பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் மக்கள் மீது சுமத்தப்படும் வரி அதிகரித்துக் கொண்டே போகிறது. நாடு சுதந்திரம் பெற்றதாக சொல்லப்பட்ட காலத்திலிருந்து இருந்த வரி விதிப்பு முறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, “ஒரே நாடு, ஒரே வரி” என்ற திட்டத்தின் கீழ் ஜிஎஸ்டி வரி கொண்டுவரப்பட்டது.

ஜிஎஸ்டி வரி கொண்டுவரப்பட்ட போது பன்முக வரி விதிப்பு முறையை ஒழித்து கட்டி அனைத்து துறைகளிலும் ஒரே வரி விதிப்பது சாதகமாக உள்ளது என்று வாதம் வைக்கப்பட்டது.. ஆனால் வரி வருவாயில் மாநிலங்களுக்கு கிடைக்கின்ற வரி மற்றும் இந்திய ஒன்றிய அரசுக்கு கிடைக்கின்ற வரி என்று இரண்டு வகை உள்ளது.

இதில் மாநில அரசுக்கு வருவாயை ஈட்டி தரும் வரிகளை, இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு சென்று ஒரே வரியாக மாற்றி ஜிஎஸ்டி என்று கொண்டுவரப்பட்டபோது மாநிலங்களின் வருவாய் மற்றும் சுயமாக தன்னை பராமரித்துக் கொள்வதற்கு உள்ள வசதிகள் அனைத்தும் ஒழித்துக் கட்டப்பட்டது.

அது மட்டுமின்றி சாதாரண மக்கள் பயன்படுத்தக்கூடிய சோப்பு, சீப்பு, உணவு தானிய பொருட்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டு பொருள்கள் மீது 32 % வரை வரி விதிக்கப்பட்டது. இதற்கு நேர் மாறாக மோடி 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது கார்ப்பரேட்டுகளுக்கு 34.5 % இருந்த வரி படிப்படியாக குறைக்கப்பட்டு, 2022 ஆம் ஆண்டில் 24.7% ஆகவும், 2023ல் 22% வரை கொண்டுவரப்பட்டுள்ளது.

“இந்தியாவின் ஜிஎஸ்டியில் ஐந்து வரி அடுக்குகள் உள்ளன. ,இதில் வரி விலக்கு மற்றும் பூஜ்ஜிய-விகித வகை சப்ளைகள், உள்ளீடுகள் மீது செலுத்தப்பட்ட வரிகளைத் திரும்பப் பெறுவதற்கு உள்ளீட்டு வரிக் கடன் (ITC) வழங்குதல் ஆகியவை அடங்கும்.. கூடுதலாக, தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் போன்ற சில பொருட்களுக்கு நிலையான வகையிலிருந்து, வேறுபட்ட குறிப்பிட்ட விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது.. பெட்ரோலியம், மின் கட்டணங்கள் போன்ற சில பொருட்கள் ஜிஎஸ்டி பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.. இவை அனைத்தும் ஜிஎஸ்டியை ஒரு சிக்கலான, மறைமுக வரி பிடுங்குகின்ற கட்டமைப்பாக ஆக்குகிறது.

ஜிஎஸ்டி முறையைப் பின்பற்றும் 82 நாடுகளில், 49 நாடுகளில் ஒரே ஜிஎஸ்டி ஸ்லாப் உள்ளது, 28 இல் இரண்டு வரி அடுக்குகள் உள்ளன, மேலும் இந்தியா, இத்தாலி, லக்சம்பர்க், பாகிஸ்தான் மற்றும் கானா உட்பட மற்ற ஐந்து நாடுகளில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட ஜிஎஸ்டி அடுக்குகள் உள்ளன. இதனால் இந்தியாவில் கடைபிடிக்கப்படும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை உலகிலேயே மிகவும் சிக்கலான ஒன்றாக உள்ளது” என்கிறது உலக வங்கி அறிக்கை.

இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் சம அளவில் வரி கட்டுவதில்லை. மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் பல்வேறு நிலைமைகளின் காரணமாக ஒவ்வொரு மாநிலமும் ஏற்றத்தாழ்வாகவே வரிகளை செலுத்தி வருகிறது. அவ்வாறு மாநிலங்களில் இருந்து கிடைக்கின்ற வருவாயை மாநில அரசுக்கு முறையாக திருப்பிக் கொடுப்பதில் பாசிச பாஜக அரசு பாரபட்சமாகவும், ஓரவஞ்சனை செய்கின்ற வகையிலும், இன்னும் தெளிவாக சொல்ல போனால் தென் மாநிலங்களை ஒழிக்கின்ற வகையிலும் நிதியை ஒதுக்கி வருகிறது.

“உத்திரபிரதேச மாநிலம் 18,180 கோடி ரூபாயை ஜிஎஸ்டி வரியாக செலுத்துகிறது, ஆனால் அந்த மாநிலத்திற்கு 13,089 கோடி ரூபாய் ஒன்றிய அரசின் மூலம் திருப்பித் தரப்படுகிறது. அதுவே பீகார் மாநிலம் செலுத்தும் ஜிஎஸ்டி வரி வருவாய் 4,731 கோடி ரூபாய். ஒன்றிய அரசு பீகாரருக்கு 7,338 கோடி ரூபாயை திரும்ப தருகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து ஜிஎஸ்டி வரி வருவாய் 7,334 கோடி கிடைக்கிறது. ஒன்றிய அரசு மத்திய பிரதேசத்திற்கு 5,727 கோடி ரூபாயை திருப்பித் தருகிறது. ஆனால் தமிழகம் 23,661 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்துகிறது. அதற்கு மாறாக 2,976 கோடி ரூபாய் மட்டும் தான் திருப்பி தரப்படுகிறது”

உதாரணமாக “உத்திரபிரதேச மாநிலம் 18,180 கோடி ரூபாயை ஜிஎஸ்டி வரியாக செலுத்துகிறது, ஆனால் அந்த மாநிலத்திற்கு 13,089 கோடி ரூபாய் ஒன்றிய அரசின் மூலம் திருப்பித் தரப்படுகிறது. அதுவே பீகார் மாநிலம் செலுத்தும் ஜிஎஸ்டி வரி வருவாய் 4,731 கோடி ரூபாய். ஒன்றிய அரசு பீகாரருக்கு 7,338 கோடி ரூபாயை திரும்ப தருகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து ஜிஎஸ்டி வரி வருவாய் 7,334 கோடி கிடைக்கிறது. ஒன்றிய அரசு மத்திய பிரதேசத்திற்கு 5,727 கோடி ரூபாயை திருப்பித் தருகிறது. ஆனால் தமிழகம் 23,661 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்துகிறது. அதற்கு மாறாக 2,976 கோடி ரூபாய் மட்டும் தான் திருப்பி தரப்படுகிறது” என்று ஜிஎஸ்டி கவுன்சிலின் புள்ளிவிவரம் அறிவிக்கின்றது.

இவ்வளவு நிலைமைகள் இருந்தாலும் மாநில அரசுக்கு கிடைக்கின்ற வரி வருவாய் தென் மாநிலங்களில் தான் அதிகமாக உள்ளது. அதிக வரி வசூலிக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, தென் மாநிலங்களான ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இரண்டாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2022-23 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் பற்றிய புள்ளி விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. மகாராஷ்டிரா    451777 கோடி.
  2. ஆந்திர பிரதேசம் 323369 கோடி.
  3. உத்தர பிரதேசம் 296417 கோடி.
  4. தமிழ்நாடு  273424 கோடி.

அதேபோல வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் இந்த மாநிலங்களில் அதிகரித்துள்ளது. இவ்வாறு வரி செலுத்துபவர்கள் சிறு குறு தொழில் முனைவர்கள், வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக முகவாண்மைகள் ஆகியோர்தான் பெரும்பான்மையினராவர்.

கார்ப்பரேட்டுகளின் இந்திய மேலாண்மை அதிகாரியாக செயல்படும் பாசிச மோடி ஆட்சியில், நாட்டில் 53 சதவீதத்திற்கு மேல் சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் 10% பேர் சொத்து வரி அல்லது கார்ப்பரேட்டுகளின் தொழில்வரி போன்றவை குறைந்து கொண்டே போகிறது. இதனால் அவர்களிடம் பல ஆயிரம் கோடி செல்வம் குவிந்து கொண்டே போகிறது.

நாட்டிலுள்ள 10% செல்வங்களை அனுபவிக்கின்ற 73% மேலான உழைக்கும் மக்கள் தொடர்ந்து வரிக் கொடுமையால் சுரண்டப்படுகின்றனர்.

நாட்டில் ஒரு கோடிக்கும் மேல் ஆண்டு மொத்த வருமானம் பெற்றவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், 23 ஆண்டு ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், வருமானவரி கணக்கு தாக்கல் விவரங்களை வருமானவரித் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2021-22-ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கும் மேலாக வருவாய் பெற்றதாக 1,69,000 தனிநபர்கள் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

மாநில வாரியாக பார்க்கும்போது, அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில்  ஒரு கோடியே 98 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. உத்தரப்பிரதேசத்தில் 75,72,000 ஆயிரம் கணக்குகளும், குஜராத்தில் 75,62,000 ஆயிரம் கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. 47,91,000 ஆயிரம் கணக்குகளுடன் தமிழ்நாடு 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதிலும் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது சாதாரண மக்கள் அதாவது பெரும்பான்மை மக்கள் தரப்பில் வருகின்ற சிறு குறு தொழில் முனைவர் முதல் நடுத்தர பணக்கார விவசாயிகள் வரையிலான மக்கள் தான் இந்த எண்ணிக்கையில் வருகிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:அனில் அம்பானியின் 1400 கோடி வரி பாக்கியை தள்ளுபடி செய்த பிரான்ஸ் அரசு  பின்னணியில் மோடி!   கார்ப்பரேட்டுகளுக்கு இலவச இந்தியா! மக்கள் தலையில் வரிச் சுமை!

வரி வருவாய் என்பதை புள்ளிவிவர கணக்குகளில் தெரிவிக்கும் போது சாதாரணமாக புரிந்து கொள்ள முடியாது என்பது உண்மைதான். மேற்கண்ட விவரங்களிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள் இரண்டு மட்டுமே, ஒன்று நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு வரி விதிப்பு முறைகளால் ஒட்ட சுரண்டப்படுகின்றனர். இதற்கு எதிர்மறையாக கார்பரேட்டுகளின் சொத்து, செல்வங்கள் குவிந்து கொண்டே போகிறது என்பதும், மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆளுகின்ற மாநிலங்களுக்கு இந்திய ஒன்றிய அரசினால் வரி வருவாய் அதிகமாக  கொடுக்கப்படுகிறது.

பாஜகவிற்கு எதிராக பேசுகின்ற, போராடுகின்ற தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வரி வருவாய் குறைத்து தரப்படுகிறது என்பது தான் அந்த உண்மை.

இதனால் மாநில அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய சுகாதாரம், சாலைப்போக்குவரத்து, உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி, வேளாண்மை முதலீடு போன்றவை அனைத்தும் படிப்படியாக ஒழித்துக் கட்டப்பட்டு கார்ப்பரேட்டுகளின் பிடிக்குள் சென்று கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில், “மாநில அரசுகளின் வருவாயை பறிக்கின்ற, சிறு குறு தொழில்களை ஒழிக்கின்ற ஜிஎஸ்டி வரியை ரத்து செய். தனி அதிகாரம் கொண்ட நிதி ஆயோக் முறையை கலைத்திடு மாநிலங்கள் பங்கேற்புடன் கூடிய திட்ட கமிஷன் முறையை அமல்படுத்து” என்ற முழக்கத்தை குறைந்தபட்ச செயல் திட்டங்களில் ஒன்றாக முன்வைத்துள்ளது.

  • மருது பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here