காஷ்மீர் டைம்ஸ் பத்திரிக்கை மீதான பாசிச தாக்குதல்!
செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவற்றை தொடர்ச்சியாக ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் தடுத்தும் அவர்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவியும் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி பாசிச சர்வாதிகாரத்தை நிறுவி வருகிறது.

இதுதான் இன்றைய இந்தியா! 

கருத்து சுதந்திரத்திற்கு கல்லறை கட்டும் வகையில் நடக்கும் பத்திரிகைகள் மீதான தாக்குதல்!

இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் ஊடகத்தின் ஜனநாயக உரிமை ஆகியவை படிப்படியாக கீழே சென்று கொண்டுள்ளது என்று உலக பத்திரிக்கை சுதந்திர அமைப்பின் சமீபத்திய ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இந்தியாவின் பத்திரிக்கை சுதந்திரம் 151 வது இடத்திற்கு சென்றுள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.

இதனை நிரூபிக்கின்ற வகையில் சமீபத்தில் ஜம்முவில் ‘காஷ்மீர் டைம்ஸ்’ என்ற பத்திரிக்கை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக தாங்கள் முன்வைக்கின்ற தேசத்திற்கு விரோதமான நடவடிக்கைகள் தொடர்பாக ஜம்முவில் இருந்து செயல்படுகின்ற ‘காஷ்மீர் டைம்ஸ்’ என்ற பத்திரிக்கை, கட்டுரைகள் எழுதியதாகவும் அதனை காஷ்மீர் மாநிலத்தின் மாநில புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது பற்றி காஷ்மீர் மாநிலத்தின் புலனாய்வு அமைப்பு, “இந்த ஆங்கில பத்திரிக்கை அனுராதா பாஸின் ஜம்வால் என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது. இவை எழுதிய கட்டுரைகள் தேச விரோத நடவடிக்கைகளுக்கு துணை போவதாகவும், தேசத்திற்கு எதிரான அவதூறு பரப்புகின்றது என்றும், பிரிவினைவாத கருத்துக்களை பரப்ப முயன்றது என்றும், இந்த நாளிதழ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

வழக்கம் போலவே இந்த அலுவலகத்தை சோதனையிடும் போது ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள்கள் சிக்கியதாகவும் செய்திகளை வெளியிட்டு பீதியூட்டி உள்ளது.

இந்திய ஒன்றிய அரசாங்கத்தை ஆண்டு வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பத்திரிகைகளின் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் தாக்குதல்களை அதிகரித்து வருகிறது.

நடுநிலை நாளேடுகள் என்று கூறிக்கொண்ட பணம் மூட்டைகளின் பிடியில் இயங்குகின்ற டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஹிந்து மற்றும் அதன் பிராந்திய பத்திரிகைகள் அனைத்தும் ஏறக்குறைய மோடி கும்பலில் கட்டுப்பாட்டின் கீழ் சென்று கோடி(Godi) மீடியாக்களாக சீரழிந்துள்ளனர்.

படிக்க:

 பாசிஸ்டுகளின் ஆட்சியில் பறிக்கப்படும் பத்திரிகை சுதந்திரம்!

 காசா முதல் காஷ்மீர் வரை  ஊடகவியலாளர்களின் செயல்பாடு?

இந்திய ஒன்றிய அரசாங்கம் கொடுக்கின்ற அறிக்கைகளை எவ்விதமான ஆய்வு இன்றி அப்படியே வெளியிட்டு தனது எஜமான விசுவாசத்தை காட்டுகின்றனர்.

ஆளும் வர்க்கத்தின் பிரிவினர் கைப்பற்றி வைத்துள்ள பத்திரிகைகள் மற்றும் செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் வர்க்க சார்புடையதாகவே இயங்கி வருகிறது.

அதாவது பெரும்பான்மை உழைக்கும் மக்கள் நலனை புறக்கணித்தும் அற்ப பிறவிகளான முதலாளித்துவ சக்திகள் மற்றும் அவர்களின் ஏவலாளிகளின் செய்திகள், மக்களை மூடத்தனத்திலேயே ஆழ்த்துகின்ற மத நம்பிக்கைகள், மூட பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்கு என்ற முறையில் பார்க்கப்படுகின்ற திரைப்படங்களை உசுப்பேத்தி சினிமா கதாநாயகர்களை உருவாக்குவது என்று ஒட்டுமொத்த சமூக அமைப்பையுமே இத்தகைய பத்திரிகைகள் ஊடகங்கள் தொலைக்காட்சிகள் சீரழித்து வருகின்றன.

இவற்றை எதிர்த்து உழைக்கும் மக்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஜனநாயக உணர்வுடைய பத்திரிக்கையாளர்கள் தான் ஓரளவிற்கு உண்மை நிலையை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர்.

அப்படிப்பட்ட செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவற்றை தொடர்ச்சியாக ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் தடுத்தும் அவர்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவியும் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி பாசிச சர்வாதிகாரத்தை நிறுவி வருகிறது.

இத்தகைய நடவடிக்கைகளில் ஒன்று தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெளியாகின்ற ‘காஷ்மீர் டைம்ஸ்’ பத்திரிகையின் மீதான தாக்குதல் என்றே பார்க்க முடியும்.

புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்துகின்ற சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணிப்பது புதிய ஜனநாயகம் தினசரியை முடக்கியது, அதன் அடுத்த கட்டமாக மக்கள் அதிகாரம் முகநூல் பக்கத்தையும் முடக்கியது என்று தனக்கு எதிராக எழுகின்ற விமர்சனங்கள் மாற்றுக்கருத்துகள் மற்றும் தனது அரசியல் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக போராடுகின்ற புரட்சிகர அமைப்புகள் நடத்துகின்ற பத்திரிகைகள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதை போலவே மேற்கண்ட பத்திரிகையின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.

கருத்து சுதந்திரத்தை பறித்தெடுப்பதை மறைப்பதற்கு தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் பிரச்சாரம் செய்கிறார்கள் பிரிவினைவாதத்தை முன் வைக்கிறார்கள் என்று தீவிரவாத பயங்கரவாத பிரிவினைவாத பீதியூட்டி தாங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு நியாயத்தை தேடுகின்றனர் ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பல்.

இதன் விளைவாகவே இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது 151 வது இடத்திற்கு சென்றுள்ளது.

இந்திய ஒன்றியத்தின் பிரதமரான பாசிச மோடிக்கு உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ, ஏகாதிபத்திய முதலாளித்துவ எடுபிடிகள் நடத்துகின்ற பத்திரிகைகள், ஊடகங்கள் பல்வேறு பட்டங்களையும், பரிசுகளையும் வழங்கி கொண்டாடுவதும் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அதனை வழிமொழிந்து கோடி மீடியாக்களாக சீரழிந்து வருவதும் இன்றைய இந்தியாவின் பத்திரிக்கை சுதந்திரத்தின் எதார்த்த நிலைமையாக உள்ளது.

கருத்து சுதந்திரத்திற்கு எதிராக நடத்தப்படுகின்ற இத்தகைய பாசிச பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து முறியடிப்பதும் உண்மையான ஜனநாயகத்திற்காக போராடுவதும் இன்றைய காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நிரலாக பத்திரிகைகளுக்கு மாறி உள்ளது.

மருது பாண்டியன்.

புதிய ஜனநாயகம் தினசரி 

1 COMMENT

  1. காஷ்மீர் டைம்ஸ் பத்திரிக்கை மீதான பாசிச தாக்குதல் !

    பத்திரிகைகள் மீதான கருத்து சுதந்திரத்திற்கு கல்லறை கட்டும் பாசிச தாக்குதல் !

    பத்திரிகைகள் நாடு முழுவதும் இயங்குகிறது இதில் இந்தியாவில் பத்திரிக்கை ஊடகங்கள் பார்த்து அதற்கு உள்ளாகி கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட 151 வது இடத்தில் தள்ளப்பட்டுள்ளது பத்திரிக்கை ஊடகங்களை மிரட்டி பாசிச தாக்குதலை மோடி அரசு கொடுத்து வருகிறது இதன் விளைவாக சமூக பழைய தளங்களில் கருத்து பரிமாற்றத்துக்கும் தடை விதித்து சமூக ஊடகங்களை காவி கும்பல் முடக்கியது மோடி அரசின் கார்ப்பரேட் காவி பாசிச ஊடகங்களின் மீதான தாக்குதலை ஓர் அணையில் திரண்டு வீழ்த்துவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here