ம்யூனிச அமைப்புகளையும், தமிழ் தேசியப் பற்றாளர்களின் மீதும் தினமலர் என்று சொல்லக்கூடிய பார்ப்பன கழிசடைப் பத்திரிக்கையான தினமலம் அன்றாடம் செப்டிக் டேங்க் கணக்காக கழிந்து கொண்டுள்ளது என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள்.

டிவி ராமசுப்பையர் என்ற ஆர்எஸ்எஸ் பார்ப்பனர் நிறுவிய தினமலர் அவ்வப்போது தனது மூளையில் நிரம்பிக் கிடக்கும் பார்ப்பன கழிவுகளைக் கொண்டு ஏதாவது செய்தி என்று வெளியிடுவது; அதனை பரபரப்பாக்குவது; கார்ட்டூன்கள் என்ற பெயரில் விஷமத்தனமாய் படங்களை போடுவது என்று தமிழகத்தில் இன்னமும் தைரியமாக குப்பைக் கொட்டிக் கொண்டுள்ளது.

அக்மார்க் பார்ப்பனர்களும், பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்ட கருப்பு பார்ப்பனர்கள் மற்றும் பதிலிப் பார்ப்பனர்கள் கொண்டாடுகின்ற இந்த பத்திரிகையின் யோக்கியதையே பற்றி எமது இணையதளத்தில் கீழ்கண்டவாறு 2011-வாக்கிலேயே அம்பலப்படுத்தி எழுதி இருந்தோம் அதற்கு முன்னரும், பின்னரும் பல்வேறு பதிவுகளில் அதன் முகத்திரையை கிழித்து எழுதியிருக்கிறோம் என்ற போதிலும் அவ்வப்போது அதன் விஷக் கொடுக்குகள் தலை தூக்கும் போதெல்லாம் அதனை ஒட்ட வெட்ட வேண்டிய அவசியம் உள்ளது.

“தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம்தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ்நாட்டில் அச்சுறுத்தியதில் ஆ.எஸ்.எஸுக்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான். ஈழ ஆதரவாளர்களை புலி ஆதரவாளரென அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததில் தொடங்கி விவசாயிகள் உரிமைக்கு போராடுவோரை நக்சலைட்டுக்கள் என பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகளின் கணக்கிலடங்காதவை. தங்களின் வாசகர்களின் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு ஊழியர்களின் போராட்டத்தை அவதூறு செய்து நன்றியுணர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள், முன்னாள் இலங்கை துணைத்தூதர் அம்சாவை பெருந்தன்மையானவர் என சொன்ன ஒரே தமிழ் ஊடகம் தினமலர்தான்.

மேற்கூறிய பிரிவினருக்கு எல்லாம் தினமலர் தங்களுக்கு எதிரானது என்பது தெரியும். ஆனால் பெரும்பாலான தாழ்த்தப்பாட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை. அதன் இந்துத்துவா முகம் எல்லா இந்துக்களுக்கும் ஆதரவான பத்திரிக்கையைப்போல ஒரு மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. மதமாற்றம் பற்றி ஓலமிடும் செய்திகள், இந்து அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம், நிறைந்து வழியும் கோயில் குளம் பற்றிய செய்திகள் என்பன போன்ற செயல்களால் இது இந்துக்களுக்கான பத்திரிக்கையாக பலருக்கும் தோன்றுகிறது”. என்று தினமலர் பத்திரிக்கை பற்றி 2011 வாக்கிலேயே எழுதியிருந்தார் எழுத்தாளரும், சமூக செயல்பட்டாளருமான தோழர் வில்லவன்.

அன்றாடம் உழைக்கும் மக்களின் பிரச்சினைகளுக்காக பல்வேறு வடிவங்களில் போராடுகின்ற கம்யூனிச இயக்கங்கள் மற்றும் தமிழ் தேசிய அமைப்புகள், திராவிட இயக்கங்கள் ஆகியவற்றின் மீது இனப்பகை கொண்டுள்ள இந்த தினமலர் கும்பல் நெஞ்சை புடைத்துக் கொண்டு எழுதுவது, நக்கலடிப்பது, நையாண்டி செய்வது ஆகியவற்றை ‘ஜனநாயகம்’ என்ற பெயரில் அனுமதிப்பது மாபெரும் தவறாகும்.

சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில், மே-17 இயக்கத்தின் நிமிர்பதிப்பகம் சார்பில் தினமலம் என்று தினமலரை விமர்சித்து வெளியிடப்பட்ட புத்தகம் அதிக விற்பனையானது என்று செய்திகள் வெளியானது. இவ்வாறு தனது பெயர் ஆசனவாயில் இருந்து வெளியாகும் கழிவுக்கு இணையாக பிரபலமாவதை குறித்து தினமலர் பார்ப்பனர்களும், சங்கிகளும் வயிறு வீங்கி கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாசிசக் கும்பலுக்கு கருத்துப் போராட்டம் ஒருபோதும் புரியாது என்பதால் அவர்கள் என்ன மொழியில் பேசுகிறார்களோ அந்த மொழியிலேயே திருப்பி அடிப்பதற்கு பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தயாராக வேண்டும் என்பதைத்தான் தினமலர் வெளியிட்டுள்ள விசிக, இடது, வலது கம்யூனிச அமைப்புகள் திமுகவுடன் தேர்தலில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடுகள் பற்றி இழிவுப்படுத்தி உள்ள கார்ட்டூன் நமக்கு உணர்த்துகிறது.

தேர்தல் அரசியலில் போட்டியிடுகின்ற இந்தக் கட்சிகள் தேர்தல் காலங்களில் மட்டும் இல்லாமல் எல்லாக் காலத்திலும் தொடர்ச்சியாகப் போராடுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்கள் தமிழகத்தின் எந்த மூலையில் பாதிக்கப்பட்டாலும் அதற்காக முதலில் குரல் கொடுக்கின்ற அமைப்பாக விடுதலைச் சிறுத்தைகள் களம் காண்கிறது. தமிழகத்தின் மீதான ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் தாக்குதல்களை எதிர்க்கும் வகையில் பல்வேறு பிரச்சனைகளுக்காக களப் போராட்டங்களைத் தாண்டி தமிழக சட்டமன்றத்திலும், இந்திய ஒன்றிய நாடாளுமன்றத்திலும் தமிழக மக்கள் சார்பாக கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகிறது.

ஞாயிறு ‘டபுள்’ புகழ் தினமலர் பார்ப்பனர்களின் திமிருக்கு புரியும் வகையில் பதிலடி கொடுப்போம்!

அதுபோலவே உள்ளூரில் குப்பை குளங்கள் தேங்குவது, சாக்கடைகள் கொசுக்களை பரப்புவது போன்ற அன்றாடப் பிரச்சனைகள், மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை அமைத்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராகப் போராடுவது வரை நாடாளுமன்ற இடதுசாரிகள் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தலில் கூட்டணிக் கட்சியுடன் இணைந்து தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொள்வது மற்றும் அதில் நீக்குப் போக்காக அணுகுவது ஆகியவை அந்தக் கட்சிகளின் தனிப்பட்ட விவகாரங்கள். ஆனால் இதனை அரசியல் என்ற பெயரில் இழிவுபடுத்த ஒரு கும்பல் கிளம்புவதும், கம்யூனிஸ்டுகள் சீட்டு நேரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்; முதலாளித்துவக் கட்சிகளுடன் சோரம் போய் விட்டார்கள் என்றெல்லாம் எழுதுவதன் மூலம் தினமலர் பார்ப்பனக் கும்பல் தனது வக்கிர புத்தியை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் எப்படியாவது பாஜகவை அரியணையில் அமர்த்திவிட வேண்டும் என்பதற்காக திமுகவின் மதசார்பற்ற கூட்டணியை உடைப்பதற்கு பார்ப்பன லாபிகள் கேவலமான அரசியல் தரகர் வேலைகளில் ஈடுபட்டும் முடியாமல் போகவே இப்போது வக்கிரத்தை கக்கிக் கொண்டிருக்கிறார்கள். தினமலர் துக்ளக் போன்ற பார்ப்பன பத்திரிக்கைகள் உழைக்கும் மக்களையும் அவர்களுக்காக களத்தில் போராடுபவர்களை கிண்டல் செய்து அதில் சுய இன்பம் தேடிக் கொள்கிறார்கள்.

அரசுப் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு அமல்படுத்திய காலை உணவுத் திட்டத்தை இழிவுப்படுத்தி மனிதப் பிறவிகளே எழுத கூசும் வகையில் “காலை உணவுத் திட்டம் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என பார்ப்பன இழிவு புத்தியை தினமலரின் முதல் பக்கத்தில் எழுதினார்கள்.

இவ்வாறு வக்கிர புத்தியை கக்கும் தினமலருடன் இணைந்துக் கொண்டு வக்கிரத்தை வெளிப்படுத்தும் கருப்பு, பதிலிப் பார்ப்பனர்கள் கம்யூனிஸ்டுகள் நடத்துகின்ற போராட்டங்களில் அவர்களின் ஊர் பிரச்சனை; தெருப் பிரச்சனை என்ற அளவில் கூட கலந்து கொள்வதில்லை. மாறாக இதெல்லாம் வேலையற்றவர்களின் வேலை, நாம் காரியவாதிகள் என்று கண்டும் காணாமல் ஒதுங்கிச் செல்கின்ற இந்த நழுவல் போக்கு ஆசாமிகள், கம்யூனிஸ்ட்களின் மீதும் அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகளின் மீதும், தமிழ் தேசிய அமைப்புகளின் மீதும் அக்கறைக் கொண்டவர்கள் போல நடித்துக் கொண்டு தனது வக்கிரத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இது விசிக, இடதுசாரி கட்சிகளுக்கும், தினமலர் பார்ப்பனக் கும்பலுக்கும் உள்ள பிரச்சனை; நமக்கு என்ன வந்தது? நாம் வேறு வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று ஒதுங்கி சென்றால் இப்படிப்பட்ட பாசிச நச்சுக் கருத்துக்களை வளர விட்ட பிறகு அதனை வெட்டுவது மிகவும் சிக்கலாகிவிடும்.

எனவே ஒரு நூற்றாண்டு காண்பதற்கு முன்பாக தினமலர் பார்ப்பன கும்பலுக்கும், தினமலர் பத்திரிக்கைக்கும் சாவு மணி அடிக்கும் வகையில் தமிழக மக்களை தமிழ் மக்களை உணர்வூட்டுவோம்.

  • தமிழ்ச்செல்வன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here