அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி விதிப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கில் திரண்ட கென்ய மக்களின் கோபத் தீயில். கென்ய பாராளுமன்றத்தின் ஒரு பகுதி பற்றியெரிந்தது. கென்யாவே போராட்டக் களமாக மாறியது.
முதலில் சமூகவலைதளங்களில் எதிர்ப்பை தெரிவித்த மக்கள் கடந்த 18 ஆம் தேதி போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியதன் காரணமாக கடந்த 29 ஆம் தேதி காவல்துறையை வைத்து போராட்டகாரர்களை ஒடுக்கியது கென்ய அரசு.
போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த எண்ணிய அரசு ரொட்டி மீதான வரியை நீக்கியது. மசோதாக்களில் சில திருத்தங்களையும் மேற்கொண்டது அரசு. ஆனால் போராட்டக்காரர்கள் முழு மசோதாவையும் திரும்பப்பெற வலியுறுத்தி போராடினார்கள்.
கடந்த செவ்வாயன்று கென்ய நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட நிதி மசோதாவை நிறைவேற்றுவதை கண்டித்து மக்கள் போராட்டம் வெடித்தது. நாடெங்கும் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் திரண்டு போராடினார்கள்.
நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட மக்கள் மசோதாவை நிறைவேற்ற விடாமல் உள்ளே நுழைந்தது மட்டுமல்லாமல் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். இதனை ஒடுக்க இராணுவத்தை களமிறக்கிய கென்ய அரசு நாடு முழுவதும் இதுவரை 22 பேரை சுட்டுக்கொன்றுள்ளது.
இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கென்ய அதிபர் போராடியவர்களை இந்திய பாசிஸ்டுகளின் வழியில் தேசதுரோம் என்று குற்றஞ்சாட்டினார். மக்களின் போராட்டத்திற்கு பணிந்து தற்போதைக்கு மசோதாவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
கென்ய நிதி மசோதாவின் சுருக்கத்தைப் பார்ப்போம்…
அத்தியாவாசி பொருட்கள் மீதான வரி
ஆரம்பத்தில் புதிய வரி மசோதாவானது சிலை சர்ச்சைக்குரிய வரிகளை முன் வைத்தது ரொட்டிக்கு 16 விற்பனை வரியும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய் மீது 25% வரையும் விதித்துள்ளது நிதி பரிவர்த்தனை மீது திட்டமிட்ட வரி விதிப்பும் வாகன மதிப்பில் 2.5 அளவுக்கு வாகன உரிமையின் மீது புதிய வருடாந்திர வரி விதிப்பும் விதிக்கப்பட்டுள்ளது
மக்களின் கடுமையான எதிர்ப்ப எதிர்ப்பினால் சில வரிகள் அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கான கட்டணம் என விவரிக்கப்படும் சுற்றுச்சூழல் வரி, மசோதாவின் மற்றொரு விதியாகும். இதில் சானிட்டரி பேடுகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு இது வழிவகுக்கும். இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். மாணவிகள் மாதவிடாய் காலங்களில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படலாம்.
இதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்பிய நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என்றும் இதில் உள்ளூர் தொழில்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் அரசாங்கம் வாதிட்டது.
இந்தியாவிலும் சானிட்டரி பேட்களுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்தது பாஜக அரசு. பலத்த எதிர்ப்புக்கு பின்னர் 2018 ஆம் ஆண்டு அதன் வரியை நீக்கியது. ஆனால் மறைமுகமாக அதன் மூலப்பொருட்களான glue and Polyethylene-க்கு 18 சதவீதம் வரி விதிக்கிறது. இதனால் நாப்கின் விலை உயரும்.
கென்யாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் வரி அறிவிப்பின் காரணமாக பாதிப்பு ஏற்படும். இதனால் மொபைல், டிவி, கேமரா மற்றும் டிஜிட்டல் தயாரிப்புகளின் விலை அதிகரிக்கும். இது டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இதனை பல கென்ய மக்கள் வாழ்வாதாரமாக கொண்டு தொழில் செய்து வருகின்றனர். விலை அதிகரிப்பினால் தொழில் செய்பவர்கள் மட்டுமல்ல. இவர்க்ளிடம் வேலை செய்யும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
மருத்துவமனைகளுக்கு மற்றும் அதன் சேவைகளுக்கு 16 சதவீதம் வரியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது நிதி மசோதாவானது குறைந்தபட்சம் 50 படுக்கையில் கொண்ட சிறப்பு மருத்துவமனைகளை நிர்மாணிப்பதற்கும் உபகரணங்களை வாங்குவதற்கும் நேரடி மற்றும் பிரத்யேக பயன்பாட்டிற்காக 16 சதவிதம் வரி விதிக்கிறது கென்ய அரசு. இந்த வரி மருத்துவ முதலாளிகளுக்கு விதிக்கப்பட்டாலும் அந்த சுமையை மக்கள் மீது தான் முதலாளிகள் சுமத்துவார்கள்.
படிக்க:
♦ உலகை உலுக்கிய இலங்கை எழுச்சி!
♦ இலங்கை போராட்டம் | போராட்ட வழியை மக்களே தீர்மானிப்பார்கள்!
இதன் காரணமாக நீரிழிவு நோய், சிறுநீரக சிகிச்சைகள் அல்லது பிற நாட்பட்ட சிகிச்சைகளுக்கு அதிக செலவுகள் ஆகும் என்று கென்ய மக்கள் அச்சம் கொள்கிறார்கள்.
ஆனால் பாராளுமன்ற நிதி குழுவின் தலைவர் குரியா கிமானி “புற்று நோயாளிகளின் மீதான வரி விதிப்பு மசோதாவை அறிமுகப்படுத்துகிறது” என்று பொய்யான கூற்றுக்களை சொல்லி பொதுமக்களை உணர்ச்சி வசப்படுத்துகிறார்கள் என்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி பொருட்களுக்கான வரியையும் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் அதிகரிக்க நிதி மசோதா முன்மொழிகிறது.இதன் மூலம் கூடுதல் வருவாய் வருமென அரசு எதிர்பார்க்கிறது. ஆனால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான விலையேற்றத்தால் மக்கள் அவதிப்படுவார்கள் என்று சிறிதும் கவலைக் கொள்ளவில்லை.
கென்ய அரசு தனது கடனை அடைக்க மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பல லட்சம் கென்ய மக்கள் வீதியில் இறங்கினார்கள், போராடினார்கள், அரசை பணிய வைத்தார்கள். அரசும் லட்சக்கணக்கான மக்கள் திரளின் முன் பணிந்தது.
கென்யா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களின் மீது வரிச்சுமையை செலுத்தி சுரண்டுகிறது. கென்ய மக்கள் அதற்கு எதிராக கிளர்ந்தெழுத்து வென்று காட்டியுள்ளார்கள். நமக்கு அனுபவத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளார்கள்.
- நந்தன்