மோடியும் அமித்ஷாவும் அக்யூஸ்ட்டுகள் (A1,A2) ராதாரவி பேசியதில் உண்மையுள்ளது!

ராதாரவி பேசியதில் உண்மை உள்ளது என்றுதான் நாமும் சொல்கிறோம். 2002ல் குஜராத் முதல்வராக இருந்த மோடி முஸ்லிம்கள் மீது நடத்திய இனப்படுகொலை உண்மைதான்.

0

சென்னையில் நேற்று பாஜக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜகவின் நடிகர் ராதாரவி பேசியது தற்போது வைரல் செய்தியாக மாறியுள்ளது. இந்தியாவில் இரண்டு அக்யூஸ்ட் தான் ஒன்னு ஐயா மோடிஜி இன்னொருத்தர் அமித்ஷா அவர்கள் உங்களை கருவறுத்து விடுவார்கள் என்று பேசியுள்ளார். மேலும் பாஜகவில் இதுபோன்ற பெருமையான விஷயங்களையும் பாஜகவினர் ரசிக்கும்படி  பேசியுள்ளார் ராதாரவி.

அவர் பேசியது தவறானது அது அவருடைய சொந்த கருத்து என்று யாரும் இதுவரை மறுத்து பேசவும் இல்லை கருத்து கூறவும் இல்லை. பேசியதை பாஜகவினரும் பெருமையாகவே பார்க்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளில் 10 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்துள்ளார்கள். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தன்வசப்படுத்தி உள்ளார்கள். அதை மனதில் வைத்து தான் மாநில அரசை மிரட்டும் விதமாக ராதாரவி பேசியிருப்பார்.

ராதாரவி பேசியதில் உண்மை உள்ளது என்றுதான் நாமும் சொல்கிறோம். 2002ல் குஜராத் முதல்வராக இருந்த மோடி முஸ்லிம்கள் மீது நடத்திய இனப்படுகொலை உண்மைதான். பாஜக சங்பரிவார கும்பல் இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணின் பிறப்புறுப்பில் கையை விட்டு குழந்தையை கருவறுத்து கொன்றதும் உலகம் அறிந்த விசயம் தான்.


இதையும் படியுங்கள்:  குஜராத் இனப்படுகொலை 2002! குற்றவாளிகள் தப்பி விட்டனர்! எதிர்த்து போராடியவர்கள் ஒடுக்கப் படுகின்றனர்!


 

மோடியின் ஆட்சியில் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் 2 ஆயிரம் அப்பாவி இஸ்லாமியர்களும் அவர்களின் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். அதில் பலர் எரித்துக் கொல்லப்பட்டார்கள் இஸ்லாமிய பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இதையெல்லாம் ராதாரவிக்கு தெரியாதா என்ன அதனால்தான் மோடியை அக்யூஸ்ட் என்று சொல்லியிருப்பார்.

கடந்த 2005ஆம் ஆண்டு மோடியை கொல்ல சதி செய்ததாக கூறி சொராபுதீன் மற்றும் அவரது மனைவி குஜராத் காவல்துறையால் கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் சொராபுதீனும் அவரது மனைவியும் முக்கிய சாட்சியாக கருதப்பட்டவரும் ஒருவர் பின் ஒருவராக என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த என்கவுண்டர் போலியானது என விசாரணை கூற இதில் சம்பந்தபட்ட  அப்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கைது செய்தனர்.

உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் விசாரணை தொடர்ந்தது. நீதிமன்ற உத்தரவின்படி அமித்ஷா மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். பின்னர் 2014ல்  மோடி பிரதமராக பதவி ஏற்ற பின் காட்சி மாறியது.  சொராபுதீன் என்கவுண்டர் வழக்கு சிபிஐக்கு மாறியது. அமித்ஷாவை ஆஜராக  சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி.உத்பத் உத்தரவிட்டார். ஆனால் அமித்ஷா ஆஜராகவில்லை. பின்னர் சிறப்பு நீதிபதி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி உத்பத் மாற்றப்பட்டார் .

அதன்பின் இந்த வழக்கு நீதிபதி லோயாவிடம் சென்றது அங்கும் அமித்ஷா ஆஜராகவே இல்லை. பின்னர் 2014 டிசம்பர் நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்தார். இன்றுவரை அவரது மரணம் மர்மமாகவே உள்ளது.  அதன்பிறகு அமித்ஷா அந்த வழக்கிலிருந்து விடுதலை ஆனது வேறு விஷயம். இதை எல்லாம் தெரிந்துதான் அமித்ஷாவை அக்யூஸ்ட் என்று ராதாரவி பேசியிருப்பார்.


இதையும் படியுங்கள்:  அடுத்த 40 ஆண்டுகள் பாஜகவின் சகாப்தம்! அமித்ஷா கனவு! அனுமதிக்காதே! கலைக்க ஒன்றுபட்டு போராடு!


இப்படி மோடி மற்றும் அமித்ஷா குறித்தும் அவர்கள் சார்ந்த சங்பரிவார் கும்பலின் படுகொலைகள் குறித்தும் அடிக்கிக் கொண்டே போகலாம். இன்று வரை அவர்களது குற்றங்கள் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விசயம் தான் என்றாலும் அவர்கள் கட்சியை சார்ந்த நபரே பேசியிருப்பது விவாத பொருளாக மாறியுள்ளது.

தமிழகத்தில் அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் எல்லாம் பாஜகவில் இணைந்தார்கள். ரவுடிகளின் புகலிடமான கமலாலயமே நிரம்பி வழிகிறது. பாஜக அக்யூஸ்டுகளின் கூடாரமாக மாறியுள்ளது. அதற்கு இரண்டு தலைவர்கள் வேண்டாமா அதற்குத்தான் முன்னணியில் உள்ள மோடியையும் அமித்ஷாவையும் ராதாரவி கூறியுள்ளார் அவரது பேச்சில் இருப்பது உண்மையே. இந்த இரண்டு அக்யூஸ்டுகளின் பிடியில் தான் இந்தியாவே உள்ளது. அவர்களிடமிருந்து அதனை மீட்பதே  நம்முடைய முதற்கடமையாக உள்ளது.

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here