எமது முகநூல் பக்கமான வினை செய் மற்றும் பிளாக் இரண்டும் மே மாதம் ஐந்தாம் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
மார்க்சியம் என்ற பெயரில் பல்வேறு திருத்தல்வாத சரக்குகளை விற்பனை செய்தால் அது பேஸ்புக், twitter, instagram போன்ற Big tech நிறுவனங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்துவதில்லை.
மாறாக மார்க்சிய – லெனினியத்தை சரியான இயக்கவியல் அணுகுமுறையுடன் கையாண்டு உழைக்கும் மக்களுக்கு அரசியலை போதனை செய்தால் அதன் ஆபத்தை இது போன்ற தகவல் தொழில்நுட்பக் கார்ப்பரேட்டுகள் துல்லியமாக மதிப்பீடு செய்கிறார்கள்.
அந்த வகையில் எமது வினை செய் பக்கத்தில் வெளிவந்த கட்டுரைகள் செய்திகள் கார்ப்பரேட்டுகளை அச்சுறுத்தியுள்ளது என்றே நாங்கள் கருதுகிறோம்.
அந்த அச்சத்தின் கோழைத்தனமான வெளிப்பாடு தான் முகநூல் பக்கத்தை தடை செய்வது, பிளாக்குகளை முடக்குவது போன்ற கீழ்த்தரமான செயல்பாடுகள் ஆகும்.
சீப்பை எடுத்து வைத்துக் கொண்டு விட்டால் திருமணமே நின்று போகும் என்று கருதுகின்ற முட்டாள்களின் கனவுக்கு கல்லறை கட்டுவோம்! முகநூல் தடைக்கு எதிராக போராடுவோம்!
ஆசிரியர் குழு,
வினை செய்.