திருப்பரங்குன்றத்தை கலவர குன்றாக்க முயலும் காவிகள்!

மதத்தை முன்வைத்து மக்களை பிளவுபடுத்துவது தான் காவிப் பாசிஸ்ட்டுகளின் நடைமுறை தந்திரம் என்றால், அதை எதிர்கொள்ள மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தி களம் காண்கின்றனர் மதுரை மக்கள்.

0
தினசரி நாளேடு செய்திகள்

திருப்பரங்குன்றத்தை கலவர குன்றாக்க முயலும் காவிகள்!
 எதிர்த்துக்  களமிறங்கியுள்ள மத நல்லிணக்க அமைப்பு!


லைமுறைகளைக் கடந்தும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்து வரும் திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக்க முயலும் சங்கிகளுக்கு எதிராக மத நல்லிணக்க அமைப்பு உருவாகியுள்ளது.

மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றம் என்பது முருகனின் புகழ் பெற்ற கோயிலாக இருந்து வருகிறது.

இந்த முருகன் கோயில் மலையின் அடிவாரத்தில் தான் அமைந்துள்ளது.
அதற்கு மேலே சமணக் குகைகளும், காசி விஸ்வநாதர் கோயிலும், மலை உச்சியில் சிக்கந்தர்  தர்காவும் அமைந்துள்ளது.

ஆர் எஸ் எஸ் காலிகள் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி மோதவிட்டு செல்வாக்கடைய எத்தனிக்கிறார்கள்.

 முருகன்: சைவமா – அசைவமா?

மலையிலும் மலையை ஒட்டிய அடிவாரப் பகுதியிலும் வாழும் மக்களின் உணவு முறை  வேட்டையாடி உண்பதாகவே இருந்துள்ளது. தாம் எதை உயர்வாக மதிப்புக்குரியதாக விரும்பி உண்கிறார்களோ, அதை தமது குலத் தலைவனுக்கும் அல்லது குல கடவுளுக்கும் படைக்கும் பழக்கம் அமலில் உள்ளது. இதிலிருந்து பார்த்தால் முருகன் அசைவமாகவே இருக்க வேண்டும்.

மலைக்கு மேல் உள்ள சிக்கந்தர்  தர்காவில் ஆடு வெட்டுவது மலையடிவாரத்தில் உள்ள முருகனுக்கு எவ்விதத்திலும் நெருடலாக இருந்ததில்லை. மிக அருகில் இருக்கும் காசி விஸ்வநாதரும் கண்டு கொள்ளவில்லை. இரு மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இருந்ததில்லை. ஆனால், திடீரென முளைத்துள்ள சங்கிகள்தான் களத்தில் இறங்கி, கலவரத்தைத் தூண்ட ஆரம்பித்துள்ளனர்.

படிக்க:

♦ கொலைகார ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு! தடையை நீக்கிய பாசிச கும்பல்!

 கலவரத்தை தூண்ட பன்றி இறைச்சியை ஆயுதமாகும் காவிக் கும்பல்!!

 உருவாகிறது ஒன்றுபட்ட போராட்டம்!

மதத்தை முன்வைத்து மக்களை பிளவுபடுத்துவது தான் காவிப் பாசிஸ்ட்டுகளின் நடைமுறை தந்திரம் என்றால், அதை எதிர்கொள்ள மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தி களம் காண்கின்றனர் மதுரை மக்கள். சாதி மத வேறுபாடுகளை புறக்கணித்து கலவரக் காவிகளின் சதியை முறியடிக்க மத நல்லிணக்க அமைப்பாக அணிதிரண்டு உள்ளனர்.

காவிகளின் சதித்திட்டங்களை  முளையிலேயே கிள்ளி எறிய ஆலோசனைக் கூட்டம் போட்டுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து முதல் கட்டமாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கொண்டுள்ளனர்.

மத நல்லிணக்க அமைப்பினர் கலெக்டரிடம் மனு அளிக்க சென்ற புகைப்படம்

மத நல்லிணக்க அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, பாஜகவினர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு கலவரத்தைத் தூண்டி செல்வாக்கு பெறத் திட்டமிட்டுள்ளதாக விமர்சித்தார்.

இப்பிரச்சினையில் நீதிமன்றம் தெளிவான எல்லைகளை வரையறுத்து வழிகாட்டி இருந்தும், அதையும் மீறி கலவரத்தை தூண்டவே காவிகள் துடிக்கின்றனர். முதலில் மாலை 6 மணிக்கு மேல் தர்காவுக்கு செல்லக்கூடாது என தடை போட்டனர் பின்னர் கந்தூரி விழாவிற்கு ஆடுகளை கொண்டு செல்ல விடாமல்  வழி மறிக்கின்றனர்.

பிப்ரவரி 4ம் தேதி ஆர் எஸ் எஸ் காலிகள் சட்டவிரோதமாக திருப்பரங்குன்றத்தில் கூடி பிரச்சினையை கிளப்ப திட்டமிட்டுள்ளனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும். மீறினால் மத நல்லிணக்க அமைப்பின் சார்பில் இவர்களை அம்பலப்படுத்தி முறியடிக்கும் வகையில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் மத நல்லிணக்க அமைப்பு அறிவித்துள்ளது. முன்மாதிரியான இந்த முயற்சியின் மூலம் சங்கி கும்பலை எதிர்கொள்ள இந்தியாவுக்கே வழிகாட்டுகின்றனர் மதுரை மக்கள்.

சங்பரிவார காவிகளுக்கு எதிரான இப்போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் தோள் கொடுப்போம். கார்ப்பரேட் காவிப் பாசிஸ்டுகளை வீழ்த்துவோம்.

  •  இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here