உலக வர்த்தகக் கழகத்திலிருந்து வெளியேற இதுவே சரியான தருணம்!!


மீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற உலக வர்த்தகக் கழக (World Trade Organization) உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மத்தியிலான மாநாட்டில் விவாதிக்கப்படவேண்டியவை என முன்வைக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலிலேயே தெரிந்துவிட்டது உலக வர்த்தகக் கழகம் என்பது முற்றும் முழுதாக வளர்ந்த நாடுகளின் ஒரு ரெக்ரேஷன் கிளப். பின்தங்கிய நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்துவிட்டால் கடைசியில் அவைகள் தாம் சமமில்லாத ஆடுகளத்தில் தோல்வியாளர்களாக ஆகிவிடுவர்.

தடையற்ற வர்த்தகத்தின் மூலம் ஒப்பீட்டளவிலான லாபங்களை ஈட்டலாம் என்ற நப்பாசையில் 1995-ம் ஆண்டு இந்தியா பல்வேறு தரப்புகளின் எதிர்ப்புக்கு இடையில் உலக வர்த்தகக்கழகத்தில் இணைந்தது. உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்ததன் மூலம் கிடைத்த ஒப்பீட்டளவிலான லாபம் என்பது பின்னர் பன்னாட்டு கார்ப்பரேட்களுக்கான லாபமாக போய் முடிந்தது.

இந்தியா உலக வர்த்தக கழகத்தில் இணைந்தபோது தன்னுடைய விவசாயிகளுக்கு வெளிநாட்டு சந்தையும், ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும், அதன்மூலம் கூடுதலான லாபமும் கிடைக்கும் என உறுதி அளித்தது. அதற்கு மாறாக WTO-ல் இணைந்து 25 ஆண்டுகளுக்கு பின்னரும் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுதான் நடந்து வருகிறது. 2019-ஆம் ஆண்டு மட்டுமே ஏறக்குறைய 10,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமல்லாது பல்வேறு வளர்ந்த நாடுகள் இந்தியாவின் மீது பல வகைகளில் குறுக்கு பதிலடி நடவடிக்கைகள் மூலம் உலக வர்த்தகக்கழகத்தில் வழக்குகள் தொடுத்து வருகின்றன. அமெரிக்கா கோதுமை மற்றும் அரிசிக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை எதிர்த்தும், ஆஸ்திரேலியா பருப்பு இறக்குமதிக்கான வரம்பு குறித்தும், பிரேசில் கரும்புக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை எதிர்த்தும், மற்றும் ரஷ்யா, கனடா போன்ற நாடுகள் பருப்பு இறக்குமதிக்கான இந்தியாவின் கொள்கைகள் குறித்தும் வழக்குகளை உலக வர்த்தக கழகத்தில் பதிவு செய்துள்ளன.

ஏற்கனவே ஏற்றுமதி இறக்குமதிக்கான அளவுக்கட்டுப்பாடு தொடர்பான வழக்கில் இந்தியா தோற்றபின்னர், அக்கொள்கையை இந்தியா விலக்க வேண்டியிருந்தது. அந்நாடுகள் தொடர்ந்துள்ள வழக்குகளில் இந்தியா தோற்கும் பட்சத்தில் இந்தியா விவசாய விளைபொருள்களுக்கு அளித்துவரும் குறைந்தபட்ச ஆதார விலையை(MSP) உடனடியாக நிறுத்த வேண்டியிருக்கும். இது கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வை சூறையாடும் உலக வர்த்தகக் கழகத்தின் சதியாகும். விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 1986-88ஆம் ஆண்டு விலைவாசி அடிப்படையில் இந்தியா நிர்ணயிக்க உலக வர்த்தகக் கழகம் வலியுறுத்துகிறது. அப்படிப்பார்த்தால் நமது விவசாயிகளுக்கு கிடைக்கப்போகும் குறைந்த பட்ச ஆதார விலை என்பது கிட்டத்தட்ட (“0”) பூஜ்ஜியம்தான். அதைப்போன்றே மீனவர்களுக்காக மானியங்களையும் நிறுத்துமாறு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்ததன் மூலம் இந்தியாவிற்கு எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கவில்லை. மாறாக, இந்தியா போன்ற வளரும் மற்றும் குறை வளர்ச்சியுள்ள நாடுகளை சுரண்டிக் கொழுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்குதான் நன்மை கிடைத்துள்ளது.

உலக வர்த்தகக் கழகத்தின் இத்தகைய மிரட்டல் தொடருமானால் பாதிக்கப்பட்ட நாடுகள் உலக வர்த்தக கழகத்தில் இருந்து வெளியேறுவதுதான் சரியாக இருக்கும்.

உலக வர்த்தகக் கழகத்தின் இத்தகைய மிரட்டல் தொடருமானால் பாதிக்கப்பட்ட நாடுகள் உலக வர்த்தக கழகத்தில் இருந்து வெளியேறுவதுதான் சரியாக இருக்கும். அதன் மூலம் மட்டுமே தன் சொந்த நாட்டு இயற்கை வளங்களையும், விவசாயத்தையும், மக்களையும் அவைகள் தற்காத்துக்கொள்ள முடியும்.

வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பல்வேறு மானியங்களை வழங்கிவருவதுடன், அவைகளை வருடந்தோறும் உயர்த்திக் கொண்டே வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இத்தகைய மானியங்களை வளரும் நாடுகளும், குறைவளர்ச்சி நாடுகளும் தங்களுடைய மக்களுக்கு அளிக்கக் கூடாது எனவும் ரேஷன் கடைகள் உடனடியாக மூடுமாறும் உலக வர்த்தகக் கழகத்தின் மூலமாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

உலக வர்த்தகக் கழகத்தின் மிரட்டலுக்கும் அழுத்தத்துக்கும் உட்பட்டு விட்டால் உணவுப்பொருள் உற்பத்தி அனைத்தும் ஒரு சில பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்கு சென்றுவிடும். நவீன தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைந்துள்ள ஏகாதிபத்திய நாடுகள் அதிநவீன மீன்பிடி கப்பல்கள் மூலம் நமது கடல்களையும் ஒட்டச்சுரண்ட வழிவகுக்கும்.

நமது இயற்கைவளங்களும், கனிம வளங்களும், கடல்களும் சூறையாடப்பட்டு லாபம் அதிகம் கிடைக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். அதன்மூலம் பிரிட்டிஷ் அரசால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சங்களை போன்று மீண்டும் பஞ்சம், பட்டினிச்சாவுகள் நடக்கும்.

உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுப்படி தொழிற்துறை பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபிறகு இந்தியச் சந்தைகளில் வெளிநாட்டுப்பொருட்கள் குவிந்து உள்ளூர் தொழில்களை அழித்துவிட்டன. தற்போதைய பா.ஜ.க. அரசு உணவுத்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைய அனுமதி அளித்துள்ளது. அமேசான் நிறுவனம் உணவு துறையில் நுழைந்துவிட்டது. சப்வே (Subway) என்ற அமெரிக்க கம்பெனியும் இப்போது இட்லி-வடையை விற்கஆரம்பித்துவிட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் வால்மார்ட் (Walmart) நிறுவனமும் நமது உணவு சந்தையில் நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இவையனைத்தும் நமது நாட்டின் சிறு, குறு வியாபாரிகளை பாதிக்கக்கூடியதாகும். அரசின் முடிவுகளை நாம் மாற்றிக்கொள்ள முடியும் என்றாலும், உலக வர்த்தகக் கழகத்தின் E-commerce ஒப்பந்தம் அதைத் தடுக்கும். ஆகையால் உலக வர்த்தகக் கழகத்திலிருந்து வெளியேற நினைக்கும் மற்ற நாடுகளையும் இந்தியா ஒன்றிணைத்துத் கொண்டு உலக வர்த்தகக் கழகத்தின் மரகேஷ் ஒப்பந்தத்தின்படி அதிலிருந்து வெளியேற வேண்டும்.

இதுவே நமது நாட்டு விவசாயிகள், மீனவர்கள், மற்றும் சிறு குறு வியாபாரிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக இருக்கும். அதுமட்டுமல்லாது ஏழை நாடுகளுக்கு தைரியம் ஊட்டும் நடவடிக்கையாகவும் அமையும்.

தமிழில்: செந்தழல்

(சுருக்கப்பட்டது)

ஆங்கிலத்தில்:
K V Biju, All India Organising Secretary, Swadeshi Andolan. National Coordinator, Rashtriya Kisan Mahasangh.

6 COMMENTS

  1. தோழர்களுக்கு வணக்கம் உலக வர்த்தக கழகம் பற்றிய இக்கட்டுரை சிறப்பாக உள்ளது ஆனால் முழுமை பெற வில்லை. எந்த காரணத்திற்காக வெளியேற வேண்டும் என்ன மிரட்டுகிறது போன்ற விவரங்கள் தெளிவாக இல்லை. இக்கட்டுரை விரிவாக போடுங்கள் தோழர்

  2. இக்கட்டுரையை முழுமையாக மொழிமாற்றம் செய்து வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். இதில் குறிப்பிட்டுள்ள மற்ற நாடுகள் பற்றிய விவரங்களையும் வெளியிட்டால் சரியாக இருக்கும்.

  3. தோழரே,

    ” மரகேஷ் ஒப்பந்தம் “

    ” ரெக்ரேஷன் கிளப் ” ஆகியவற்றிற்கு விளக்கம் தேவை.

    • பங்குபெறும் நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் அரசியல் உறவுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் 1995 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி WTO நிறுவப்பட்டது. இது 1947 இல் முடிவடைந்த கட்டணங்கள் மற்றும் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தத்தின் (GATT) அடிப்படையில் உருவாக்கப்பட்டது. உலக வர்த்தக அமைப்பின் உருவாக்கத்தின் வரலாற்று உண்மை ஏப்ரல் 1994 இல் மராகேஷ் (நாடு-மொராக்கோ) நகரில் நடந்தது. இதன் விளைவாக, பொதுவான வர்த்தக விதிகளை உருவாக்குவதற்கான நாடுகளின் ஒப்பந்தம் “மராகேஷ் ஒப்பந்தம்” என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், அமைப்பின் செயல்பாடுகள் தொடங்கும் தேதி ஜனவரி 01, 1995, எனவே இந்த தேதி உருவாக்கப்பட்ட தேதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here