ஸ்டெர்லைட் வழக்கு UPDATE:
22-03-22

உச்ச நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் வழக்கில் இன்று ஆலையின் தரப்பில் தொடர்ந்து வாதம் செய்வதற்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று 22-03-22 இந்த வழக்கு விசாரணைக்காக (List) பட்டியலிடப்படவில்லை.

விசாரணைக்கு இன்று பட்டியலிடப்படாமல் இருந்ததை ஸ்டெர்லைட் தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறியுள்ளனர். அதற்கு நீதிபதி சந்திர சூட் அவர்கள், தன்னுடன் இருந்த 2 நீதிபதிகளின் அமர்வு வேறு நீதிமன்ற அமர்வுக்கு மாறியுள்ளதால் தங்களால் இன்று பட்டியலிட முடியவில்லை என்றும், கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் கூறினார். எந்த விசாரணைத் தேதியும் குறிப்பிடவில்லை.

ஏற்கனவே விசாரித்த அதே 3 நீதிபதிகள் அமர்வு எந்த தேதியில் அமருமோ அந்த தேதியில்தான் இந்த வழக்கு விசாரணைக்கு வரும். எனவே இவ்வழக்கின் அடுத்த விசாரணைத் தேதியை தற்சமயம் குறிப்பிட இயலவில்லை.

கூடுதல் விபரம் ஏதேனும் இது பற்றி தெரிய வந்தால் அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.

(குறிப்பு: நீதிபதிகள் சந்திர சூட், சூரியகாந்த், மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வுதான் ஸ்டெர்லைட் வழக்கை விசாரித்து வருகிறது.)

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here