உணவுக்கு பணம் கேட்ட சிறுவன் கொலை!

பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுவன் உணவுக்காக தலைமை காவலர் ஒருவரிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த காவலர் அந்த சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொன்று உள்ளார்

இந்த கொலையை மறைக்க இறந்த சிறுவனின் உடலை காரில் ஏற்றி குவாலியர் அருகே சிறுவனின் உடலை வீசி சென்றுள்ளார் கொலை செய்த காவலர். அந்தக் கார் தலைமைக் காவலரின் பெயரில் பதிவாகி இருந்ததால் பிடிபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் கூறும்போது அந்த சிறுவன் உணவுக்கு பணம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தான். நான் அந்த நேரத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன் அதனால்தான் கொலை நடந்து விட்டது என நியாயப்படுத்துகிறார்.

இறந்து போன சிறுவனின் தந்தை சலூன் கடை வைத்துள்ளார். மே 4ஆம் தேதி தனது மகனை காணவில்லை என கூறியுள்ளார். மே 5ஆம் தேதி கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நாளில் சிறுவனின் உடலும் குவாலியர் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

உணவுக்கு பணம் கேட்ட சிறுவன் கொல்லப்பட்டிருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கலாம். இதுதான் இந்தியாவின் நிலைமை. வறுமை நாடுகளின் பட்டியலில் இந்தியா 101வது இடம். பாகிஸ்தான், வங்கதேசத்திற்கு கீழே சென்றுவிட்டது. அதாவது இந்தியாவை விட மோசமாக 15 நாடுகளே உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட ஒரு சிறுமி பசியால் மயங்கி விழுந்து இறந்ததை பார்த்து இருப்போம்.

உணவுக்கு பணம் கேட்ட சிறுவனை கொன்றது தலைமைக் காவலரின் அதிகாரத் திமிர். ஆனால் அந்த சிறுவனின் பசி, பட்டினிக்கு காரணம் பாசிச மோடி அரசாங்கம். உணவுக்காக சிறுவன் கொலை செய்யப்பட்ட அதே காலத்தில் அதானியின் ஒரு மணி நேர வருமானம் 1000 கோடிக்கும் மேல். இந்திய பிரதமர் மோடி உண்ணும் காளானின் விலை சில லட்சங்கள். இவர்களா சிறுவனின் கொலையை கண்டு வருத்தப்பட போகிறார்கள். என்றும் வருந்தப் போவதில்லை.

நாமும் இதுபற்றி கேள்வி கேட்காமல் விட்டால் நாளை அதானியின் ஒரு மணி நேர வருமானம் 2,000 கோடி ஆகலாம் நம் வீட்டிலும் இதுபோன்ற ஒரு இழப்பு நடக்கலாம். மக்களின் வரிப்பணத்தை சுருட்டி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் பாசிஸ்டுகளை வீழ்ந்தால் எதுவும் மாறாது. தாமதிக்காமல் கார்ப்பரேட்-காவி பாசிசத்திற்கு எதிராக களம் காண்போம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here