ந்தியாவின் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இது குறித்து மோடி பேசியதாவது, அசாமின் கௌகாத்தி முதல் மேற்கு வங்க மாநிலம் கல்யானி வரையிலும், ஜார்கண்டில் உள்ள தியோகர் முதல் பிகாரில் உள்ள தர்பங்கா வரையிலும் சிறந்த சுகாதார வசதிகளுடன், மக்கள் சிகிச்சை பெறும் வகையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் செல்ல வேண்டியதில்லை” என்று பேசியிருந்தார்.

மோடி பொய் கூறுவதில் வல்லவர் என்பது சங்கிகள் உட்பட அனைவரும் அறிந்ததே!. தற்போது புதிய பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார். மேலே மோடி கூறிய எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பீகாரில் இன்னும் மருத்துவமனை கட்டும் பணிக்கான இடமே தேர்வாகவில்லை என்பது தற்போதைய பரப்பான உண்மை. பாஜகவினருக்கு உண்மை என்றாலே கசக்கும்.

மோடியின் இந்த பொய்யை ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அம்பலப்படுத்தியுள்ளன. இது குறித்து பீகாரின் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் “பிரதமரிடம் இருந்து நாடு உண்மையை எதிர்பார்க்கிறது, ஆனால் அவர் பொய்யை சொல்கிறார்,” என டிவீட் செய்துள்ளார்.

பாசிஸ்டுகள் பொய் சொல்ல தயங்கியதில்லை. ஜெர்மனியில் பாசிச ஹிட்லரின் நெருக்கமான பொய் சொல்வதற்கென்றே கொள்கை பரப்பு செயலாளர் கோயபல்ஸ் இருந்தான். ஆனால் அந்த வேலையை இன்னொருவருக்கு கொடுக்காமல் மோடியே செய்கிறார்.

பீகாரில் எய்ம்ஸின் நிலை என்ன?

பீகாரின் தர்பங்காவில் எய்ம்ஸ் அமைப்பதற்கான ஒப்புதல் கடந்த செப்டம்பர் 2022 அன்று, பாஜகவின் கூட்டணியில் நிதிஷ்குமார் முதல்வராக இருந்த போது பெறப்பட்டது. அப்போது பாஜக தலைவர் மங்கள் பாண்டே பீகாரின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நீடித்த போதே நவம்பர் 2021 பீகார் அரசாங்கம் முதல்முறையாக நிலத்தை வழங்கியுள்ளது. அந்த நேரத்திலும் பாஜகவின் மங்கள் பாண்டே தான் அமைச்சராக இருந்துள்ளார்.

தர்பங்கா நகரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் சுமார் 151 ஏக்கர் நிலம் ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் 131 ஏக்கர் நிலம் மாநில அரசுக்கு சொந்தமானது. 20 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு சொந்தமானது. மருத்துவமனை வரபோகிறது என்பதால் விவசாயிகள் மனமுவந்து நிலத்தை வழங்கியுள்ளதாக அந்த பகுதி பஞ்சாயத்து தலைவர் ராஜீவ் சவுத்ரி கூறுகிறார்.

நிலம் வழங்கிய எய்ம்ஸ் பகுதிக்கு செல்லும் தர்பங்கா சாலை

ஆனால் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூசன் அந்த இடம் சாலையில் இருந்து தாழ்வாக இருப்பதாகவும், அதை சமன் செய்ய தரமான மண் தேவைப்படுவதாகவும், இது தர்பங்கா அதை சுற்றியுள்ள பகுதியில் இல்லை என்றும் அப்பட்டமாக மழுப்பலான பொய்யை கூறியுள்ளார்.

எத்தனையோ அரசு கட்டிடங்கள், நீதிமன்றங்கள், வணிக வளாகங்கள் நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் எய்ம்ஸ்-க்கு ஒதுக்கப்பட்ட பகுதி நீர்நிலை கூட கிடையாது. அந்த இடத்தில் கட்ட முடியாதா என்ன?

துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், பீகார் அரசு 151 ஏக்கர் நிலம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், தனது சொந்த செலவில் மேடாக்கும் பணியையும் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

எய்ம்ஸ் அமைப்பதில் என்ன பிரச்சினை ஒன்றிய அரசுக்கு?

பீகாரில் பாஜக கூட்டணியில் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் கூட்டணியை முறித்துக் கொண்டு முதல்வர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் துணையுடன் முதல்வரானார்.

தனது கூட்டணியில் இருந்த போது கொண்டுவரப்பட்ட எய்ம்ஸ் திட்டத்தை கூட்டணி முடிவுக்கு வந்தவுடன் கிடப்பில் போட்டது. மேலும் பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டால் நிதிஷ்குமாருக்கு செல்வாக்கு உயர்ந்துவிடும் என்று அச்சப்படுகிறது ஒன்றிய பாஜக அரசு. இதுதான் எய்ம்ஸ் அமைக்கப்படாததற்கு முக்கிய காரணம்.

மதுரையை தொடர்ந்து இன்று தர்பங்கா!

இதுபோல் கடந்த 2015 பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் கட்டப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. 2018 ஏப்ரலில் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 224.24 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 4 ஆண்டுகள் கடந்து விட்டது. வெறும் செங்கல் சுவருடன் வெற்று மைதானமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் கடந்தாண்டு தமிழ்நாட்டிற்கு வந்திருந்த பாஜக தேசிய தலைவர் நட்டா 95 சதவீதம் பணிகள் நிறைவுற்றதாக பொய்யை அவிழ்த்துவிட்டார். இது தமிழ்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் 95 சதவீதம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நிறைவடைந்ததாக கூறி சமாளித்தார்.

மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் பணியை தொடங்கவில்லை என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில் ஜப்பான் நிதி அளிக்கவில்லை என்று அடுத்த பொய்யை பாஜகவின் வானதி சீனிவாசன் கூறினார். ஆனால் ஜப்பான் நிதி அளித்துவிட்டதாகவும் ஒன்றிய அரசு தான் ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை என்ற உண்மை வெளிவந்தது.

இதையும் படியுங்கள்: 

பாஜக ஆளும் மாநிலங்களில் எய்ம்ஸ்-க்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் திட்டமிட்ட நிதி ஒதுக்காமல் மக்களை வஞ்சிக்கிறது பாசிச பாஜக அரசு.

தமிழ்நாட்டின் மதுரையின் நிலையில் பீகாரின் தர்பங்கா தற்போது இணைந்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசாக இருந்திருந்தால் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களாக இருந்தாலும் நிதி ஒதுக்கி மருத்துவமனைகள் இன்று செயல்பாட்டிற்கு வந்திருக்கும்.

ஆனால் ஆள்வதோ மக்கள் விரோத பாசிச அரசு. எதிர்கட்சிகளுக்கு நற்பெயர் ஏற்படும் என்ற காரணத்தால் மக்கள் வரிப்பணத்தில் ஒதுக்கப்படும் நிதியை கூட ஒதுக்காமல் மக்களை கொல்லவும் துணிகிறது. பாசிஸ்ட்களை அதிகாரத்தில் இருந்து இறக்காமல் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here