ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் உலகை சூறையாடுவதற்கு பயன்படுத்துகின்ற முக்கிய ஆயுதங்களில் ஒன்றான நிதி ஏற்றுமதி அதாவது மூலதன ஏற்றுமதி எப்படி சட்டவிரோதமான முறையில் நாடு விட்டு நாடு தாவுகிறது. கண்டம் விட்டு கண்டம் தாவுகிறது.

இத்தகைய ரகசிய உலக பேர்வழிகளின் வங்கிக் கணக்குகள் மற்றும் இந்த மோசடிப் பேர்வழிகளின் கணக்குகளை பராமரிக்கின்ற ரகசிய தன்மைகொண்ட வங்கிகள் ஆகியவற்றின் யோக்கியதை என்ன என்பதை எளிய நடையில் அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.
பொருளாதாரக் கட்டுரைகளை புரிந்து கொள்ள முடியாமல் வெறும் புள்ளிவிவரங்களை அடுக்கி மிரட்டுகின்ற எழுத்தாளர்கள் மத்தியில் தமிழில், எளிய நடையில் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் நிதி மோசடிகளை அம்பலப்படுத்துகின்ற தோழர் சமந்தாவிற்கு எமது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

நிதி ரகசியம்:

நிதி ரகசியம் என்பது பணக்கார தனிநபர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், குற்றவாளிகள் ஆகியோர் தங்கள் சொத்துக்களுக்கான வரியை கட்டாமல் மோசடி செய்யவும், சட்டத்தின் ஆளுகையிலிருந்து தப்பிப்பதற்காகவும் சிக்கலான நிதி வழிமுறைகளைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது.நிதி இரகசியமானது வரி மோசடியை சாத்தியமாக்குகிறது, போதைப்பொருள் விற்பனையையும், மனித கடத்தலையும் லாபகரமாக்குகிறது.

நிதி ரகசியமானது சட்டபூர்வமான ரகசியத்தன்மையிலிருந்து வேறுபட்டது. ஒரு வங்கி உங்கள் கணக்கு விவரங்களை இணையதளத்தில் வெளியிடாது, அதே போல் ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை அறையின் கதவில் உங்கள் நோய்களின் விவரங்களைத் தொங்கவிடமாட்டார். ஆனால் நிதி இரகசியம் என்பது, தொடர்புடைய தகவல்களைச் சேகரிக்க மறுப்பதையும், அல்லது தேவைப்படும்போது சட்ட அதிகாரிகள், அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ள மறுப்பதையும் – எடுத்துக்காட்டாக, ஒரு நபர் முறையாக வரி கட்டுகிறாரா அல்லது சட்டத்திற்குக் கட்டுப்படுகிறாரா என்பதை உறுதிப்படுத்துதல்- குறிப்பிடுகிறது.
தீங்கு விளைவிக்கும் நிதி இரகசியம் வெவ்வேறு “சுவைகளில்” வருகிறது. மிகவும் பிரபலமான சுவையானது வெனிலா சுவிஸ்-பாணி வங்கி ரகசியம் ஆகும், அங்கு வங்கியாளர்கள் வாடிக்கையாளரின் ரகசியங்களை கல்லறைக்கு எடுத்துச் செல்வதாக உறுதியளிக்கிறார்கள்.

இரண்டாவது சுவையானது ஆட்சிப் பிரதேசங்களில் அறக்கட்டளைகள், பெருநிறுவனங்கள், அமைப்புகள், போலிநிறுவனங்கள் போன்ற ஏற்பாடுகளை உருவாக்க அனுமதித்து – அதன் உடைமையாளர் பற்றிய தகவல்கள், செயல்பாடு, அதன் நோக்கம் ஆகியவற்றை இரகசியமாக வைத்திருக்கவும், சட்டப்பூர்வ உடைமையாளர் தகவல்களை குழப்படியாக்கவும் உதவுகிறது. இந்த கட்டமைப்புகள் – எடுத்துக்காட்டாக, சுவிஸ் வங்கிக் கணக்கு, மத்திய லண்டனில் குடியிருப்பு சொத்து, மொனாக்கோவில் ஒரு பந்தயக் குதிரை, எஸ்&பி 500 நிறுவனத்தில் பங்குகள் அல்லது கப்பல் – போன்ற சொத்துக்களை வைத்திருக்கலாம் ஆனால் அந்த சொத்துக்களை யார் அனுபவிக்கிறார்கள் அதன் வருவாய் யாரை சேர்கிறது போன்ற தகவல்களைக் கண்டறிவதை கடினமாக்குவதற்கும், ரகசியமாகவைத்திருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இரகசியத்தின் மூன்றாவது சுவையானது, நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்தும் ஆட்சிப் பிரதேசங்களை குறிப்பிடுகிறது. உள்நாட்டில் உள்ள தகவல்களைப் பின்தொடர்வதற்கும் சேகரிப்பதற்கும் வேண்டுமென்றே மறுப்பதன் மூலம் இது செய்யப்படலாம். மற்ற ஆட்சிப் பகுதிகளுடனான தவறிழைக்கமுடியாத தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் கூட பரிமாற்றம் செய்ய முதலில் தகவல் கிடைக்கவில்லை என்றால் பயனற்றது.
நிதி இரகசியமானது மற்ற ஆட்சிப்பகுதிகளுடன் தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்பாததன் மூலமும் செய்யலாம் – தகவலுக்கான கோரிக்கைக்குப் பிறகு மறுப்பதன் மூலமோ, அல்லது அதிகாரப்பூர்வமாகவோ, பிற வழிகளிலோ தகவல் பரிமாற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்துதல். பல ஆட்சிப் பகுதிகள் தங்கள் சொந்த சட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட இணக்கமின்மையுடன் கூடிய தொழில்வணிக மாதிரியை உருவாக்குகின்றன.

இந்த சுவைகள் அனைத்தும் அமைப்பாக்கப்பட்ட குற்றம், மோசடி, திருட்டு, அரசாங்க வளங்களை திசைதிருப்பல், சட்டவிரோத மரம் வெட்டுதல், லஞ்சம், சட்டவிரோத வைரங்களை பெறுதல், வரி ஏய்ப்பு போன்ற பலவற்றை எளிதாக்கும் திறன் கொண்டவை. வரி நீதிக்கான வலையமைப்பு உருவாக்கிய நிதி இரகசியக் குறியீடு, இரகசிய ஆட்சிப் பிரதேசங்களின் நாடுகடந்த அமைப்பு பற்றி மிக விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.

தனிநபர்கள் தங்கள் செல்வம், நிதி விவகாரங்களை சட்டத்தின் ஆட்சியிலிருந்து மறைக்க உதவும் ஒரு வரி புகலிடமே இரகசிய ஆட்சிப் பிரதேசம் என அழைக்கப்படுகிறது, இது குறைவான வரி செலுத்துவதற்கு மட்டுமல்லாது, பணமோசடி, பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி போன்ற பிற நிதிக் குற்றங்களுக்கும் துணை போகிறது.

நிதி ரகசியம் மோசமானதா?
நிதி ரகசியம் மோசமானது, ஏனெனில் இது டிரில்லியன் கணக்கான சொத்துக்கள் மற்றும் சொத்துக்களை சட்டத்தின் ஆட்சிக்கு அப்பால் செயல்பட அனுமதிக்கிறது. நிதி இரகசியமானது வரி மோசடியை சாத்தியமாக்குகிறது, போதைப்பொருள் விற்பனையாளர்கள் வங்கி மற்றும் மனித கடத்தல் லாபகரமானது. சட்டத்தை மதிக்கும் வரி செலுத்துவோரின் இழப்பில் செல்வந்தர்கள் செல்வத்தை குவிக்க இது அனுமதிக்கிறது, இதன் மூலம் செல்வந்தர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் கொள்கைகள், கொள்கை வகுப்பாளர்களிடம் தேவையற்ற செல்வாக்கை பெற அனுமதிக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள US$21 முதல் $32 டிரில்லியன் தனியார் நிதிச் செல்வம், இரகசிய ஆட்சிப் பிரதேசங்களில், வரி விதிக்கப்படாமல் அல்லது குறைந்த வரியுடன் பாதுகாக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அறக்கட்டளைகள் எவ்வாறு செயல்படுகின்றன?
செல்வத்தின் உரிமையாளர்களின் அடையாளத்தை வெளியே தெரியாமல் ரகசியமாகப் பாதுகாக்கவும், குறைந்த வரி செலுத்தும் நோக்கத்திற்காகவும், சட்டத்தின் ஆளுகையில் இருந்து தப்பிக்கவும் சொத்துரிமையின் நிலையை குழப்பவும் அறக்கட்டளைகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம். நவீன உலகளாவிய நிதியமைப்பில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான வழிமுறைகளில் ஒன்றாக அறக்கட்டளைகள் உள்ளன.

அறக்கட்டளைகள் பெரும்பாலும் ஒரு தனிநபரின் செல்வத்தை அவரே அதை செய்ய முடியாத சூழ்நிலைகளில் பிறருக்கு மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன, உதாரணமாக பெற்றோர் மரணத்திற்குப் பிறகு தங்கள் செல்வத்தை ஒரு அறக்கட்டளையில் சேமித்து வைக்கலாம், அது குழந்தைக்கு மாதாந்திர வருவாயை செலுத்துகிறது, குழந்தை பெரியவராகும் போது, பெற்றோர் தமக்காக விட்டுச் சென்ற அறக்கட்டளையின் மூலம் வைத்திருக்கும் அனைத்து பணம் மற்றும் சொத்துக்களையும் உரிமையாளராக முடியும். ஒரு பணக்கார தொழில்முனைவோர், தொண்டு நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அறக்கட்டளைக்கு தங்கள் செல்வத்தை விட்டுவிடலாம். எவ்வாறாயினும், வரி மோசடி செய்பவர்கள் தங்கள் செல்வத்தை மறைக்க பயன்படுத்தும் வழிகளை அரசாங்கங்கள் பெருகிய முறையில் கட்டுப்படுத்துவதால், அறக்கட்டளைகள் வரி மோசடி செய்வதற்கும் நிதிக் குற்றங்களைச் செய்வதற்கும் அதிகளவில் திறன் பெற்றுவருகின்றன.

செல்வம், சொத்துக்களின் உரிமையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறக்கட்டளைகள் அனுமதிக்கின்றன. அறக்கட்டளை வைத்திருக்கும் செல்வம், அதன் உண்மையான உரிமையாளருக்கோ, அல்லது அறக்கட்டளையிலிருந்து இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ நன்மைகளைப் பெறும் பயனாளிக்கோ அல்லது அறக்கட்டளையின் செல்வத்தின் முழு கட்டுப்பாட்டையும் பயனாளி ஏற்றுக்கொள்ளும் வரை அவர் சார்பாக செல்வத்தை நிர்வகிக்கும் நபருக்கோ சொந்தமானது அல்ல. வரி மோசடிசெய்பவர்கள் தங்களின் பெருமளவு சொத்துக்கள், மாளிகைகள், நிறுவனங்கள், விலையுயர்ந்த சொத்துக்களிலிருந்து பெரும் பணம், பயன்பாடுகள் மீது முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும்போதும் அவர்களின் சொத்துக்களின் உரிமையை மறைக்க அறக்கட்டளைகள் வழங்கும் இந்த இடைநிறுத்தப்பட்ட உரிமை நிலையைப் பயன்படுத்துகின்றனர்.

உதாரணமாக, உரிமையாளர் சொத்திலிருந்து பிரிக்கப்பட்டிருந்தாலும், அவர் ஒரு ரகசிய “விருப்பக் கடிதம்” மூலம் சொத்தின் மீது கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளலாம். உரிமையாளர் ஒரு அறக்கட்டளைக்கு மாளிகையின் உரிமையை வழங்கலாம், ஆனால் பயனாளிகளுடன் தொடர்ந்து அதில் வசிக்கலாம். உரிமையாளர் ஒரு பெருந் தொகையை அறக்கட்டளையில் வைக்கலாம், அதன் மூலம் அறக்கட்டளை பின்னர் அவர்களுக்கு ஒருபோதும் திருப்பிச் செலுத்தப்படாத கடனைக் கொடுக்கும் படி பணத்தை திரும்பப் பெறலாம். வரி புகலிடங்கள் இந்த வகையான சிக்கலான தகாவழி சூழ்ச்சிகளை எளிதாக்கும் நிபுணத்துவம் பெற்றுள்ளன. இவ்வகையான கையாளுதலில் சிறப்பாக செயல்படும் வளைக்கத்தக்க அறக்கட்டளைகள், குறிப்பாக நாடுகடந்த அறக்கட்டளைகளின் பொதுவான வகைகளாகும், மேலும் அவை மட்டுமே “உரிமையில்லாமல்” உள்ள டிரில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுக்கு பொறுப்பாகும்.நிறுவனங்களை பதிவு செய்வது போல, பயனீட்டாளர்களைப் பதிவு செய்ய அறக்கட்டளைகளை அரசாங்கங்கள் கட்டாயப்படுத்த வேண்டும்.

Source: Tax Justice Network

நன்றி:
Samantha k.s.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here