வேலூரில் “டாஸ்மாக்கை மூடு!” என்ற முழக்கத்தை முன்வைத்து போராடிய NDLF மற்றும் CPI-ML தோழர்கள் 7 பேர் கடந்த 19.11.2024 அன்று கைது செய்து சிறையில் அடைத்தது தி.மு.க -வின் போலீசு!
கடந்த 10 நாட்களாக சிறையில் இருந்த தோழர்கள், இன்று(28.11.2024) வேலூர் மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
வேலூர் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்! CPI(M-L), NDLF தோழர்கள் கைது!
விடுதலை செய்யப்பட்ட தோழர்கள் பறையிசை மற்றும் பட்டாசுடன் மாவட்ட தோழர்கள் வரவேற்றனர். பின்பு தோழர்கள் முழக்கமிடவாறு சாலையில் அணிவகுத்து சென்றனர்.
வேலூர் காவல் நிலையத்தில் கையொப்பமிட்ட 7 தோழர்கள், அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டனர்.
அதனையடுத்து, தோழர்கள் சிறையிலிருந்த அனுபவத்தை பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி, இந்த டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டம் இன்றோடு முடிய போவதில்லை! இது அடுத்தகட்டமாக கொண்டு சென்று, நிச்சயம் வேலூரில் “டாஸ்மாக்கை கட்டாயம் மூடுவோம்!” என்று உறுதியேற்றனர்.
இதில், வேலூர் மாவட்ட NDLF மற்றும் CPI-ML மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் பரவலாக கலந்துக்கொண்டனர்.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
வேலூர் மாவட்டம்.
தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
வேலூரில் சாராயக்கடையை மூட வலியுறுத்தி போராடிய NDLF மற்றும் CPI-ML தோழர்கள் வேலூர் மத்திய சிறையில் இருந்து இன்று விடுதலை ஆகி உள்ளார்கள் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சார்பாக வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தோழர்களே