல் திசை திருப்பும் வேலைகளை செவ்வனவே செய்கின்றன.
இதை பயன்படுத்தி காவி பாசிச கும்பல் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான சட்டங்களையும், நீட் உள்ளிட்ட சமூகநீதிக்கு எதிரான சட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றது. இதனால் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் மட்டுமல்லாமல் அனைத்து சமூகத்தினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றது. இதை உணராத இளைய தலைமுறை பார்ப்பனியம் விரித்த வலையில் சிக்கி சுயநினைவை இழந்து திரிகின்றது.
இதனை உணர்த்தும் விதமாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புதிய பாடல் ஏன்டா வெட்டுற எங்கள் ஏன்டா வெட்டுற பாடலை பாடி வெளியிட்டுள்ளனர்.
பாடலை பாருங்கள்… பகிருங்கள்… பரப்புங்கள்…