நீட்டிற்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி அனிதா இறந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள் கடந்து விட்டது. அவர் எதற்காக தனது உயிரை மாய்த்துக் கொண்டாரோ அந்த கனவு நிறைவேறாமல் அவரை போன்று பல அனிதாக்களை தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவும் பலிகொடுத்து வருகிறது.
சமீபத்தில் டெல்லியில் நடந்த மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் அனிதா போராட்டக்காரர்களால் நினைவுக் கூறப்பட்டார். நீட் எதிர்ப்பின் முகமாக இந்தியா முழுவதும் அறியப்பட்டுள்ளார் மாணவி அனிதா. ஆனால் இன்று பாயாச கட்சி தவெக ஆளும் தமிழ்நாட்டில் மாணவி அனிதாவிற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி மறுக்கிறது ஜோசப் விஜய்யின் தலைமையிலான காவல்துறை. இதைத்தான் பாசிச பாஜகவும் எதிர்பார்க்கிறது.
ஆனால் மாணவி அனிதாவிற்கு மரணமில்லை என்பதை மெய்பிக்கும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பை சார்ந்த தோழர்கள் மாணவி அனிதாவிற்கு நினைவுநாள் கூட்டம் நடத்தி தங்களது நீட் எதிர்ப்பை பதிய வைத்துள்ளார்கள்.
கடலூரில் மாணவி அனிதா நினைவுநாள் நிகழ்ச்சிக்கு புமாஇமு மாநிலப் பொருளாளர் தோழர் பால்ராஜ் தலைமைத் தாங்கினார். தோழர் வெற்றிதமிழ், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் தோழர் பாலு, நகர செயலாளர் தோழர் ரவிசந்திரன்
ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் 20 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.
படிக்க: நீட் எனும் ஆட்கொல்லித் தேர்வை ஒழித்துக் கட்டுவோம்!
செ-1 நீட் எதிர்ப்புப் போராளி மாணவி அனிதா நினைவு நாள்: ஆட்கொல்லி நீட் தேர்வை ஒழித்துக்கட்ட உறுதியேற்போம்!
ஒன்றிய மோடி அரசே!
மாநில உரிமைகளைப் பறிக்கும், கோச்சிங் சென்டர் கொள்ளைக்கு வழிவகுக்கும், ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்விக் கனவைத் தகர்க்கும் நீட் தேர்வை ரத்து செய்!
மாணவர்களே, இளைஞர்களே!
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிட ஒன்றிணைந்து போராடுவோம்!
மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவோம்!
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம் 9788808110








