கலவரத்தை தூண்ட
பன்றி இறைச்சியை ஆயுதமாகும் காவிக் கும்பல்!!
இந்து மத வெறியர்கள், கடந்த வாரம் செவ்வாய்க் கிழமையன்று அயோத்தியில் உள்ள குலாப் ஸா தர்காவில் பன்றி இறைச்சியையும், ரத்தம் தடவப்பட்ட குர்ஆனின் பக்கங்களையும் வீசியுள்ளனர்.”நீங்கள் கற்களை வீசினால் நாங்கள் வெடிகுண்டுகளை வீசுவோம்” என்றும் “நாங்கள் உங்கள் குரானை சேதப்படுத்தியுள்ளோம். ஒரு தகப்பனுக்குப் பிறந்தவர்கள் என்றால் வீதியில் வந்து சண்டையிடுங்கள்” என்றும் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

இஸ்லாமிய மக்களுக்கு ஆத்திரத்தைக் கிளப்பி கலவரத்தை உருவாக்குவதற்கு எப்படியெல்லாம் இந்த காவி பயங்கரவாதிகள் முயற்சி செய்கின்றனர் பாருங்கள்.
இந்த அயோக்கியத்தனத்தை செய்த 11 பேரில் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். “இந்து யோதா சங்காதன்” என்ற அமைப்பின் தலைவனான மிஸ்ரா என்பவன் தான் இதில் மூளையாக செயல்பட்டவன். இவன் மீது ஏற்கனவே 4 கிரிமினல் வழக்குகள் உள்ளன. பாபாசாகேப் அம்பேத்கரின் படத்தின் மீது இவன் சிறுநீர் கழித்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மிஸ்ரா குற்றங்களை செய்வதையே தனது வழக்கமாக கொண்டவன்; கடந்த காலத்தில் அயோத்தியில் பல சந்தர்ப்பங்களில் வன்முறையை தூண்டியவன்.மேலும், இஸ்லாமியர்களை கொல்வேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன் கொல்லப்பட வேண்டிய தேச துரோகிகளின் பட்டியலை தயாரித்து இருப்பதாக கூறி இருப்பவன்.

ஒரு காணொளியில் இந்த மிஸ்ரா “தேசத்துரோகிகள் ஜாக்கிரதையாக கேளுங்கள். இந்துக்கள் இப்பொழுது விழிப்புடன் இருக்கிறார்கள். நாங்கள் உங்களது பட்டியலை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீடுகளிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டு கொல்லப்படுவீர்கள் “என்று விஷம் கக்குகிறான்.
மற்றொரு காணொளியில் “இஸ்லாமியர்களுடன் எந்த ஒரு பொருளாதார தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டோம் என்று உறுதி எடுப்போம் . நம்மிடம்(இந்துக்களிடம்) இவர்கள் பணம் பெறுகிறார்கள். அந்தப் பணத்தில் ஒரு பகுதியை மசூதிகளுக்கும் மதரசாக்களுக்கும் கொடுக்கிறார்கள். அந்தப் பணம் தீவிரவாதிகளுக்குச் செல்கிறது. அந்தப் அந்த பணத்தில் வாங்கப்பட்ட தோட்டா ராணுவ வீரனையும் இந்துவையும் கொல்கிறது. இந்துக்கள் கொடுக்கும் பணம் மறைமுகமாக இந்துக்களை கொல்வதற்கு பயன்படுகிறது.(எனவே)பொருளாதாரரீதியாக எந்தவிதமான தொடர்பையும் முஸ்லிம்களுடன் இந்துக்கள் வைத்துக் கொள்ளக் கூடாது”என்கிறான் மிஸ்ரா.
இஸ்லாமியர்களைப் போல உடை அணிந்தவர்களை தாக்குவதற்கும் கொல்வதற்கும் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததற்காக 2016ஆம் ஆண்டில் சிறையில்அடைக்கப்பட்டவன் தான் இந்த மிஸ்ரா.
மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி தனிநபர்களை கொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர்கள் பன்றிக் கறியை வீசி இஸ்லாமியர்களுக்கு ஆத்திரமூட்டி தெருச் சண்டைக்கு வரவழைத்து இனப்படுகொலை செய்வதற்கு முயற்சிக்கிறார்கள்.
இந்தக் காவி பாசிஸ்டுகளை முறியடிக்க இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையின மக்களும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்களும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என்பது காலத்தின் தேவையாக உள்ளது.
- பாலன்
செய்தி ஆதாரம்: The Wire