தில்லை போராட்டம் | பத்திரிக்கை செய்தி

தீட்சிதர்கள் பொய் பித்தலாட்டம் செய்வார்கள். தமிழ்பாடும் உரிமைக்கு எதிராக எந்த தடை உத்திரவும் இல்லை. அவ்வாறு இருப்பதாக சொல்லி உங்களை ஏமாற்றுகிறார்கள்.

0

தீட்சிதர் சொத்தல்ல தில்லைக் கோவில்!

சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம்!

மார்ச் -2 சிதம்பரம் நடராசர் கோவில் முற்றுகை போராட்டம் !!
சிதம்பரம் கோட்டாட்சியர் மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு அரசாணையை அமல்படுத்த ஒருவார கால அவகாசம் கேட்டு எழுத்து பூர்வமாக கடிதம் கொடுத்ததை அடுத்து முடிவுற்றது.

சிவனடியார்கள், பெண்கள், குழந்தைகள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். சிதம்பரம் தெற்கு வீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் 5 மணிநேர முற்றுகை போராட்டம் நடந்தது. விழுப்புரம் சரக டி.ஐ.ஜி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் தெற்கு வாயில் முன்பாக குவிக்கப்பட்டனர்.

சிதம்பரம் நடராசர் கோவில் சிற்றம்பல மேடையில் தமிழ்பாடும் உரிமையை 2008 மார்ச் 2 அன்று சிவனடியார் ஆறுமுகசாமி மூலம் நிலைநாட்டினோம். இன்று தீட்சிதர்கள் பாடுவதற்கு மட்டுமல்ல, சிற்றம்பல மேடையில் ஏறி நின்று தரிசனம் செய்வதற்கே அனுமதி மறுத்து விட்டனர். பாடசென்ற பெண் பக்தர் லட்சுமி என்பவரை தீட்சித கும்பல் சாதியை சொல்லி திட்டி துன்புறுத்தி வெளியே அனுப்பி விட்டது. இந்த சம்பவத்திற்கு எதிராக 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்த பிறகும் இதுவரை கைது செய்யாததற்கு சிதம்பரம் காவல் துறை மீது கடுமையான கண்டனங்களை தெரிவிக்கபட்டது.

மக்கள் அதிகாரம் சார்பில் பத்து நாள் கெடுவிதித்து வழிபாட்டு உரிமையை தீட்சிதர்கள் தடை செய்வதை திரும்பபெற வேண்டும் தவறினால் மார்ச் 2 முற்றுகையிடுவோம் என அறிவித்தபடி முற்றுகை நடந்தது. கோட்டாட்சியர், மாவட்ட காவல்துறை கைது செய்து வழக்கம் போல் மண்டபத்தில் அடைக்க முயன்றது.
சிற்றம்பல மேடையில் தமிழ்பாடும் உரிமை என்ற அரசாணையினை அமல்படுத்த பாதுகாப்பு கொடுப்பதுதான் அரசு ஊழியர்களின் கடமை. மறுப்பது சட்டப்படி குற்றம். தீட்சிதர்களின் தடையைா? தமிழக அரசின் ஆணையா? எதை அமல்படுத்த போகிறீர்கள் என்பதை எழுத்து பூர்வமாக தர வேண்டும். அதுவரை முற்றுகை போராட்டம் தொடரும் கைது செய்த பிறகும் மண்டபத்திலிருந்து வெளியேறமாட்டோம் என உறுதியாக பொது மக்கள் முன்பாக மைக்கில் மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் தனது உரையில் அறிவித்தார்.


கோட்டாட்சியரும், டி.எஸ்.பியும் கால அவகாசம் கொடுங்கள் தீட்சிதர்களோடு பேசி வருகிறோம் உச்சநீதிமன்ற தடை உள்ளது அதை கொடுப்பதற்கு அவகாசம் கேட்கிறார்கள் என சொல்லி வலியுறுத்தி போராட்டத்தை முடிக்க கோரினர். தீட்சிதர்கள் பொய் பித்தலாட்டம் செய்வார்கள். தமிழ்பாடும் உரிமைக்கு எதிராக எந்த தடை உத்திரவும் இல்லை. அவ்வாறு இருப்பதாக சொல்லி உங்களை ஏமாற்றுகிறார்கள். எதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஒரு வாரகாலமாக தீட்சதர்களோடு அமைதி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறீர்கள் ஆனால் எந்த அதிகாரிகளையும் தீட்சிதர்கள் மதிப்பதில்லை.


சிற்றம்பல மேடையில் தமிழ்பாடும் அரசாணையை அமல்படுத்த முடியாது என எழுதி கொடுங்கள். இல்லை என்றால் பாடுவதற்கு எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என தீர்மானமாக முன்வைக்கப்பட்டது.
இறுதியில் கோட்டாட்சியர்  ஒருவார கால அவகாசம் மக்கள் அதிகாரம் அமைப்பிடம் கேட்டு கடிதம் கொடுத்தார். வரும் 10-3-2022 அன்று குறிப்பிட்டபடி மீண்டும் பாடுவது என கூட்டத்தில் அறிவிக்கபட்டது.

தீட்சிதர் சொத்தல்ல தில்லைக் கோயில் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் என்ற முழக்கத்தில்

தமிழக அரசே!

சிதம்பரம் நடராசர் கோவிலை மீட்க தனிச்சட்டம் இயற்று.

முப்பாட்டன் நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமைச் சுவரை அகற்று.

தீட்சிதர்களின் முறைகேடுகளான கோவில் நில விற்பனை மற்றும் நிதி முறைகேடுகள் சாதி மற்றும் மொழி தீண்டாமை குற்றம் பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிடு!.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பில் (02/03/2022) காலை:11:00 மணி அளவில் அனைத்து கட்சிகள் அமைப்புகளை ஒருங்கிணைத்து சிதம்பரம் (ஸ்டேட் பாங்க்) அருகில் பேரணி தொடங்கி தெற்கு வாயிலில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதில் அனைத்து ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தலைமை:

தோழர். பாலு
மாவட்ட செயலாளர், மக்கள் அதிகாரம்.

துவக்க உரை:

தோழர். காளியப்பன் மாநில பொருளாளர்
மக்கள் அதிகாரம்.
திருமுறை பாடல் சிவனடியார் இராவணன்

கண்டன உரை:

தோழர். மகேஷ், மே-17 இயக்கம்.


தோழர். முரளி செயலாளர், மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பு.

தோழர். யாழ் திலீபன், தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்.

தோழர். அன்பு, மாநில பொது செயலாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.

தோழர். லோகநாதன் மாநில பொது செயலாளர், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.

தோழர். கோவன், மாநில பொது செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம்.

சிறப்புரை:

வழக்கறிஞர். சி. ராஜு ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

மக்கள் கலை இலக்கிய கழக தோழர்களின் பாடல்கள் வெயிலின் கடுமையை சிறிது தனித்தது.

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுச்சேரி.

பத்திரிக்கையில் வெளிவந்த போராட்ட செய்திகள்

தி ஹிந்து
தினகரன்
தினகரன்

தினமணி

தினத்தந்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here