இலங்கை போராட்டம் | போராட்ட வழியை மக்களே தீர்மானிப்பார்கள்!

புரட்சியை ஏற்றுமதி செய்வதோ, புரட்சி பற்றி வெளியிலிருந்து வழிகாட்டுதல் கொடுப்பது மார்க்சிய லெனினியத்திற்கு விரோதமானது.

இலங்கை மக்களுக்கு என்ன தேவை என்பதை அந்த மக்கள் தீர்மானித்துக் கொள்ளும் அரசியல் உரிமைதான் நிரந்தரமானது.

வெளியில் இருந்து ஆயிரம் ஆலோசனைகள் வரலாம். அதைக் கேட்டு கொண்டு 30 ஆண்டுகால தமிழ் ஈழ கோரிக்கை முடிவுக்கு சென்றதைப் போல முடித்துக் கொள்வதா? அல்லது ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை முற்றாக வீழ்த்தி சுயசார்பு பொருளாதாரம் கொண்ட நாட்டை உருவாக்குவதா என்பதை அந்த மக்களே தீர்மானிப்பார்கள்.

உலகம் முழுவதும் அந்தந்த நாடுகளின் தன்மைக்கேற்ப புரட்சியை முன்னெடுத்து செல்வதை பற்றி தான் மார்க்சி ஆசான்கள் வலியுறுத்தியுள்ளனர். புரட்சியை ஏற்றுமதி செய்வதோ, புரட்சி பற்றி வெளியிலிருந்து வழிகாட்டுதல் கொடுப்பது மார்க்சிய லெனினியத்திற்கு விரோதமானது.

இதோ எழுந்து நிற்கும் இலங்கை மக்கள், மக்கள் மட்டுமே மாபெரும் வரலாற்றைப் படைக்கும் உந்து சக்தி ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here