ந்தியா இன்னும் ஒரு ஜனநாயக நாடு என்று நம்புகிற அனைவருக்கும் – கடந்த சில மாதங்களில் நடந்த நிகழ்வுகளில் ஒருசிலவற்றைக் குறிப்பிடுகிறேன். நாங்கள் வேறு ஒரு கட்டத்திற்கு நகர்ந்துவிட்டோம் என்று நான் சொன்னது இதைத்தான். எச்சரிக்கைகளுக்கான நேரம் முடிந்துவிட்டது, எங்கள் தலைவர்களுக்கு நாங்கள் அஞ்சுவது போல தற்போது மக்கள் பிரிவுகளுக்கும் நாங்கள் அஞ்சவேண்டியுள்ளது.

உள்நாட்டுப்போர் மூண்டுள்ள மணிப்பூரில், முழுக்க ஒருபக்க சார்பான காவல்துறை இரண்டு பெண்களை அக்கிராமத்தில் நிர்வாண ஊர்வலம் நடத்தி பின்னர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு கும்பலிடம் ஒப்படைத்தது. அப்பெண்களில் ஒருவரது இளைய சகோதரர் அவர் கண்முன்னே கொலைசெய்யப்பட்டார். பலாத்காரம் செய்தவர்களின் சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் தங்கள் ஆண்களுக்கு ஆதரவாக நின்று பலாத்காரம் செய்யத் தூண்டியுள்ளனர்.

பெட்டிகளுக்குள் சென்று முஸ்லிம் பயணிகளை தேடித்தேடி சுட்டுகொன்று மோடிக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.

உயர்மட்ட அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகளுடன் அடிக்கடி புகைப்படம் எடுத்துக்கொள்ளும், இரண்டு முஸ்லிம் இளைஞர்களை வாகனத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்ற வழக்கில் பிரதான குற்றவாளியான ஒரு மிகப் பிரபலமான இந்து வெறியன் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட முஸ்லீம்-பெரும்பான்மை குடியேற்றத்தின் வழியாக மதஊர்வலத்தில் பங்கேற்குமாறு இந்துக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

முக்கிய சர்வதேச நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களைக் கொண்டுள்ள குர்கானுக்கு அருகில் உள்ளது நூஹ் நகரம். அங்கு நடத்தப்பட்ட ஊர்வலத்தில் இந்துக்கள் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் வாள்களை ஏந்தியிருந்தனர். முஸ்லிம்கள் தங்களைத் தற்காத்துக் கொண்டனர். ஊர்வலம் வன்முறையில் முடிந்தது என்பதில் சந்தேகம் வேண்டாம். அதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஒரு 19 வயது இமாம் அவரது படுக்கையில் வெட்டப்பட்டு, அவரது மசூதி இடிக்கப்பட்டு எரிக்கப்பட்டது. அரசும் தன் பங்குக்கு ஏழை முஸ்லிம் குடியிருப்புகள் அனைத்தையும் புல்டோசர் மூலம் தகர்த்து நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடவைத்தது.

இது குறித்து பிரதமர் எதுவும் கூறவில்லை. இது தேர்தல் காலம். வரும் மே மாதம் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. நடப்பவை எல்லாம் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதி. ஏற்கனவே துருவப்படுத்தப்பட்ட மக்கள்தொகையை மேலும் துருவமுனைக்க இன்னும் அதிக இரத்தம் சிந்துதல், வெகுஜனக் கொலைகள், தாக்குதல்கள், பாசாங்கு போர்கள் என்று எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஒரு சிறிய பள்ளியின் வகுப்பறையில் படமாக்கப்பட்ட சில்லிடவைக்கும் ஒரு சிறிய வீடியோவைப் பார்த்தேன். ஆசிரியை ஒரு முஸ்லீம் குழந்தையை தன் மேசைக்கு அருகில் நிற்கவைத்து மற்ற இந்து மாணவர்களை ஒவ்வொருவராக வந்து அறையும்படி கூறுகிறார். கடுமையாக அடிக்காதவர்களைக் கடிந்துகொள்கிறார். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவெனில், அந்தக் கிராமத்தில் உள்ள இந்துக்களும், காவல்துறையினரும் முஸ்லிம் குடும்பத்தை புகார் கொடுக்கவேண்டாம் என்று மிரட்டி அச்சிறுவனின் பள்ளிக்கட்டணத்தை திருப்பி அளித்து, பள்ளியிலிருந்து வெளியேற்றயதுதான்.

இதையும் படியுங்கள்: 

இந்தியாவில் நடப்பது இணைய பாசிசத்தின் தளர்வான வகையல்ல. நாங்கள் நாஜிகளாகி விட்டோம் என்பதுதான் உண்மையான விஷயம். எங்கள் தலைவர்கள் மட்டுமல்ல, எங்கள் தொலைக்காட்சி சேனல்கள், செய்தித்தாள்கள் மட்டுமல்ல, எங்கள் மக்களில் பெரும்பகுதியினரும் கூட நாஜிகளாகி விட்டனர். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், தென்னாப்பிரிக்காவிலும் வாழும் இந்தியவம்சாவழி இந்து மக்களிடையே பெரும் எண்ணிக்கையிலானோர் இந்த பாசிஸ்டுகளை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆதரிக்கின்றனர். நம் ஆன்மாக்களுக்காகவும், நம் குழந்தைகள் மற்றும் நம் குழந்தைகளின் குழந்தைகளுக்காகவும் நாம் எழுந்து நிற்க வேண்யுடிள்ளது. நாம் தோல்வியடைவோமா அல்லது வெற்றி பெற்றோமா என்பது முக்கியமல்ல. அந்த பொறுப்பு இந்தியாவில் இருக்கும் எங்கள்மீது மட்டும் இல்லை. 2024-ல் மோடி வெற்றி பெற்றுவிட்டால் மாற்று கருத்துக்களுக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டுவிடும். இந்த மண்டபத்தில் உள்ள யாரும் என்ன நடக்கிறது என்பதைத் தெரியாததுபோல் இனிமேலும் பாசாங்கு செய்ய வேண்டாம்.

(முற்றும்)

மொழியாக்கம்: செந்தழல்

(செப்டம்பர் 12 அன்று ஆசாதி – சுதந்திரம், பாசிசம், புனைவு (Azadi – Freedom, Fascism, Fiction) என்ற அருந்ததிராயின் கட்டுரையின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்கான வாழ்நாள் சாதனைக்கான 45-வது ஐரோப்பிய கட்டுரை விருது வழங்கப்பட்டது. அந்த கூட்டத்தில் அருந்ததி ராய் பேசிய உரையின் சுருக்கம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here