கோரமண்டல் ஆலையை இழுத்து மூடு! எண்ணூர் மக்களை வாழவிடு! – குமுறும் மீனவ கிராமத்தினர்

0

டசென்னையின் எண்ணூரை சுற்றியுள்ள பகுதிகளில் டிசம்பர் 4 இல் வீசிய மிக்ஜாம் புயலின்போது CPCL நிறுவனம் வெளியேற்றிய  எண்ணைக் கழிவே முழுமையாக அகற்றப்படவில்லை. நிலத்தில் கச்சா எண்ணை கழிவு ஊற்றெடுக்கிறது.

இந்நிலையில் டிசம்பர் 26 நள்ளிரவில் அம்மோனியம் வாயு கசிவு ஏற்பட்டு கடலில் மீன்கள் உட்பட அனைத்தும் செத்து மிதக்கின்றன. எண்ணூர் பகுதியிலுள்ள மக்கள் மூச்சுத்திணறி, தொண்டை வலியெடுத்து மயங்கி சரிந்துள்ளனர். அவர்களில் 66 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இதனையடுத்து மீனவ கிராம மக்கள் ஆலைக்கு எதிராக போரட்டத்தில் இறங்கியுள்ளனர். தற்போது போராட்டக் களத்தில் மக்களின் ஒரே கோரிக்கை ஆலையை இழுத்து மூடு என்பது தான்.

களத்தில் போராடும் மக்களை பேட்டியை வெளியிடுகிறோம்

போராடும் மக்களுக்கு தோள் கொடுப்போம்.

பாருங்கள் பகிருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here