புஷ்பா 2 வெற்றியும், பாசிச கும்பலின் உள்நோக்கமும்!

புஷ்பா 2வின் புல்லட் வேக பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை எப்படி இருந்தது என ரசிகர்கள் #PUSHPA2HitsFastest1000Cr ஹாஷ்டேக்கை டிரெண்டு செய்து வருகின்றனர்.

ந்தியாவில் 1947 க்கு பிறகு நிலவி வந்த போலி ஜனநாயக அரசு கட்டமைப்பானது அதன் இயல்பிலேயே பல மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டது என்பதைப் பற்றியும், அது தோற்றுவிக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக செயல்படுகிறது என்பதைப் பற்றியும் அவதானித்து 2015 ஆம் ஆண்டு நிலவுகின்ற அரசு கட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது என்பதுதான் நாட்டை பாதிக்கின்ற அரசியல், பொருளாதார, பண்பாட்டு பிரச்சனையாக என முன் வைத்திருந்தோம்.

’ஆள அருகதை இழந்த அரசு கட்டமைப்பு’ மக்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது என்பது மட்டுமின்றி தான் முன்வைத்த போலி ஜனநாயக வழிமுறைகள், விழுமியங்கள் ஆகியவற்றுக்கு எதிராக மாறி செயல்படத் துவங்கியுள்ளது என்றும் முன் வைத்திருந்தோம்.

’ஆள அருகதை இழந்த அரசு கட்டமைப்புக்கு’ மாற்றாக கீழிருந்து அதிகாரத்தை கைப்பற்றுகின்ற வழிமுறையாக மக்கள் அதிகாரம் என்பதை முன்வைத்து செயல்பட்டு வந்தோம். நாடு தழுவிய அளவில் இந்த அரசியல் முழக்கம் மற்றும் அமைப்பு வடிவம் கொண்டு செல்லப்படவில்லை. அதே சமயத்தில் தோல்வியடைந்த அரசு கட்டமைப்பு போலி ஜனநாயக வடிவத்தையும், அதுவே முன் வைத்த விழுமியங்களையும் தூக்கி எறிந்து விட்டு அப்பட்டமான, அம்மணமான பாசிச சர்வாதிகாரத்தை நிறுவத் தொடங்கியுள்ளது.

இதன் விளைவாக தற்போதைய நிலைமையில் பாராளுமன்ற அமைப்பு முறைக்குள் அரசியல் கட்சிகள், அதுவும் குறிப்பாக ஆர்எஸ்எஸ் பாஜவுக்கு எதிராக செயல்படுகின்ற அரசியல் கட்சிகள் தேர்வு செய்யப்பட்டாலும், அவர்கள் மக்களின் பிரச்சனைகளை பற்றியோ, நாட்டை பாதிக்கின்ற அரசியல், பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சனைகளைப் பற்றியோ பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

எடுத்துக்காட்டாக அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டு பற்றியும், மணிப்பூரில் பற்றி எரிகின்ற மெய்தி-குக்கி இன மக்களுக்கு இடையிலான மோதல்கள் பற்றியும், வர்த்தகர்களை ஒழிக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு கொள்ளைகள் பற்றியும் விவாதிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இதெல்லாம் தான் நாட்டை பாதிக்கின்ற உண்மையான பிரச்சனைகள், தங்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான பிரச்சனைகளை விவாதித்து தீர்வு காண்பார்கள் என்று தான் மக்கள் நம்பி கொண்டு இருக்கிறார்கள்.


படிக்க: கார்ப்பரேட்டுகளின் பிடியில் சினிமா! ரசிகனின் தலையை தடவும் நடிகர்கள்!


பாராளுமன்றத்திற்குள் விவாதம் நடப்பதற்கு அல்லது விவாதத்தை நடத்துவதற்கு பாசிச பாஜக அனுமதி மறுப்பது மட்டுமின்றி சமகாலத்தில் பண்பாட்டு ரீதியாக மக்களின் மூளையை சலவை செய்வதற்கு பொருத்தமான திரைப்படங்களை அவ்வப்போது இறக்கி விட்டுக் கொண்டிருக்கிறது.

ராஜபுத்திர மன்னர்களின் ஆட்சியில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது மக்கள் கொந்தளிப்பில் ஈடுபட்டனர் என்பதால் ரஜபுத்திர மன்னர்களுக்கு ஆலோசனை கூறிய சாணக்கியன், ’மக்களின் வயிறு காலியாக இருப்பதைப் பற்றி கவலைப்படாதே! அவர்கள் மூளை காலியாக இருப்பது தான் ஆபத்து! அதில் இராமாயணம், மகாபாரதம் போன்ற கட்டுக்கதைகளை இட்டு நிரப்பி வை” என்று வழிகாட்டியதைப் போல இன்று வரை அரசியல் சாணக்கியர்கள் ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.

இதன் விளைவு எப்போதும் தன்னைப் பற்றியே சிந்திக்கும் பாசிச உளவியலை பெருக்கும் திரைப்படங்கள் வெளியாகி மக்களின் மூளையை சலவை செய்வது மட்டுமின்றி உண்மையான பிரச்சினைகளைப் பற்றி சிந்திப்பதற்கு வழியின்றி தடுத்தும் நிறுத்துகிறது.

அதைத்தான் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் வெற்றியின் மூலம் பார்க்கின்றோம்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் வெறும் ஆறு நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய ‘சாதனையை’ படைத்துள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை வெளியான எந்த ஒரு படமும் முதல் வாரத்திலேயே ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனையை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கே ஜி எஃப் 2, ஜவான், பதான், தங்கல் மற்றும் இந்த ஆண்டு வெளியான கல்கி 2898 ஏடி என இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த படங்கள் எத்தனை நாட்களில் வசூல் செய்தன என்றும், புஷ்பா 2வின் புல்லட் வேக பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை எப்படி இருந்தது என ரசிகர்கள் #PUSHPA2HitsFastest1000Cr ஹாஷ்டேக்கை டிரெண்டு செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆட்பட்டு துன்புற்றுக் கொண்டிருக்கும் வேளையில் மக்களின் சேமிப்பு பணத்தையும், அவர்கள் அன்றாடம் உழைத்து சம்பாதிக்கின்ற பணத்தையும் இதுபோன்ற திரைப்படங்களின் மூலம் பறிப்பது மட்டுமின்றி சமகாலத்தில் நடக்கின்ற அரசியல், பொருளாதார, பண்பாட்டு பிரச்சனைகளை பற்றி முகம் மூடிக்கொண்டு, காதை மூடிக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு மூன்று குரங்கு பொம்மைகளைப் போல உலா வருவதற்கு கற்றுத் தருகிறார்கள்.


படிக்க: பாலியல் வக்கிரவெறியில் திளைத்து நிற்கும் சினிமா கழிசடைகளை எவ்வாறு தண்டிப்பது?


சினிமா மற்றும் கிரிக்கெட் இரண்டும் இந்தியாவின் பெரும்பான்மை மக்களாக உள்ள இளைய தலைமுறையை சீரழித்து வருகிறது என்பதும் அரசியல் ரீதியாக பாசிசம் அது தொடுத்து வரும் பயங்கரவாதம் அதற்கு எதிராக செயல்படுகின்ற கம்யூனிச இயக்கங்கள் அவை முன்வைக்கின்ற ஜனநாயக கூட்டரசு போன்றவற்றை பற்றி எல்லாம் விவாதங்கள் நடத்துவதற்கு பெரும் தடையாக உள்ளது என்பதே தற்போதைய நிலைமையாக உள்ளது.

இதனைப் புரிந்து கொண்டு பொருத்தமான வழிமுறைகளை கையாண்டு பெரும்பான்மை மக்களை இப்படிப்பட்ட மாயைகளில் இருந்து விடுவிக்க தொடர்ந்து போராடுவோம்.

  • பார்த்தசாரதி.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

2 COMMENTS

  1. அமரன் திரைப்படம் ஒரு வகையில் மக்களின் மூளையை மழுங்கடித்தது என்றால், தற்போது புஷ்பா 2 திரைப்படம் அதைவிட இன்னொரு படி மேல் சென்று மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு மூல காரணம் எதுவென்று அறியா வண்ணம் மூடி மறைக்க பலவண்ண காட்சிகளை அரங்கேற்றி அடி முட்டாள்தனமான பிற்போக்குத்தனமான கருத்துக்களை மக்களின் மண்டையிலே ஏற்றி பாசிச ஆர் எஸ் எஸ் பாஜக கூட்டத்திற்கு பெரும் சேவை புரிகிறது என்பதனை கட்டுரை சுருக்கமாக இருப்பினும் தெள்ளத் தெளிவாக எடுத்துக்
    காட்டுகிறது.

  2. கல்லாக்கட்டும் கார்ப்பரேட்டுகளிடம் இருந்தும். மக்களின் மூளை சலவை செய்யும் காவிகளிடம் இருந்தும். குறிப்பாக இளைஞர்களை சிந்திக்க வைப்பது நம் கடமை என உணரச் செய்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here