கோவைக்கு அருகில் உள்ள சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த ஜூன் 17ஆம் தேதி இரவு இந்த கோவிலில் உள்ள ராகு கேது சிலைகள் மற்றும் விநாயகரின் எலி வாகன சிலை அடித்து நொறுக்கப்பட்டு இருப்பது, மறுநாள் காலையில், அந்த ஊரில் உள்ள மக்களுக்கு தெரியவந்துள்ளது.
மக்கள் மூலம் இந்தத் தகவல் கிடைத்த உடனே காவல்துறையினர் அந்த கோவிலுக்கு வந்து புலன் விசாரணையை துவங்கி விட்டனர். மறுநாள் மதியம் வாய்க்கில் தனது பரிவாரங்களுடன் வந்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான AP.முருகானந்தம் காவல்துறையினரிடம் சிலைகளை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் இல்லாவிட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், சாலை மறியலில் ஈடுபட வேண்டும் என்றும் அப்பொழுதுதான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் மேற்கொண்டு இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க முடியும் என்றும் பொதுமக்களிடம் பேசி அவர்களை சாலை மறியலுக்கு அழைத்துள்ளார்.
ஆனால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் ‘இது எங்கள் ஊரில் உள்ள எங்கள் கோவிலின் பிரச்சனை. எங்கள் ஊர் பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
கோவில் சிலைகளை உடைச்சுட்டாங்க.. ஓடி வாங்க ஓடி வாங்க.
கலவரத்திற்கு கூப்பிட்ட பாஜக கும்பல்..
செருப்பாலடித்து விரட்டிய பொதுமக்கள்.. 😂😂 pic.twitter.com/D5IEKrILx0
— Unmai Kasakkum | உண்மை கசக்கும் (@Unmai_Kasakkum) June 19, 2025
நீங்கள் இந்தப் பிரச்சனையில் உள்ளே வந்தால் என்ன செய்வீர்கள் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போங்கள்’ என்று பேசி விரட்டியடித்துள்ளனர்.
இப்படி பேசி கலவரம் முயற்சியில் ஈடுபட்ட பாஜகவினரை பொதுமக்கள் விரட்டி அடிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பாஜகவினரின் உண்மை முகம் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த நிலையில் பாஜகவின் முன்னாள் தமிழக தலைவரான அண்ணாமலை இந்த சிலை உடைப்பிற்கு கண்டனம் தெரிவித்ததுடன் இந்த சிலை உடைப்பில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்; தண்டிக்க வேண்டும் என்றும் அறிக்கை விட்டு மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றார்.
இப்படி பாசிச பாஜகவினர் பலவகையில் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த முயன்று தோற்றுப் போய்யுள்ளனர்.
இதற்கிடையில் இந்த சிலை உடைப்பு வேலையில் ஈடுபட்ட நபரை கண்டுபிடிப்பதில் காவல்துறையினர் மிகவும் தீவிரமாக செயலாற்றினர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கரண்குமார் என்ற நபர் தான் இதில் ஈடுபட்டவர் என்பதை அறிந்து அவரை கைது செய்வதற்கு பீகார் சென்ற நிலையில் அந்த நபர் அங்கிருந்து ஆந்திராவிற்கு சென்று விட்டதை அறிந்து பின்பு தமிழக காவல்துறையினரும் ஆந்திராவிற்கு வந்து அந்த நபரை 24-6-2025அன்று கைது செய்துள்ளனர். அதாவது குற்றச் செயல் நடந்து ஒரு வாரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து விட்டனர்.
படிக்க:
♦ சாமி சிலையை தொட்டதால் தலித் அடித்து கொலை! இதுதான் இராமராஜ்ஜியம்!!
♦ பீப் கடை போடாதே மிரட்டி அம்பலமான கோவை சங்கி!
பின்னர் அந்த நபரிடம் விசாரித்ததில், தான் குடிபோதையில் இருந்ததாகவும் தனக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டதால் தண்ணீருக்காக கோவிலுக்குள் நுழைந்தாகவும் அங்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காததால் கோபத்தில் சிலைகளை உடைத்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதன் மூலம் சிலை உடைப்பு என்பது மதம் தொடர்பான பிரச்சனை அல்ல; மாற்று மதத்தினர் யாரும் இந்த செயலில் ஈடுபடவில்லை என்பதும் தெளிவாக தெரிய வந்திருக்கிறது.
இதை முன்கூட்டியே யூகித்திருந்த அந்த ஊரின் பொதுமக்கள், இந்த பிரச்சனையை பிஜேபியினர் மதப் பிரச்சனையாக மாற்ற முயல்வார்கள் என்பதையும் அறிந்திருந்த காரணத்தால் மிகச்சரியாக செயல்பட்டு பாஜகவினரின் கலவரம் முயற்சியை தடுத்து விட்டனர் என்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது.
எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் அதன் மூலம் தமிழகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ், பாஜகவின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் ஆர் எஸ் எஸ் பாஜகவினரின் நெஞ்சில் இறங்கிய இடியாகவே இந்த சம்பவம் அமைந்துள்ளது.
இவர்களின் கலவரம் முயற்சியை மக்களிடம் விரிவாக பிரச்சாரம் செய்து அம்பலப்படுத்துவதன் மூலம் தான் சங்கிகளின் பாசிச நோக்கத்தை முற்றாக முறியடிக்க முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
— குமரன்
கலவரக்கார பாஜக -வின் ஆட்டுக்குட்டி அண்ணாமலை மற்றும் முருகானந்தம் இவர்களின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட கோவை சின்னியம்பாளையம்
கிராம மக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இப்படிப்பட்ட இந்துத்துவ மதவெறி கொலை பாதகர்கள் இப்படித்தான் அமைதியாக இருக்கும் கிராமங்களில் – நகரங்களில் சாதிவெறி ஊட்டி மதவெறி ஊட்டி கலவரத்தை நடத்துவதும் அதன் மூலமாக அரசியல் அறுவடை செய்யும் முனைவதும் வாடிக்கையான தொழிலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் ஏற்கனவே மண்டைக்காடு கோவை போன்ற பகுதிகளில் கலவரத் தீயை மூட்டி சொல்லண்ணாத் துயரத்தில் சிறுபான்மை இன மக்களை பெரும் சோகத்திற்கு உட்படுத்தினர். தற்போது முருகன் மாநாடு என்ற காவி அரசியல் மாநாட்டினை நடத்தி முடித்த கையோடு இந்து கோவில் சிலைகளை உடைத்த உண்மை இந்து குற்றவாளியை காவல்துறை கைது செய்ததன் மூலம் உண்மை வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதன் மூலம் சின்னியம்பாளையம் இந்து மக்கள் எப்படி சுதாரித்துக் கொண்டு ஆர்எஸ்எஸ் காலிகள் முருகானந்தம் போன்றோரை விரட்டி அடித்தார்களோ அதே கண்ணோட்டத்தில் தமிழ்நாடு மட்டுமல்ல; இந்திய நாடு முழுமையும் தம்மை இந்து என்று கருதிக் கொண்டிருக்க கூடிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் விழிப்புணர்ச்சி கொண்டு இந்த பாசிச காவி கூட்டத்தைக் குழிதோண்டி புதைக்க முற்பட வேண்டும். தக்க சமயத்தில் சின்னியம்பாளையம் சம்பவத்தை அம்பலப்படுத்தி கட்டுரை படைத்த தோழர் குமரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!