ரணில் தேன்கூட்டில் கை வைத்திருக்கிறார். இது காலிமுகத்திடலில் ஒன்றுகூடிய ஒரு சிலரின் போராட்டமல்ல. இது இலங்கையின் ஒட்டுமொத்த மக்களின் போராடடம்.

ரணில் பிரதமராவதற்கு கோட்டாவிடம் வைத்த முதல் கோரிக்கையே கோட்டாகோகம போராட்டக்காரர்களை ஒன்றும் செய்யக் கூடாது என்பது தான். பிரதமரானது கோட்டாகோம போராளிகளுக்கு ஆதரவு தருவேன் என்றார்.

நேற்று அமைதியாக தூங்கிக் கொண்டிருந்த போராட்ட களத்தில் இராணுவத்தின் வெறியாட்டத்தை ஆரம்பித்து மீண்டும் சுறுசுறுப்பாக்கியதற்கு நன்றி ரணில்.
இந்த நாட்டின் புதிய அரசியல் அத்தியாயம் ரணிலை அரசியலிலிருந்து துரத்துவதிலிருந்துதான் ஆரம்பிக்கும்.

சுதந்திரத்திற்கு பின் 74 வருடகாலமாக நாட்டைப் பீடித்திருக்கும் பீடை ஐக்கிய தேசிய கட்சி.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்திய ரணிலின் மாமனார் ஜே.ஆர்.ஜயவர்தனவே காரணமாவார்.

ரணில் சிஸ்டம் சேஞ்ச் ஐக் கோருகிறார். அதனால் தான் எம்மீது கைவைக்கத் துணிந்திருக்கிறார்.

இதற்கான விலையை ரணில் தந்தே ஆகவேண்டும். இந்த கொடூரகோமாளிகள் பொது இடங்களுக்கு வர முடியாதபடி மக்கள் பாடம் புகட்டுவர்.

கீழே நேற்று ராணுவத்தினரால் தாக்கப்பட்டு முதலுதவி பெற்றுக்கொண்டு போராட்ட களத்திற்கு திரும்பும் எமது வீரர்.

நிராயுதபாணிகளிடம் ஆயுதத்தோடு ஆயிரம் இராணுவ வீரர்கள் தாக்குவதா வீரம்?
இதோ இதுதான் வீரம்.
மக்கள்போராட்டம்வெல்லட்டும்.

000

22.07.2022
கோல்பேஸ் போராட்டக்காரர்கள் மீதான மிலேச்ச தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின்- அரசியல் குழு.

************

மக்களின் கோரிக்கைகளையும் ஜனநாயகத்தையும் எட்டி உதைத்துவிட்டு பாராளுமன்றத்தில் திருட்டு ஜனநாயக விரோத கும்பலால் ரணில் விக்ரமசிங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ராஜபக்ச குடும்பத்தினதும் நவத்தாராளவாதத்தின் பாதுகாவலனாக ரணில் விக்கிரமசிங்க பதவி பிரமாணம் செய்து 24 மணிநேரம் கடப்பதற்கு முன் 104 நாட்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த அமைதிவழி போராட்டத்தின் மீது தனது பாசிச ஏதேச்சதிகாரத்தை பிரயோகித்திருக்கிறார்.

இன்று விடிய ரணில் விக்ரமசிங்கவின் ஏவலின் பேரில் அரசபடை மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டு இருக்கிறது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் பலாத்காரமாக அகற்றப்பட்டு பல போராட்டகாரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த கொடுர தாக்குதலை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அத்தோடு கைதுச் செய்யப்பட்டுள்ள அனைவரும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது. அதேவேளை மக்களால் நிராகரிக்கப்பட்டு பின்கதவு வழியாக பதவிக்கு வந்த ரணில் இந்த அராஜக நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் இல்லை ஏனில் அதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

எனவே இந்த நேரத்தில் ஜனநாயக விரோத ஏதேச்சதிகார ரணில் விக்ரமசிங்கவை விரட்டியடிக்கவும் போராட்டகாரர்கள் மீதான தாக்குதலுக்கு நியாயம் பெறவும் அனைத்து மக்களும் கடந்த 9ம் திகதியை போன்று வீதிக்கிறங்கி போராட வேண்டும் மக்களின் ஆணையில்லாத அதிகார வெறிக்கொண்ட பாசிச ரணிலை விரட்டியடிக்க ஒன்றிணைந்து போராடுவோம் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் அரசியல் குழு சார்பாக தேசிய அமைப்பாளர்  வெ.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மோகனா தர்ஷினி முகநூல் பதிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here