நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2025

NLC கௌரவிப்பு விழாவிற்கு
“கீழைக்காற்று வெளியீட்டக”த்தை தேர்ந்தெடுத்த NLC நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

     வாசகர்கள், முற்போக்குயாளர், உழைக்கும் மக்கள்! கீழைக்காற்று வெளியீட்டகம் 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்டது. குறிப்பாக சோவியத் யூனியன் சிதைவுக்கு பின்னர் உலகம் முழுவதும் கம்யூனிசத்திற்கு எதிராக பரப்பப்பட்ட பொய்யான கருத்துக்கள்; இடதுசாரி கொள்கைகள் தோற்றுவிட்டது என்று தொடர்ந்து ஓலமிட்ட முதலாளித்துவ வாதிகளின் பொய்ப் பிரச்சாரங்கள்; இதனை அப்படியே தமிழகத்தில் வாந்தி எடுத்த பின்நவீனத்துவ பிரச்சார பீரங்கிகளாக களமாடிய சில எழுத்தாளர்கள்; இடதுசாரிகள் என்ற போர்வையிலும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையிலும் பொதுவுடமைக் கொள்கைக்கு எதிராக பரப்பிய கருத்துக்களை முறியடிப்பதற்கு முற்போக்குச் சிந்தனையுடன் துவக்கப்பட்ட வெளியீட்டகம்தான் கீழைக்காற்று என்பதை நினைவு படுத்துகின்றோம்.

புரட்சிகர மார்க்சிய – லெனினிய, மாவோயிச நூல்கள், பெரியாரிய, அம்பேத்கரிய, தமிழ் இன – மொழி உரிமை, பண்பாடு சார்ந்த பல்வேறு முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரியாக செயல்பட்டு வருகிறது. எமது நிறுவனம் மார்க்சியத்தை ஏற்ற அமைப்பு, அரசியல் சார்ந்த நிறுவனம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அச்சுப் பதிப்புத்துறை கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்ற இன்றைய காலக் கட்டத்தில் லாப நோக்கமின்றி ஒரு பதிப்பகத்தை நடத்துவது என்பது மிகவும் சிரமமானது. இந்த சிரமமான பணியை தோழர்கள், நண்பர்கள், பிற பதிப்பகத்தாரின் ஒத்துழைப்புடன் தான் இத்தனை ஆண்டுகளாக கீழைக்காற்று நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.

கீழைக்காற்று நிறுவனம் தொடங்கிய இந்த 32 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட வெளியீடுகளை கொண்டு வந்துள்ளோம். பல வெளியீடுகளை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2025

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு என்ன காரணம், அதற்கு தீர்வு என்ன என்பதை விளக்கும் நூல் “புதிய தாரளவாதத்தின்கீழ் விவசாயிகள்” “விவசாயியை வாழவிடு” கொண்டு வந்தோம்.

அதேபோல், இன்றைய சமகால அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் தொடர்பான நூல்கள் அந்தந்த கால நிலைகளில் இருந்து கொண்டு வந்துள்ளோம்; கொண்டு வருகிறோம்.

2025 ஆண்டு துவக்கத்தில் ஐந்து புதிய நூல்கள் கொண்டு வந்துள்ளோம்.
1. சீனா நவீன சமூக ஏகாதிபத்தியம்
2. நஞ்சு தடவிய மூன்று குற்றவியல் சட்டங்கள்
3. ஒரே நாடு ஒரே தேர்தல் ! மாநிலங்களை அழிக்காதே!
இன்னும் புதிய வெளியீடுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியின்போது கொண்டு வர உள்ளோம்.

கீழைக்காற்று துவங்கிய காலத்திலிருந்து நெய்வேலியில் நடைபெற்று வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் புத்தகக் கண்காட்சியிலும், சென்னையில் தமிழக அரசின் உதவியுடன் பபாசி ஏற்பாடு செய்து நடத்தி வரும் புத்தகக் கண்காட்சியிலும் தொடர்ச்சியாக கீழைக்காற்று வெளியீட்டம் பங்கெடுத்து வருகிறது.
எமது வெளியீட்டகத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகளையும், வாசகர்களுக்கு அது ஏற்படுத்துகின்ற அறிவு மேம்பாடு குறித்தும் ஆய்வு செய்துள்ள நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் எமது பதிப்பகத்தை தேர்வு செய்து கௌரவிக்கின்ற வகையில் எதிர்வரும் 08-7-2025 அன்று நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

லாப நோக்கமின்றி முற்போக்கு நூல்கள் மற்றும் மரபு சார்ந்த, அறிவியல், வரலாறு, பல நாட்டின் அனுபவங்கள் ஆகியவற்றை தொகுத்து ஒரு குடையின் கீழ் தருகின்ற கீழைக்காற்று வெளியீட்டகத்தை அங்கீகரித்து கௌரவிக்கின்ற என்எல்சி புத்தக கண்காட்சி பொறுப்பாளர்களுக்கும், நிர்வாகிக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதி வாசகர்களையும், புத்தகக் கண்காட்சிக்கு அழைக்கின்றோம்.

கீழைக்காற்று வெளியீட்டகம்
8925648977

நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2025

1 COMMENT

  1. கீழே காற்று பதிப்பகத்திற்கு பபாசி நடத்தும் புத்தக வெளியீட்டு விழாவில் நெய்வேலியில் நடந்த புத்தக கண்காட்சியில் கூட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு மேல் கீழே காற்று பதிப்பாகும் போர்குணத்தோடு பதிப்பகத்தை தொடர்ந்து நடத்தி வந்த சாதனையை விளக்கி கௌரவித்த பபாசி பதிப்பாளர் சங்கங்களுக்கு நன்றி மற்றும் கீழே காற்று பதிப்பகத்திற்கு எமது வாழ்த்துக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here