10 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. எண்ணெய் கழிவால் வாழ்விழந்து நிற்கும் மீனவர்கள்!

சென்னையில் புயல் அறிவித்த பின்னர் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவிப்பு கொடுத்தது அரசு. புயல் ஓய்ந்து வெள்ளம் வடிந்த பின்னரும் செயற்கையாக உருவாக்கப்பட்ட அழிவால் மீன்பிடி தொழிலுக்கு போக முடியாமல் வறுமையில் உழன்று வருகிறார்கள்.

புயலால் ஏற்பட்ட வெள்ளம் வடியும் போது அதில் CPCL நிறுவனம் எண்ணெய் கழிவை கலந்து விட்டது. இதனால் கொதஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தில் ஃபைபர் படகு மூலம் மீன் பிடிக்கும் மீனவர்கள் எண்ணெய் கழிவுகள் ஆற்றின் ஓரத்தில் தேங்கியிருப்பதால் தொழிலுக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.

அரசாங்கம் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து நிற்கும் மீனவர்களுக்கு நிவாரணத்தை அறிவிக்கவில்லை என்று கூறுகிறார்கள் மீனவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here