
“பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா” என்று பாடி கோடிகளை சுருட்டினார் ஆர்எஸ்எஸ் அரைக் கிறுக்கனான ரஜினி. மோடியின், ‘இராம ராஜ்ஜியத்தில் உய்யலாலா’ என்று பாடி சிறையில் இருந்து விடுதலையான செங்கார் என்ற பாலியல் பொறுக்கி தற்போது மீண்டும் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இராம ராஜ்ஜியத்தில் கட்டிய மனைவியின் மீதே, அதாவது சீதையின் மீது சந்தேகம் கொண்டு தீக்குளிக்க வைத்த ஆணாதிக்க வெறியன் இராமனின் ராஜ்ஜியமானது, பெண்களுக்கு எதிரானது என்பது மட்டுமின்றி, சூத்திரர்களுக்கும் எதிரானது என்பதை சம்புகன் மீதான கொலை நிரூபித்துக் காட்டியது.
ஆர்எஸ்எஸ் – பாஜக இந்திய ஒன்றிய அரசாங்கத்தை கைப்பற்றியது முதல் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குற்றங்கள், தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதல்களை வேடிக்கை பார்க்கின்ற மோடி கும்பல் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற மாநிலங்களில் செயல்படும் போலீசு மற்றும் அதற்கு துணை போகின்ற நீதிமன்றம் ஆகிய அரசு கட்டமைப்பானது பாலியல் குற்றவாளிகளை விடுவித்து சமூகத்தில் சகஜமாக நடமாட விடுகிறது.
இந்த வகையில் காஷ்மீரில் ஆசிஃபா என்ற பெண்ணை கோவிலுக்குள் வைத்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரமான எட்டுக் குற்றவாளிகளை வரவேற்று ஊர்வலம் நடத்தியது ஆர்எஸ்எஸ் – பாஜக. ஜம்மு மாநில பாஜகவே தேசியக் கொடியுடன் இதற்கு ஆதரவாக பேரணி நடத்தியது.
அதேபோல பில்கிஸ் பானு வழக்கில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 11 குற்றவாளிகள் அனைவரையும் நன்னடத்தை விதியின் அடிப்படையில் குஜராத் மாநில பாஜக விடுதலை செய்து காமுகர்களை வீதியில் நடமாட விட்டது. நாடே காறித் துப்பிய பிறகு உச்ச நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்தது.
அந்த வரிசையில் தற்போது உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் செங்கார் என்ற கிரிமினல் மற்றும் பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றவாளியும் சேர்ந்துள்ளான் என்பது தான் ஆர்எஸ்எஸ் பாஜக நடத்துகின்ற, ’இராம ராஜ்ஜியத்தின்’ உண்மை முகம். அவன் விடுதலையானவுடன் அவனை வரவேற்று உபசரித்தது உ.பி பாஜக.
ஆர்எஸ்எஸ் முன்வைக்கின்ற இந்துத்துவா என்ற கொள்கை, அதாவது பார்ப்பன மதத்தின் கொள்கை எப்போதுமே பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க வக்கிரங்களை நியாயப்படுத்துகின்ற இயல்பை கொண்டது என்பதால் பார்ப்பன மற்றும் மேல் சாதிகளுக்கு இத்தகைய தீர்ப்புகள்; காமக்கொடூரர்கள் வெளியில் நடமாட விடுவது; நீதிமன்றம் அதனை அங்கீகரிப்பது ஆகியவை எந்தவிதமான குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.
பார்ப்பன பனியாக் கும்பலின் கையில் உள்ள ஊடகங்களிலும் இத்தகைய கேடுகெட்ட காமக்கொடூரர்களில் விடுதலை வியந்தோதப்படுகிறதே ஒழிய அதன் மீதான விமர்சனங்கள் எதுவும் பெரிய அளவில் எழவில்லை.
படிக்க:
♦ “ஆர்எஸ்எஸ் முகாமில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்” தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் மரண வாக்குமூலம்!
♦ இஸ்லாமிய சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த சங்கிகளைக் காப்பாற்றும் உ.பி. பாஜக அரசு!
பெண்களை போகப் பொருளாகவும், பண்டமாகவும் நடத்துகின்ற பார்ப்பன (இந்து) மதம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களை நிகழ்த்துகின்ற சனாதன இந்துகளை, ’நம்ம நீதியரசர் சுவாமிநாதன்’ பாணியில் சொல்லப்போனால் சனாதனத்தை பாதுகாக்கின்ற இந்துக்கள் இந்த கொடுமைகளை புரிகின்ற போது வெட்கப்படுவதில்லை.
மாறாக அவர்கள் செய்த பாலியல் வன்கொடுமைகளுக்கு பரிசாக தண்டனையிலிருந்து தப்ப வைப்பது; குற்றமற்றவர் – நிரபராதி என்ற உத்தமர் பட்டம் கொடுத்து, மீண்டும் அந்த ஊருக்குள்ளேயே உழல வைப்பது போன்றவை தான் சனாதன தர்மத்தை முன்வைத்து செயல்படுகின்ற பார்ப்பன மதம் அங்கீகரிக்கின்ற வெட்கக்கேடான செயல்பாடு ஆகும்.
இல்லை என்று மறுக்கின்ற பார்ப்பன அடிமைகளுக்கு நாம் இப்படிக் கேள்வி எழுப்புவோம். “பாலியல் வன்கொடுமைகள் புரிகின்ற எவனையாவது எங்கள் மதத்தில் இவன் கிடையாது. இவன் எங்கள் மதத்தின் ஆச்சார, அனுஷ்டானங்களையும், பெண்களை மதிக்கின்ற மரபுகளையும், எதிர்த்து காமக்களியாட்டங்களிலும் வன்கொடுமைகளிலும் ஈடுபட்டுள்ளான். ஆகவே இவனை எங்கள் மதத்திலிருந்து வெளியேற்றுகின்றோம்” என்று என்றாவது பேசியிருக்கிறார்களா?. இல்லையே!
கார்ப்பரேட் சாமியார்கள் முதல் உள்ளூர் அன்றாடம் காய்ச்சி சாமியார்கள்; கஞ்சா போதையில் அலைகின்ற காசிவாசிகள்; பல்வேறு மடங்களிலும், ஆதீனங்களிலும் கூத்தடிக்கின்ற மதப் பண்டாரங்கள் உள்ளிட்ட அனைவரும் பெண்களை இழிவு படுத்துவது தொடங்கி பாலியல் வன்கொடுமை நடத்துவது வரை அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
அவர்கள் அசந்து மறந்த நேரங்களில் வெளிப்படுகின்ற மேற்கண்ட ஒன்றிரண்டு சம்பவங்களில் கூட அவர்களை தண்டிக்காமல் விடுதலை செய்து மீண்டும் கிரிமினல் குற்றச் செயலை செய்வதற்கு நீதிமன்றமே ஊக்குவிக்கிறது என்பதுதான் நீதித்துறையின் பாசிசமாக சனாதன தர்மத்தை போற்றுகின்ற நீதியரசர்களின் நீதியாக நீடிக்கிறது.
பாலியல் வன்கொடுமைகளால் பாதுகாப்பு இல்லை என்று போராட்டம் நடத்துகின்ற பெண்கள் ஒருபுறம்; பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு நீதிமன்றங்கள் குற்றவாளிகளை விடுவிக்கிறார்கள் என்று போராடுகின்ற பெண்கள் ஒருபுறம்; இதையெல்லாம் ஓரம் ஒதுக்கி வைத்துவிட்டு பாலியல் பொறுக்கிகளுக்கு பல்வேறு பதவிகளை கொடுத்து ஊக்குவிக்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜகவின் ’இராம ராஜ்ஜியம்’ மறுபுறம் என்று இந்தியாவே பெண்களுக்கு பாதுகாப்பற்ற அச்சுறுத்துகின்ற வேட்டைக்காடாக மாறி கிடைக்கிறது என்பதுதான் நிலைமை.
◾கணேசன்.
புதிய ஜனநாயகம் தினசரி






