ஜூலியஸ் அசாஞ்சேவை கொலைகார அமெரிக்காவிடம் ஒப்படைக்காதே!


ப்கானிலும், ஈரானிலும் மக்களை  கொன்று குவித்த அமெரிக்காவின் ரகசிய  ஆவணங்களை ஜூலியஸ் அசாஞ்சே உலகுக்கு அம்பலப்படுத்தினார். கொலைவெறியோடு அவரை விடாமல் துரத்தியது. 2019ல் ஈக்வடார் தூதரகத்தில் இருந்து அவரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது லண்டன் போலீசு.

ஜூலியஸ் அசாஞ்சே கைது செய்யப்படும் காட்சி

சிறையில் கடுமையாக சித்திரவதை செய்தார்கள். ஆறுமாதம் கழித்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பொழுது, அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லை.

ஐநாவின் சிறப்பு பிரதிநிதி நேரில் ஆய்வு செய்து, சித்திரவதை செய்ததை உறுதிப்படுத்தினார். உரிய சிகிச்சை தரவில்லை என்றால் சிறையிலேயே செத்துவிடுவார் என 60 மருத்துவர்கள் கூட்டு அறிக்கையாக வெளியிட்டார்கள்.இப்பொழுது அமெரிக்காவிடம் அவரை ஒப்படைப்பதற்கான வேலைகளை வேகமாக செய்துவருகிறார்கள்.

படிக்க:

 பொய்வழக்குகளாலும் போலீசு அடக்குமுறைகளாலும்      உரிமைப்போராட்டங்ளை தடுக்க முடியாது!

 ஆனந்த் டெல்டும்டேவின் சிறை வாழ்வின் இரண்டாண்டு நிறைவு: அம்பேத்கர் பேத்தியின் உருக்கமான கடிதம்!

லண்டன் நீதிமன்றம் “அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம். இறுதி முடிவை உள்துறை செயலர் முடிவெடுப்பார்” என அறிவித்துவிட்டது. உலக ரவுடி அமெரிக்காவின் கொடூர முகத்தை நன்றாக உணர்ந்தும் கூட மக்கள் மீதான மாறாத அன்பால் தான் அம்பலப்படுத்தினார்.

அமெரிக்காவிடம் ஒப்படைத்தால், 175 ஆண்டுகள் வரை தண்டனை கொடுத்து சிறையிலேயே கொன்றுவிடுவார்கள். இப்பொழுது மக்களும் ஜனநாயக சக்திகளும் அவருக்காக ஒரே குரலில் ஒலிக்கவேண்டும்.

“கொலைகார அமெரிக்காவிடம் ஒப்படைக்காதே!

 ஜூலியஸ் அசாஞ்சேவை விடுதலை செய்!”

சாக்ரடீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here