இந்தியாவின் காஷ்மீர் மீதான தாழ்நிலை போர் கடந்த 40 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பல தேசிய இனங்களின் சிறைக் கூடமாக விளங்குகின்ற இந்திய ஒன்றியத்தில், பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை தூக்கி எறிந்துவிட்டு ஆயுதமுனையில் காஷ்மீரை மூன்றாகப் பிளவு படுத்தியது.
காஷ்மீரில் உள்ள ஜனநாயக இயக்கங்கள், அதன் தலைவர்கள் அனைவரும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர்.
காஷ்மீரை இந்தியாவிலிருந்து துண்டித்து அங்குள்ள இணையதள சேவைகள், ஊடக சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டது அல்லது தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.
காஷ்மீரில் இந்திய அரசு செய்து வரும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை கேள்வி கேட்பவர்களை தேசத் துரோகிகள் என்றும், பிரிவினைவாதத்தை ஆதரிப்பவர்கள் என்றும், முத்திரை குத்தி மிரட்டி வருகின்றனர்.
ஏற்கனவே ஐபி, ரா போன்ற உளவு நிறுவனங்கள் இருக்கும்போது என் ஐ ஏ என்ற பாசிச உளவுப் படையை நியமித்து நாடு முழுவதும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் ஜனநாயக இயக்கங்களின் மீதும், செயல்பாட்டாளர்கள் மீதும் தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இவை அனைத்தையும் மீறி காஷ்மீருக்கு சென்ற சில பத்திரிக்கையாளர்கள் உள்ள நிலைமையை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளனர். காஷ்மீர் எழில் கொஞ்சும் பள்ளத்தாக்கு அல்ல! மரண ஓலங்களுடன் கூடிய, குமுறல்களுடன் வெடிக்கக் காத்திருக்கும் பனிமலை!
ஜம்மு - காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே? ஒரு பேட்டிக்கட்டுரை
(மிகச் சிக்கலான நேரங்களில் கூட டேவிட் தேவதாஸ் காஷ்மீர் சென்று வந்துள்ளார். செப்டம்பரில் (2021) ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவிடம் அவர் கண்ட நேர்முகத்தின் கட்டுரையாக்கம் கீழே உள்ளது.
தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல்தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஒமர், ஒல்லியான உடல்வாகு, தந்தைபோல – பாட்டனைப்போல நெடு நெடுவென உயரம், நாகரீகமான அரசியல்வாதி தோற்றம்.
ஓமரின் தலை நரையில் வெளிப்பட்டதை விட அவரது பேச்சில் முதிர்ச்சி தெரிந்தது.
அரசமைப்பு மாற்றம் வந்த பிறகு என்ன மாற்றங்கள்?
“சட்டப்பிரிவு 370 நாடு முழுக்கவுமே மாபெரும் உணர்வலையைத் தோற்றுவித்தது (நீங்கள் அறிவீர்கள்)….,
“சொத்துரிமை யாருக்கு? முஸ்லிம்களை எப்படி திருப்திப்படுத்துவது? ‘இந்து’ பண்டிட்டுகள் குறித்து நாங்கள் அக்கறைப்படுகிறோம்.”
“எதிர்க்கட்சிகள் சிலர் சட்டப்பிரிவு 370 கிடப்பில் போடப்பட்ட காரணமாக இருந்தார்கள். அவர்களை கூட மன்னித்து விடலாம்; ஆனால் அதே கட்சிகள் ஒரு மாநிலம் துண்டு போடப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டதை ஆதரித்தார்களே அதை என்னால் மன்னிக்கவே முடியாது” என்றார் ஓமர்.
எதிர்க்கட்சிகள் இடையே என்ன கருத்துக்கள் ஒற்றுமை நிலவரம் என்ன? ‘ஒன்றிய கொள்கை’ என்ற குற்றம் காண முடியாத அரசாட்சி முறை பற்றி அவர் குறிப்பிட்டார். “தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி(TRS) மற்றும் பிறர் தங்கள் மாநிலங்களுக்குத் தன்மானத்தையும், அடையாளத்தையும் கொண்டு வந்துள்ளார்கள்; கெஜ்ரிவால் டெல்லி மக்களின் சுயமரியாதை குறித்து உரத்துப் பேசுகிறார்; மமதா, ஸ்டாலின், சிபிஐ, சிபிஎம், சசிதரூர் மற்றும் சில பிரமுகர்கள் ஜம்மு காஷ்மீரின் உரிமைகளுக்காக உறுதியாக வாதாடுகிறார்கள்; இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் பொதுவான எதிர்வினை சூடுதணிந்தே இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான பேச்சுவார்த்தைகள் மீது எனக்கு அதிக ஆர்வம் இல்லை.”
அறிவுபூர்வமாக சிந்திக்கும் காஷ்மீர் மக்கள்
“காஷ்மீருக்குள்ளே மக்கள் இதயம் ஆட்சி செலுத்த அனுமதிப்பதை விட -உணர்ச்சியை விட – அறிவு பூர்வமாகவே யோசிக்கிறார்கள். நாங்கள் அரசியலமைப்பு சட்டப்படி தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். என்றுமே நாங்கள் சட்டத்தை எங்கள் கைகளில் எடுத்துக் கொண்டதில்லை, அதனை நாங்கள் ஆதரித்ததும் இல்லை.
ஆகஸ்ட் 15 அன்று நடந்ததற்கு நாங்கள் (கடுமையாக) எதிர்ப்பு தெரிவித்தோம். அதுவேறு; இந்தியாவை எதிர்ப்பது என்று நாங்கள் நிலை எடுத்ததாக ஆகிவிட்டது.”
மக்கள் எப்படியெல்லாம் எதிர்க்கிறார்கள்?
இந்திய அரசியல் அரசியலைத் தீர்மானமாக முன்வைத்தவர்கள் “நாங்கள் நேர்மையாக இருக்கிறோம், ஆனால், தண்டிக்கப்பட்டுவிட்டோமே. நடப்பு நிகழ்ச்சிகள் அதைத்தான் காட்டுகின்றன…” என்று சொன்னார்கள்.
“ஒரு சிலர் மட்டும் மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்றார்கள்; மற்றோர் பகுதி மக்கள் இதை என்றுமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்; பெருவாரி மக்கள் (மத்திய அரசின்) இந்த செயலை மாபெரும் தவறு என்று சொன்னதோடு, புத்திபூர்வமாக புரிந்துகொண்டு வாழ்க்கை ஓட்டத்தில் தொடர்ந்து போய்க்கொண்டே இருப்போம் என்றார்கள்.” ஓமர் உணர்ச்சிவசப்படாமல் தெளிவாக பதில் சொன்னார்.
ஓமரின் கட்சி இப்போது எப்படி செயல்படுகிறது
“கட்சியின் நடைமுறை வேலைகளை இயக்க முடியவில்லை. கட்சி ஊழியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வன்முறைத் தாக்குதல் திட்டமிட்டுக் குறிவைத்து நடக்கின்றன. (எங்கள் கட்சி மட்டுமல்ல) எல்லா கட்சிகளையும் சேர்த்தால், உரிமைகளுக்குத் துணிந்து போராடுபவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள்; இதற்கு நேர் எதிராக மத்திய அரசை ஆதரிப்பவர்கள் மற்றொரு பக்கம் நிற்கிறார்கள்.”
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை பற்றி:
“…மக்கள் உற்சாகமாக எதிர்பார்த்தார்கள். வாஜ்பாய் காலத்தில் பேருந்து நட்பு பயணம் நடந்தது; ஆனால் அந்த பேச்செல்லாம் இப்போது கந்தல் கந்தலாகிவிட்டது” (எதார்த்தை பளிச்சென்று எடுத்துச் சொன்னார் ஓமர்.)
‘மற்ற மாநிலங்களோடு எங்களை சமமாக நடத்து!’
கேள்வி: தற்போது உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன?
பதில்: ‘எங்களிடமிருந்து எதைப்பறித்தீர்களோ அதைக் கொடுங்கள். மற்ற மாநிலங்களோடு எங்களை சமமாக நடத்துங்கள். தவிர IPS, IAS பதவிகளுக்கு காஷ்மீருக்கென்று தனிப் பணி முறைக் கொண்டு வா”
காஷ்மீர்-ஜம்முக்கு தனி மாநில அந்தஸ்தே கொடுக்கப்பட்டாலும் டெல்லி போல் மட்டுமே இருக்கும். அதிக அதிகாரம் லெப்டினன்ட் கவர்னரிடமே இருக்கும். இதையே மக்களில் பலரும் (ஊகித்துச்) சொல்கிறார்கள்.
அரசியலமைப்பு சட்டம் இருக்கிறதா?
“சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் போட்ட வழக்கு பரிசீலிக்கப்படும் என்றே கருதுகிறோம். தனது நிலையை மத்திய அரசு உறுதியாக நம்புமானால் வழக்கை விரைந்து விவாதித்திருக்கும். (தாமதப்படுத்துவது ஏன்?) அது எதைக் காட்டுகிறது? அவர்களுக்கு உறுதியான அரசியலமைப்பு சட்ட பூர்வமான நியாயம், நிலைப்பாடு இல்லை என்பதைத் தானே தெளிவாக காட்டுகிறது?” இப்படி ஒரு பதிலில் திட்டவட்டமாக சொன்னார் ஓமர்.
காட்டு ஆட்சி:
டேவிட் தேவதாஸ் எழுதுகிறார்: ‘மத்திய அரசு அதிகாரத்தை கையகப்படுத்திய பிறகு நிர்வாகமும் நடைமுறையும், “தற்போதைய லெப்டினன்ட் கவர்னர் சொற்களில் விவரிப்பதானால் – 2020 வரை காட்டு ஆட்சிதான் இருந்தது… 2018-ல் மத்திய அரசு நிர்வாகம் ஏற்ற பிறகு அவ்வாறு தான் இருந்தது” அவர் மேலும் சொன்னார்: “இதுவரை எங்க எங்கேயும் கேள்விப்பட்டிராத முறையில் எங்குமே பொறுப்பு சொல்ல யாருமில்லை.”
மேலும் இது பற்றி ஓமரின் பதிலை மேற்கோளிட்டு டேவிட் எழுதுகிறார்: “முன்பெல்லாம் கவர்னர் ஆட்சியில் நிர்வாகம் நல்லபடி நடக்கும் என்று மக்கள் சொல்வதுண்டு. ஆனால், இப்போதோ, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழிருக்கும் நிலையை விட அதிருப்தி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.” “மலைகள் முழுவதும், ஜம்மு பகுதி உட்பட இதுவே நிலைமை” என்றார் ஓமர் அப்துல்லா.
பொறுக்க முடியாத கொடூரம் – இதிலும் எல்லா இடத்திலும் ஊழல். 2018 முன் கவர்னர் ஆட்சியிலும் சரி குடியரசுத் தலைவர் ஆட்சியில் சரி; குடியரசு தலைவர் ஆட்சியிலும் சரி, அது குறைவாகவே நடந்தது.
“ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர்கள் மத்திய அரசின் அமைச்சர்களை எதிர்த்து நிற்கும் அளவு முதுகெலும்பு இல்லாதவர்கள். அல்லது, வெற்றுக் கூச்சல் மட்டுமே போடுகிற ஆட்கள்.”என்று விமரிசித்தார் ஓமர்.
“பல்வேறு அரசியல் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், – லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி ஒரு போதும் வாயை திறந்து போராடாதது போலவே – இங்கும் இருக்கிறார்கள். இதுவே ஜம்மு – காஷ்மீர் நிலைமை” – ஓமரின் விமர்சனம் கூர்மையாக இருந்தது.
ஜம்மு பகுதியில் தங்கள் கட்சி இதே கோரிக்கையை தேர்தல் பரப்புரையில் முன்வைத்துப் பேசி பல இடங்களை வென்றோம் என்றார் ஓமர்.
ஜனநாயகம்தான் எங்கள் முன் உரிமை
ஜனநாயகம் பற்றி விமர்சித்த ஓமர் “எந்த தனிநபரும் (விரும்பிய தலைவரை) தேர்ந்தெடுக்க உரிமை இருக்க வேண்டும்” தன்னையோ அல்லது வேறு எவரையுமோ தேர்ந்தெடுக்கலாம்” என்று கூறி தேர்தல் அரசியலை உரிமை பற்றி அரசியலுடன் இணைத்தார். “ஆனால் முடிவுகள் அறிவிப்பு இஷ்டம் போல் திரித்து மாற்றினார்கள்”
“மாவட்ட வளர்ச்சிக் குழு (DDC) நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதில் அதேபோல (திருத்தி மாற்றி) நடந்தது. பக்தாம் DDCயில் 14 உறுப்பினர்களில் 10 பேர் மீது ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் முன்மொழியப்பட்டு ஒன்றரை மாத காலமாக கிடப்பில் போடப்பட்டு விட்டது.” என்ற ஓமர்.
PAGD (People`s Alliance For Gupkar Decleration) (ஜம்மு-காஷ்மீருக்கு 35A உரிமையோடு கூடிய சிறப்பு அந்தஸ்து கோரும் பிராந்திய அரசியல் கட்சிகளின் கூட்டு)-ஐ அத்தா மதம் எரிச்சல் ஊட்டி விட்டது. தூண்டிவிட்டு தூண்டிவிட்டு தான் பக்தா DDCயின் தலைவர் ஒருவழியாக ‘பூவா தலையா’ போட்ட பிறகே தேர்ந்தெடுக்கப்பட்ட கேவலமும் நடந்தது. 14 ஓட்டுகளில் அதிகபட்சமாக யார் தீர்மானத்தை வெற்றிபெற வைத்தார்களோ (7ல் 3 பேர்) அவர்கள் இப்போது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்து இருக்கிறார்கள்.
நிர்வாகத்தில் மீண்டும் ஓமர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்பது மக்களின் பொதுக்கருத்து. 2009 – 2014 காலகட்டத்தில் எப்போதுமே திறமையாகச் செயல்பட்டவரல்ல ஓமர்; ஆனால், இப்போது உணர்ச்சிக் கொந்தளிப்பும் ஆவேசமும் நிறைந்துள்ள இன்று (நன்கு நிலைநாட்டப்பட்ட ஆதாரத்தோடும் தனக்காகவும் நடந்து கொள்பவர் என்று உமர் பற்றி கருத்து இருந்தாலும்) ஜம்மு – காஷ்மீர் வட்டாரத்தில் பெருவாரிமக்கள் இவரையே விரும்புகிறார்கள்.
சிறை இல்லை, ஆனால் சிறைக்குள்ளே…
எது எப்படி நடந்தாலும் ஓமரது வலைதள மோகம் (INTERNET ADDICTION)அப்படியே நீடிக்கிறது. மேசை முன்னால் அமர்ந்து தொலைபேசியை ஓயாமல் உருட்டிக் கொண்டே இருப்பார் ஓமர்.
அப்படிப்பட்டவர் ஜம்மு – காஷ்மீரின் மீது (2019 அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்ட) தாக்குதல் வந்தபோது முதல் ஐந்து வாரங்களில் செல்பேசி தொடவேயில்லை. முன்னாள் அரண்மனைக்குள் வைத்துப் பூட்டப்பட்ட தனக்கு அதன் சுவர்களுக்கு அப்பால் என்ன நடக்கிறதென்றே தெரிந்து கொள்ள முடியவில்லை என்றார் அவர்.
அவ்வபோது மட்டுமே தலையை நிமிர்த்திப் பேசிய ஓமர் சற்றும் கவனம் சிதறாமல் நுண்ணறிவுத்திறத்தோடும் நுட்பமாகவும் சீராக பதில் கூறினார் ஓமர் என்பதை சிறப்பாக பதிவு செய்தார் டேவிட் தேவதாஸ்.
டேவிட் தேவதாஸ்: ஒமர் அப்துல்லாவுடன் எடுத்த பேட்டி தொகுத்து கட்டுரையாகக் கொடுத்திருந்தார்.
நன்றி: THE QUINT
தமிழில்: இராசவேல்