
பார்ப்பன (இந்து) மதவெறி பாசிஸ்டுகள் தனது அடுத்த கட்ட தாக்குதலை துவங்கிவிட்டனர் என்பதன் அறிகுறி தான் சம்பல் பகுதியில் நடந்துள்ள துப்பாக்கிச் சூடு மற்றும் மசூதி விவகாரம்.
மேற்கு உத்திர பிரதேசம் பகுதியில் உள்ள சம்பலின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமா மசூதி கட்டப்பட்ட காலகட்டம் குறித்து ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர்கள் பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு வந்தனர்.
குறிப்பாக முகலாய அரசர் பாபரின் உத்தரவுப்படி இந்தப் பகுதியில் இருந்த இந்துக் கோவில் இடிக்கப்பட்டு ஜாமா மசூதி கட்டப்பட்டதாக இந்து தரப்பு, நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இருப்பினும், சம்பலின் வரலாறு குறித்து ‘தாரிக்-இ-சம்பல்’ என்ற புத்தகத்தை எழுதிய மௌலானா மொயீத் கூறுகையில், “பாபர் இந்த மசூதியை பழுது பார்த்தார். எனவே, அவர்தான் இந்த மசூதியைக் கட்டினார் என்பது உண்மையல்ல,” என்று எழுதியுள்ளார்.
சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் மௌலானா மொயீத் கூறுகையில், “லோதி ஆட்சியாளர்களை தோற்கடித்த பாபர் 1526-இல் சம்பலுக்கு பயணம் செய்தார் என்பது வரலாற்று உண்மை. ஆனால் பாபர் ஜாமா மசூதியைக் கட்டவில்லை” என்று உண்மையில் நடந்த வரலாற்றை தெரிவிக்கின்றார்.
அயோத்தியில் ராமன் பிறந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டினார் என்ற அண்டப்புளுகை முன்வைத்து பாபர் மசூதியை இடித்த காட்டுமிராண்டி கும்பலை சார்ந்த பார்ப்பன பண்டாரங்கள் ஜாமா மசூதி குறித்தும் தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளனர்.
குறிப்பாக கைலாதேவி கோவிலின் தலைமை அர்ச்சகரான ரிஷிராஜ் கிரி மகராஜ், சம்பலில் இருக்கும் ஷாஹி மசூதியை ஹரிஹர் கோவில் என்று கூறியிருந்தார்.
ரிஷிராஜ் கிரி மகராஜ் நவம்பர் 19ஆம் தேதி அன்று சிவில் நீதிமன்றத்தில் இங்கு ஆய்வு நடத்தக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு வர வேண்டும் என்றே காத்திருந்த நீதிமன்றம் ஏழு நாட்களுக்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டது., வீடியோ மற்றும் புகைப்படத்துடன் கூடிய அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஆய்வுக் குழுவிடம் கூறியது.
இந்த உத்தரவின் படி ஞாயிற்றுக்கிழமை காலை மசூதியில் நீதிமன்ற உத்தரவுப்படி நடந்த ஆய்வுப் பணிகளின் போது சமாஜ்வாதி கட்சியின் முன்னணியாளர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் சுமார் 3000 பேருக்கு மேற்பட்டவர்கள் இந்த ஆய்வுக்கு எதிர்ப்பை தெரிவித்து போராடிக் கொண்டிருந்தனர்.
அமைதியான இந்தப் போராட்டத்தை வன்முறையாக மாற்றிய காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை குறைந்தது 5 பேர் இறந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை மற்றும் உத்தரப்பிரதேசத்தின் உயர் காவல்துறை அதிகாரிகள் இஸ்லாமியர்கள் தான் வன்முறையை தூண்டியதாகவும் அவர்களுக்குள் மோதிக்கொண்டு இறந்து போயுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே குற்றம் சுமத்தி வருகின்றனர்.
ஆனால் இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது, இந்த துப்பாக்கி சூடு காவல்துறையால் நடத்தப்பட்டதா அல்லது பாசிச இந்துமத வெறி குண்டர்களால் நடத்தப்பட்டதா என்பதை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
படிக்க: பாப்ரி மசூதியிலிருந்து கியான்வாபி வரை ; இந்திய நீதிமன்றங்கள்!
இந்த சூழலில் மேற்கு உத்தரபிரதேசத்தில் சம்பல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஷாஹி ஜாமா மசூதிக்கு வெளியே பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மசூதியின் முகப்பில் ஆங்காங்கே கற்கள் சிதறிக் கிடக்கின்றன. சாலையில் எரிந்த நிலையில் இருக்கும் வாகனங்கள் அகற்றப்பட்டாலும் அவற்றின் தடயங்கள் இன்னும் உள்ளன.
இறந்து போன ஐந்து இஸ்லாமிய இளைஞர்களும் 17 வயதில் இருந்து 25 வயதிற்கு உட்பட்ட இளம் வயது வியாபாரிகள் மற்றும் தரைக்கடை நடத்தி வந்தவர்கள். இவர்கள் மீது தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாமா மசூதி விவகாரம் குறித்து நீதி கேட்டு போராடிய மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது மட்டுமின்றி சுமார் 70-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 20க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டு தான் சம்பல் பகுதியில் நடந்துள்ள இந்த துப்பாக்கி சூடு மற்றும் பாசிச இந்து மதவெறி குண்டர் படையினரின் தாக்குதல்.
ஏற்கனவே அயோத்தி ராமஜென்ம பூமி விவகாரம், துவாரகா கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம் என்றெல்லாம் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மசூதிகளுக்கு அடியில் இந்து கோவில்கள் உள்ளதாக கூறிக்கொண்டு மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மீது கொலை வெறி தாக்குதலையும், அவர்களின் வழிபாடு மற்றும் உயிர் வாழும் உரிமை மீது வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வருகின்ற ஆர்எஸ்எஸ் மற்றும் பாசிச பாஜக குண்டர் படைக்கு எதிராக நேருக்கு நேர் நின்று மோதுவது ஒன்றுதான் ஒரேவழி.
- கணேசன்
பிஜேபி ஆளக்கூடிய மாநிலங்களில் போலிசும், நீதிமன்றங்களும் இஸ்லாமியாருக்கு எதிராக இருப்பதை இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
இந்து, இந்தி, இந்தியா என்ற கொள்கை அடிப்படையில் நகர்வதை புரிந்துகொள்ள முடிகிறது.
வன்மையாக கண்டிக்கின்றோம்!
உத்தரபிரதேச சாம்பல் பகுதியில் இஸ்லாமிய இளைஞர்கள் ஐந்து பேரை சுட்டுக்கொன்ற ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கூலிப்படையான உ.பி காவல்துறையை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்தியா மதம் சார்பற்ற நாடு இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஜாதி மத பேதமின்றி சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த நாட்டில் இஸ்லாமியர்களை குறி வைத்து /ஆர் எஸ் எஸ்/ பிஜேபி/ காவி குண்டர்கள் கலவரத்தை உருவாக்கி நாட்டில் பிரிவினையை தூண்டி மக்களை சிந்திக்க விடாமல் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் நோக்கத்தோடும் தன்னுடைய இந்துராஷ்டிரத்தை நிறுவ துடிக்கிறது இதற்காகத்தான் மசூதிக்குள் இந்து கடவுள் இருப்பதாக கூறி இஸ்லாமியர்களின் வெறுப்பை தூண்டி இனப்படுகொலை செய்து வருகிறது
ஆர் எஸ் எஸ்/ பிஜேபி காவி கும்பல். கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகளை விழுத்த மக்கள் படைய திரட்டுவோம்.
நன்றி.
இதில் வேடிக்கை என்னவென்றால் சுந்தரம் அடைந்ததாகச் சொல்லப்படும் 1947 ஆகஸ்ட் 15 அன்று வழிபாட்டுத் தளங்கள் ஒவ்வொன்றும் எவர் எவர் அல்லது எந்தெந்த மத கட்டுப்பாட்டில் இருந்தனவோ அதே நிலைமை கடைசி வரை நீடிக்க வேண்டும்; பின்னர் இது குறித்து வினா எழுப்பி இது என்னுடையது; அது என்னுடையது; என்று எவரும் கோரிக்கை எழுப்பவோ, போராடவோ கூடாது – என்றே அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் அரசியல் அமைப்புச் சட்டத்தை தன் மயிர் அளவிற்கு கூட சமமாக கருதாத பாசிசக் காவி(லி)க் கூட்டம், சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தளங்களான மசூதிகள் ஒவ்வொன்றின் கீழும் ‘எங்களது இந்துமத கடவுளர்கள் பிறந்த இடம், வாழ்ந்த இடம், கோவில் கட்டப்பட்டிருந்த இடம் – என்ற சரடு விட்டு வீண் கலவரங்களை ஏற்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதனால் எண்ணற்ற அப்பாவி இஸ்லாமியர்கள், இந்து மத வெறியர்களால் வெளியூட்டப்பட்டு கொன்று புதைக்கப்படுகிறார்கள். இதற்கு முடிவு கட்ட இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் மட்டுமல்ல, தம்மை ‘இந்து’ என்று கருதிக் கொண்டிருக்கக் கூடிய பழங்குடியின தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் இந்த பாசிச பார்ப்பன ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ மதவெறிக் கும்பலை ஓட ஓட விரட்டியடிக்க களம் காண வேண்டும்! நமது அனைத்து வாழ்வாதார பிரச்சனைகளையும் மடை மாற்றி சாதி மதக் கலவரங்களாகத் திட்டமிட்டே உருவாக்குகின்ற இந்தக் கயவர்களின் சதித்தனத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் உ.பி.யில் மற்றும் ஓர் மசூதியை கைப்பற்றும் எண்ணத்தோடு ஆக்கிரமிப்பாளர்களான காவி உடை தரித்த யோகி ஆதித்யாவின் காவல்துறை எதிர்த்துப் போராடிய இஸ்லாமிய இளைஞர்களை கொன்று குவித்த கொடும் பாதகச் செயல்களை அம்பலப்படுத்தும் இக்கட்டுரை சிறப்புடைத்து. வாழ்த்துக்கள் தோழரே!